Pages

Friday, May 28, 2010

அன்பாலே தேடிய என் ...






திண்ணை
ooo ooo ooo ooo
Main Sectionsமுகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்

PRINTER FRIENDLY
EMAIL TO A FRIEND
Sunday May 23, 2010
அன்பாலே தேடிய என்…
பாரதிதேவராஜ்
“திங்கட் கிழமை பாக்கலாம்; சீ..” பஸ்ஸைவிட்டு இறங்;கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய்விட்டது. பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந் தார் சட்டென்று,
“என்ன தாரணி மேடம்.”
“அட அதெப்படி நாந்தான்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?”
“:மேடம் எனக்கு கண்ணு மட்டும்தான் பாக்க முடியாதே தவிர மத்த எல்லா பாகங்களும் உங்களவிட டபுளாவேலை செய்யும் ஒரு குரலெ ஒருதடவை கேட்டாலே ஆழமா பதிவாயிடும் அடுத்தமுறை அந்தக் குரலை கேட்டவுடனே இன்னார் தான்னு தெரிஞ்சுடும்.”
“சூப்பர்!” தாரணி கலகலவென்று சிரித்தாள்.
“சரி இன்னிக்கு சனிக்கிழமை. ஆபிஸ்லெ வேலையிருக்கோ?”
“இல்லே கண்ணுசாமி பேங்க வரைக்கும் போகணும்.”
“அப்ப சவுகர்யமா போச்சு. நானும் அங்கதான் போகணும். கூட்டிட்டு போறீங்களா?”
“ஓயெஸ் போலாமே.”
“என்ன பேங்கலே பணம் எடுக்கணுமா?”
“இல்லே கண்ணுசாமி. ஒரு லோன் விசயமா மானேஜரப் பாக்கணும்.”
“சாரி மேடம்.உங்களுக்கெதுக்கு லோன்?”
“அட.நா என்ன அவ்வளவு பெரிய ஆளா. வீட்லே வரன் பாத்துட்டிருக்காங்க. திடீர்னுமுடிவாயிட்டா பணம் தேவைப்படுமே. அதுக்கோசரம்தான் அட்வான்சா கேட்டு
வைப்போமேன்னு.”
“வாழ்த்துகள் மேடம். மணி என்னாச்சு?.”
“ஒம்பதரை ஆறது.”
“இன்னும் அரைமணி நேரமிருக்கே பேங்க் தெரக்கறதுக்கு.”
“ஆமா கண்ணுசாமி. ஆபிஸ் பக்கந்தானே அங்கே போய் கொஞ்சநேரம் இருந்துட்டுபோனா சரியாயிடும்.”
“அதுவும் சரிதான். ஆபிஸ் இன்னிக்கி தொறந்திருக்குமில்லே?”
“ஜி.எம் வருவாரு ப்யுன்நடராஜன்கூட வந்திருப்பார்.”
2
“அப்ப நடராஜ் கையாலே காப்பி சாப்பிட்டு போலங்கறீங்க.சாpபோயிடலாம்.”
தாரணிக்கு இந்த வைகாசியோடு இருபத்தைந்து முடிகிறது. நல்லசிவந்த உடல்.கட்டான தேகம். எவரையும் வசிகரிக்கும் தன்மை.
ஆபிஸ் வந்துவிட்டது.
“அடடே கண்ணுசாமி. வாங்க இந்தப் பொண்ண எங்க புடுச்சீங்க”
“என்ன நடராஜன் சார் பேங்க் போலாம்னு புறப்பட்டேன். ஊர்லேருந்து பஸ்ஸப்புடுச்சு காலேஜ் பஸ் ஸ்டாப்பில வந்து இறங்கிட்டேன்.ரோட கிராஸ் பண்ணலாம்னு நின்னுட்டிருந்தப்ப தாரணி மேடம் வந்தாங்க. அவங்களும் பேங்குக்குத்தான் போறேன் னாங்க அது சாpன்னு வந்தேன். மணி ஒம்பதரைதான் ஆச்சு.கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்னு ரெண்டுபேரும் வந்தோம்.”
“பாரப்பா அவனவன் ஆபிஸ்லே வேலை செய்யறதுக்கு வந்தா நீங்க ரெஸ்ட் எடுக்க வர்றீங்க. காபி சாப்பிடறிங்களா?”
“அப்புறம் அதுக்குத்தான் வந்திருக்கோம். போயிட்டு சீக்கரமா வாங்க.”
காசை பர்சிலிருந்துஎடுக்கப்போனார்கண்ணுசாமி.அதற்குள் தாரணியே கொடுத்தனுப்பினாள்
“கண்ணுசாமி உங்களுக்கு பொறந்ததிலிருந்தே கண் தொpயாதா?”
“பொறந்தப்பல்லாம் கண்ணு நல்லாதான் தெரிஞ்சது. மூணாவது படிக்கற வரைக்கும் கண்ணு தொpஞசுட்டுதான் இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கப்புறம் விஷக்காய்ச் சல் மாதிhp வந்துச்சு. கண்ணு அப்ப நீலநிறமா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. அந்த நேரத்திலே புளியங்கா அடிக்க எவனே வீசின கல்லு என் கண்ணுலேபட்டு காயமாயிடுச்சு. ஆஸ்பத்திரிககு போகாம எண்ணெயக்காய்ச்சி கண்ணுலே விட்டாங்க. அப்புறம் கொஞ்சமா தெரிஞ்ச பார்வையும் சுத்தமா போயிடுச்சு. அப்புறம் நா பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.நா இருக்கிறது கிராமந்தானே கக்கூஸ் வசதியெல்லாம் கிடையாது. ஊருக்குவெளியே காட்டுக்குள்ளதான் போகணும். கண்ணுதொpயாத நா தனியா போகமுடியாது. தம்பிதான் கூட்டிட்டு போகணும்.. அவம்பண்ற அட்டூழியம் சொல்லித்தீராது.சோறுபோடற அம்மா ஒருபக்கம் செத்துப்போற மாதிhp பேசுவா. தம்பிஒருபக்கம் இதனால சாப்பிடறதயே நிறுத்திட்டு தண்ணியக்குடிச்சுடே காலத்த ஓட்னே. வாரத்துக்கொருதாட்டி அப்பா டவுன்லேந்து வருவாரு. அவருதான் எனக்கு அனுசரணையா நடந்துப்பாரு. கொஞ்சநாள் அவரால சகிக்க முடியாம கிருஸ்டியன் ஹாஸ் டல்ல சேத்தாரு.
அங்கதான் பத்தாவது வரைக்கு படிச்சேன் சேர் பின்ற தொழிலகத்துக்கொடுத் தாங்க. பொpய பொpய ஆபிஸ்லே வேலைகிடைச்சது என்னமாதிரி இருக்கறவங்களவச்சு காண்டராக்ட் எடுத்து செய்யறேன் ஏதோ ஒரளவுக்கு வசதியா இருக்கேன். இப்ப வீட்லே
3
தாங்குதாங்குன்னு தாங்கறாங்க. ஆனா அது எனக்கு இஷ்டமில்லை. உங்களமாதிரி நாலு நல்ல சனங்ககூட பழகறதே மனசுக்கு நிம்மதி தருது. அதுசரி என்றகத பெரிசு அது இன்னக்கி தீராது.நடராசண்ணே வந்தாச்சுபோலிருக்கு காபி மணக்குதுங்க தாரணி மேடம்”
“ஆமா சாப்பிடுங்க.மணி பத்தரையாச்சு புறப்படலாம்.”
00000
பாங்கில் ஏகப்பட்ட கூட்டம். தாரணி,
“கண்ணுசாமி உங்களுக்கென்ன பணமெடுக்கணுமா?”
“இல்ல மேடம்.பாஸ்புக் என்ட்ரி போடணும். நா பாத்துக்கிறேன். நீங்க மானேஜரப் பாத்துட்டுவாங்க.”
தாரணி மானேஜர் அறைக்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் வெளியே வந்தாள். கண்ணுசாமி பாஸ்புக் என்ட்ரியை போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்திருந்தார்.
“கண்ணுசாமி போகலாமா?”
“என்ன மேடம் அதுக்குள்ள வேலைமுடிஞ்சிடுச்சா?”
“இல்லே கண்ணுசாமி. மானேஜர் ரொம்ப பிஸியாம்.அடுத்தவாரம் வரச்சொன்னார்” அதே சமயம் தாரணி ஹேண்ட் பேக்கில் செல்போன் அழைத்தது.
“ஹலோ”
“நா அம்மா பேசறேன். அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலிக்குதுன்னார். சரவணா ஆஸ்பத்திரியிலே சேத்திருக்கோம.; நீ உடனே புறப்பட்டுவா.”
“கண்ணுசாமி அப்பாவுக்கு உடம்பு முடியல்லே.ஆஸ்பத்திரிலே சேத்திருக்கா” நா புறப்படட்டுமா?”
“ மேடம் உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா,நானும்கூட வரட்டுமா ஒரு ஆட்டோ புடுச்சு போயிரலாமா?”-என்று கண்ணுசாமி கேட்கவும்,தாரணிக்கு என்ன செய்வ தென்று தொpயவில்லை. ஆஸ்பத்திரி பக்கம்தான் இருந்தாலும் இவர் எதற்கு. இவரைபாக்கவே ஒரு ஆள் வேணும். இவர் வந்து என்ன செய்யப் போகிறார். இருந்தாலும் அவளது உள் மனசு அவரை அழைத்துப் போக அனுமதிக்கவே,
“சரி வாங்க.” என்று ஒருஆட்டோவைப் பிடித்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள்.
வாசலில் தாரணியின் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தனர்.
“அக்கா அப்பாவ ஐசியுலே அட்மிட் பண்ணியிருக்கா உடனே இருவத்தையாயிரம் கட்டணும்றா என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல்லே. நம்மகிட்டே காசே கிடையாது. உன்னட நகை ஏதாச்சு வச்சு பணம் ஏற்பாடு பண்ணலாமாக்கா.”
4
“என்னோட நகைய வச்சாக்கூட அவ்வளவு தேறாதே. உள்ளே அப்பாவ பாக்கமுடியுமா?”
“இல்லக்கா யாரையும் பாக்க அலவ் பண்ணமாட்டா.”
“கண்ணுசாமி அப்பாவ ஐசியுலே வச்சிருக்கங்களாம். யாரையும் உள்ள அனுமதிக்கமாட்டாங்களாம் நீங்க எப்படி. இங்கிருந்து ஏழுலே போய் காந்திபுரத்திலே இறங்கிஅங்கிருந்து செம்மேட்டு பஸ் புடுச்சு ஊருக்குப் போயிடுவீங்களா?”
“மேடம் தப்பா நெனச்சுக்காதீங்க பணம் ஏதோ வேணும்னு சொன்னமாதிhp கேட்டுச்சு. எவ்வளவு வேணும்னு தெரிஞ்சா நா ஏதாவது உதவி பண்ணலாம் இல்லையா?”
“அவ்வளவு பணம் உங்க கிட்ட இருக்குமா? இருபத்தஞ்சாயிரம் வேணுமா. இன்னும் எவ்வளவு தேவைப்படுமோ தெரியல்லே. பேசாம ஜி.எச் சுக்குப் போயிர்லாமான்னு யோசனை பண்றேன்.”
“மேடம் இந்த ஹேண்ட் பேக்க வாங்கிக்கங்க. அதிலே அம்பதாயிரம் இருக்கு. என் தம்பி கல்யாணத்துக்காக எடுத்தேன் அதவிட இதுதான் முக்கியம். இன்னும்
வேணாலும் பாங்க்லே இருக்கு எடுத்துக்கலாம் நீங்க ஆஸ்பத்திhpக்கு எவ்வளவு பணம் கட்டணும்னு பாத்து கட்டுங்க.”
தாரணிக்கு பொட்டில் அறைந்த மாதிரி கிருகிருத்துப் போனது. எதை நம்பி எதற்காக கொடுக்கிறார்.
“ மேடம் நீங்க எந்த யோசனையும் பண்ணவேண்டாம் நா எந்த எதிர்பார்ப்பு லேயும் இதைகொடுக்கலே. மனிதாபிமானம்தான் உங்களுக்கு உதவரதுக்கு இப்ப எங்கிட்ட இருக்கே அதுக்காக கடவுளுக்குதான் நன்றி சொல்லணும். எடுத்துக்கங்க.”
00000
பத்து நாட்களில் அப்பா தேறி வீடு வந்து சேர்ந்தார். தாரணியை பெண் பார்த்து விட்டுப் போனவர்கள் அப்பா நிலையால் ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆகிட்டால் அப்புறம் சீர்செனத்தியெல்லாம் யார் செய்வார்கள். அதற்காக ஒருலட்ச ரூபாய் முதலில் கொடுத்துவிட வேண்டும் என்று கண்டிசன் போட்டார்கள் இப்போதை நிலையில் கல்யாணம் செய்யவே முடியாத நிலை. அப்பாவின் உடல் தேறவே அங்கே இங்கே என்று கடனை வாங்கி இருக்கிற நகையெல்லாம் பாங்கில் வைத்து அப்பாவை பிழைக்க வைக்க வேண்டியிருந்தது. கடைசியில் எங்களால் இப்போதைக்கு முடியாது. நீங்கள் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டாள்.
மாலைமணி நான்கிருக்கும். பத்துநாள் அலைந்த களைப்பில் எல்லோரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.கதவை தட்டும் ஓசை கேட்டது,
5
தாரணிதான் கதவைத் திறந்தாள். கண்ணுசாமியும் அவர் அப்பாவும் நின்று கொண்டிருந்தனர். தாரணியின் மனசுக்கு இதமாயிருந்தது.
“வாங்க கண்ணுசாமி .அப்பாவா?”
“ஆமாம்மா.”
அப்பாவைப் பார்த்து ஒரு கூடை பழங்களை எடுத்து வைத்தார்கள்.
கண்ணுசாமிக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே தெரியவில்லை. அன்றுமட்டும் அவர் பணம் கொடுத்துதவவில்லை என்றால் அப்பா பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. அதுமட்டுமா அன்றுமுழுக்க ஆஸ்பத்திரி வாசலிலே காத்திருந்து விசாரித்துக்கொண்டே யிருந்தார். இந்த பத்துநாளும் தினமும் ஒருமுறையேனும் வந்து விசாரித்துவிட்டு செல்வார். அவருடைய அப்பா தன் அப்பாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
“எம் பையனுக்கு கண்ணுதா குருடா போச்சு. வேறே எல்லாம் சம்பாரிச்சுட்டான். ஒருகல்யாணத்தையும் பண்ணவேண்டியது என்கடமை. ஆனா பார்வையில் லாதவனுக்கு யார் பொண்ணு தருவா. எந்தப்பொண் கட்டிக்க வருவா?”
-தாரணியின் மனசு சட்டென்று முடிவெடுத்தது,
“அப்பா அவங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா நான் அவரை ஏத்துக்கறேன். உங்களுக்கு பணஉதவி செஞ்சதுக்குமட்டுமில்லே அவரை முன்னாடியே மனசுலே விரும்பிட்டுதான் இருந்தேன்.சரியா கண்ணு. ..சாரி சரிங்களா?
“சரிதான்.” என்பதுபோல கண்ணுசாமியும் ஆமோதித்தான் மனதுள் அவள்மேல் ஒருதலைக் காதலாயிருந்தது இவ்வளவு விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
-00000-
Copyright:thinnai.com 

Sunday May 23, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.

Friday, May 21, 2010

சிறுகதை

சிறுகதை 1
ராத்திரிக்கு?... நான்கு நாட்களாய் விடாது பெய்த மழையில் ஊரே தண்ணிரில் மிதந்தது. சாய்ங்காலம் லேசாய் ஒரு வெட்டாப்பு விட்டபோதுதான் அநத சேதி கிடைத்தது. “என்ன செல்லா எண்ணையூத்தரானாக்கும்?” என்று யாரோ கூவி யது யார் என்றுகூடநிமிர்ந்து பார்க்காத செல்லாவும் அவள் மகள் சின்னியும் ஆளுக்கு இரண்டு மண்ணெண்ணை டின்களை எடுத்துக் கொண்டு ஓடியபடியே
“ஆமாமுங்கோய் எண்ணதா ஊத்தறானா. இநத ஊத்தாத மழை யிலே இவனுக்கென்ன கொள்ளையோ?” பதில் சொன்னாள் செல்லா
நல்லவேளை குட்டைமேட்டில் நின்ற ரேசன் கடையில் கூட்டம் குறைவாக இருந்தது.
“தேய், சட்டுன்னு டின்னுகளை லைன்லே வை. தோ நா பில்லு போட்டு வந்தர்றேன்.”
செல்லா மகளை லைனில் நிறுத்திவிட்டு பின்புறமாய் போய், அரிசியளக்கும் ரங்கப்பனிடம், “ரங்கண்ணோய்” என்று கெஞ்சும் பாவனையில் முகத்தை வைத்துக்கொண்டு கார;டுகளையும் பணத்தையும் நீட்டினாள்.

2 ரங்கப்பன் அவளை ஒரு பரிதாபத்தோடு பார;த்தான். கிள்ளி விடக் கூட சதையில்லாத மெல்லிய வரண்டதோலும் எலும்புமாய்,கண்களை மட்டும் பெரிதாக வைத்துக்கொண்டு நின்றவளின் தலைக்கு எண்ணையே அவசியமில்லை. என்பதுபோல் பஞ்சுவௌ;ளையாய் நரைத்திருந்தது.
புhர;க்க பாவமாய் இருந்தாலும் ரங்கப்பன் தன் பிகுவை விடாமல், “உனக்கு வேற வேலையே இல்லே? ஏதோ தலைவர; வு+ட்லே குடியிருக்கறயேன்னு பாத்தா இதே பொழப்பா அலையறயே”
“போகட்டும்ராஜா. வு+ட்லே சோறக்கி ரெண்டுநாளாச்சு ஏதோ இதையக் கொண்டுபோய் கொடுத்தா கெடைக்கற அஞசு ரூபாயில அரை வயிராவது சாப்பிடலாம் எனக்கில்லேனாலும் புள்ளைக மயங்கறதுக் கொசற மாச்சும் கொஞ்ம்…” ரங்கப்பனால் அதுக்கு மேலும் ஒன்றும் பேசமுடியவில்லை. “செரி செரி இப்பவே ஒண்ணும் முடியாது. ஆரைமணி நேரம் கழிச்சு வா பாக்கலாம்போ.”
செல்லாளுக்கு உயிர் கைக்குள் வந்த மாதிhp “மகராசந் தலை நாள்லேஆம்பிளப்புள்ளயாவே பெத்துக்க சாமி” என்று வார;த்தைகளை சிந்தி விட்டுமகள்நின்றவரிசைகச்கு வந்தபோது கூட்டம்இன்னும் சேர;ந்திருந்தது சட் டென கவனம் வந்தது போல “சின்னி இஞசினியருட்லே ஒண்ணும் கொடுக்கலையா புள்ள?”தாயின் கேள்வி காதில் விழுந்ததும் தீயைமிதித்தவள்போல்“ஐய்யோஇரும்மா தா இன்னொருவாட்டி இஞ்சினியாவு+ட்டுக்கு போகோணும்.” “எதுக்கடி?”
3 “பழைய சோறு கொஞ்சம் மிச்சமிருக்குன்னு ஒரு போசிலே போட்டுகொ டுத்தாங்க அத நா அங்கயே வச்சுபோட்டு வந்துட்டேன் அந்த பாழாப் போன நாய்கான தின்னுடுமோ என்னவோ?” பயந்து ஓடினாள் மழையில் நனைந்து களிமண் பு+மி வசக் வசக் என்று காலைப் பிடித்தது. பாத்துப்போடி எங்கியாவது உளுந்துகான தொலைக்காதே காலை யிலேவேலைக்கு போகமுடியாது. சம்பாதிக்கறலடசணம் மாத்துதுணிக்கு கூட வழியில்லை. என்று உரக்கக்கூவியவள் அக்கம்பக்கம் தன்னையாராவது பார்க்கிறார்களா என்றுஓரு முறை பார்த்துக்கொண்டாள். அதற்குள் எண்ணை வாங்க பணம் கொடுதத காலனிக்காhp சீதாவும் தோட்டத்து பொன்னியும் “எனன் செல்லா எண்ணெ கிடைக்குமா?” “வாங்கீர்லாம்மா.” “பில் போட்டாச்சா?” என்று தங்கள் பணத்துக்கு பாதுகாப்பு தேடினார்கள். “ ம் பணம் கொடுத்துட்டேன இப்ப ரங்கப்பன் கொண்டாந்து தந்துருவான்.” அவள் சொல்லிக் கெண்டிருந்தபோதே நடையின் பின்பக்கம் நின்ற ரங்கப்பன் “இந்தா செல்லம்மா” அதட்டலுடன் கூவினான்.. “ தோ வந்துட்டேன்” என்றவள் அவர்களைப் பார்த்து “பில்போட்டாச்சும்மா. புத்துநிமிஷத்திலே எண்ணைவாங்கிடலாம்”எனறபடியே ரஙகப்பனைப் பார்க்கப்போனாள். பில்லையும் மிச்சபணத்தையும் வாங்கிக் கொண்டு வந்தபோது சின்னி தன் வற்றல்உடம்பில் பொpதாய் தொpந்த பற்களை மட்டும் காட்டியபடி கெசுவாங்க’புஸ்புஸ்’ என்று மூச்சைவிட்டு “நல்லவேளைம்மா அந்தபாட்டி எடுத்து உள்ளே வச்சிருந்தாங்க இல்லேன்னா இந்நேரம் நாய்தான் சாப்பிபட்டிருக்கும்.”
4 “செரிசெரி என்ன பழையசோறுமட்டும்தானா ஊத்திக்க என்ன தாழ்ந்த குரலில் கேட்டாள் “ஊத்திக்கெல்லாம் ஒண்ணும் கொடுக்கல்ல” சாப்பாடு சேத மில்லா மல் போன சந்தோசத்தில் கொஞசம் சிணுங்கியபடி சொன்னாள். “நீஇங்கே நில்லு நா வீட்டுக்குப்போய் தம்பிக்கு கொஞ்சம் போட் டுட்டு அடம் புடிக்காம தண்ணியெடுத்து அடுப்பப்பத்தவச்சு உலையவை. அதுக்குள்ள எண்ணயக் கொடுத்துட்டு அரிசிய வாங்கிட்டு வந்தர;றேன். இல்லேன்னா எல்லோரும் இன்னிக்கு பட்னிதான் கெடக்கணும்.” தன் சாப்பாட்டு ஆற்றாமையை மகள் கையிலிருந்த போசியை வாங்கிக் கொண்டு போனாள். தூரத்தில் வீட்டுக்கு பக்கம் போகும்போதே கூட்டமாய் நாலைந்து பேர;சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர; வேரென்ன எவனாவது தண்ணியப் போட்டுட்டு ரகளை பண்ணுவானுக.. வேடிக்கை பாக்கறதுக்கு சொல்லவா வேணும். மனதில் வைத்தவளாய் நிமிர;ந்து பார;க்காமல் விடுவிடு வென்று வீட்டுக்குள் நுழைந்தாள். சாப்பாட்டுப் போசியை அடுப்புத் திண்ணைமேல் வைத்துவிட்டு’இவனெங்க போனா’ அடேய் மருது என்று சத்தம் போட்டு குரல் கொடுத்தாள். துhயின் குரலைக் கேட்டதும் முன்னாலிருந்த கூட்டத்திலிருந்து வெளியே வந்தான் மருது.பத்து வயசிருக்கலாம் “அங்கென்னடாபண்ணீட்டிருக்கே?’ “சத்தமேம்மா போடறே நம்ம ஊட்டுக்கார தாத்தா செத்து போயிட்டாரம்மா” செல்லாளுக்கு பகீரென்றது. “நீ என்னடா சொல்றே”என்று அவள் கேட்டதற்குக்கூட பதில்தராமல் “ என்னம்மாது போசியிலே சோறா?”. போசியை திறந்து சோற்றை அள்ள முயன்றான்.

5 அவன்பதில் சொல்லாமல் போனாலும் ஊர; பெண்களின் ஒப்பாரி ஓலம்.அந்த பகுதியையே நிறைத்தது. சோற்றை அள்ளப் போனவனின் கையைப் பிடித்து இழுத்து வந்தாள். வேண்டான்டா எழவு+ட்லே சாப்பிடக்கூடாது. உனக்கு என்னமாச்சும் வாங்கிதர்றேன் .வாப்பா.” “எனக்கென்னும் வேண்டாம் சோறுதான் வேணும் மூணுநாளா இப்படித்தா சொல்லிட்டிருக்கே நா சாப்பிட்டுதாவருவம்போ.” அழுதபடி அவள் பிடியிலிருந்து திமிறினான் உள்ளேஓடிய வேகத்தில் கால்இடறிபோசியி லிருந்த சோறு முச்சு+டும் கீழே சிந்தி மண்ணுக்கிரையானது “வாடா பேசாம” இழுத்துக்கொண்டு தெருவில் இறங்கினாள்
-00000-
இச்சிறுகதையை எழுதியவர் பாரதிதேவராஜ். எம். ஏ,219குடீ மணியகாரர்நகர்வேலாண்டிபாளையம்கோவை. 641025

Monday, May 17, 2010

சிறுகதைகள

சிறுகதை
என்ன தவம் செய்தனை
பொழுதுகிளம்ப வெகுநேரம் இருக்கும் போல இருக்கு. பொன்னுக்குட்டி கிழவ னுக்கு அதற்கு மேல் படுக்கையில் இருப்பு கொள்ளவில்லை. கட்டிலிலிருந்து எழுந்து கொண்டார். துண்டை எடுத்து மேலுக்குப் போட்டுக்கொண்டார்.எரவாரத்தில் சொருகியிருந்த கைத்தடியை உருவிக்கொண்டார். திண்ணையில் கிழவி அசந்துத்தூங்கிக்கொண்டிருந்தாள்
அவளுக்கு சமாச்சாரம் தொpயாது. தொpந்தால் ஊரையே கூட்டி ஒப்பாரி வைப் பாள.; எதுக்கும் தான் போய் பார்ப்போம் என்று புறப்பட்டுவிட்டார். வெளியே சொல்ல முடியாவிட்டாலும் மனசு பு+ராவும் மகனைப் பற்றிய சோகமே நிறைந்து அழத்துடித்தது.
இந்த பாழாப்போனவனுக்கு பத்துமணிக்கு என்ன டீ குடிக்கக்கேக்குத. அதுவும் ராத்திரி. போகாம இருந்திருந்தா அந்தசேதி காதுலேயே விழுந்து தொலைச்சிருக்காது. இப்ப இந்த அவிதியுமிருக்hது.
வேலியைத்தாண்டி படலை சாத்திவிட்டு தெருவில் இறங்கினார். என்ன சமாதானம் செய்தாலும் மனசு சுத்தி சுத்தி அந்த சேதியிலேயே வந்துநின்றது.
பொன்னுக்குட்டி அதிகமாய் எங்கும் வெளியே வரமாட்டார். வர இஷ்டமில்லை என்பது ஒருபுறமிருந்தாலும் ஆறுவருஷத்திற்கு முன்பு தன் ஆசைமகன் எவளோ கீழ்சாதிப் பெண்ணோடு ஓடிப்போனான் என்பதை கருத்தில் வைத்து,
“என்னப்பிச்சி சத்தியனப் பத்தி சேதி உண்டா.” “அப்பிச்சி சூலூர் சந்தைக்குப்போனனா. அங்க உன்ற மகனையும் மருமகனையும் பாத்துபேசினே. சத்தியனெங்கியோ பண்ணைக்கு போறானாம். கஷ்ட ஜீவனந்தா. சோளம் வாங்கீட்டிருந்தாங்க. ஏண்டா தம்பி சோளக்கஞ்சிவச்சா குடும்பம் நடத்துறே. உனக்கேண்டா தலைவிதின்னேன். ‘வேறே வழி’ங்றான் நாந்தா போடா போக்கத்த பயலே அவளே எங்கயாச்சு ஓட்டியுட்டுட்டு ஊர் வந்துசேருன்னுட்டு வந்தேன்.
இதுமாதிhp ஏதாவது ஊர்சனங்க சொல்றத காது கொடுத்துக்கேக்க முடிய வில்லை இதனால் வெளியே வருவதையே விட்டொழித்துவிட்டார்.

2பொன்னுகுட்டியின் மனைவி கிட்னம்மா கூட, “இப்படி திண்ணையிலேயே பொழுதன்னிக்கும் தடியப்புடிச்சுட்டே குக்கிட்டி ருந்தா எப்பிடி. கோவில்மேட்லே சித்த உக்காரு. பக்கதாலே ரொட்டிக் கடைக்கு போயி ஒரு பன்னத் தின்னுட்டு டீ யக்குடிச்சிட்டுவா. இல்ல மொள்ள அப்படியே ரெங்கசாமி கோவிலுக்குப் போ. அய்யிரு நல்லதா ஏதாச்சும் சொல்வாரு. இப்படி கெடையிலேயே கெடக்காதே.பயித்தியந்தா புடிச்சுக்கும். அரும மகந்தா புலோக ரம்பையக் கூட்டீட்டு ஓடிப் போயிட்டான் அதே நெனப்பு இனியும் எதுக்கு எந்திhpச்சு போ சாமி.” என்பாள். எல்லாம் பழகிக் கொண்டாச்சு. --000-
வாரியார்சாமி ராமர்கத சொல்றார்னு வயித்துப்புள்ளத்தாச்சியா இருந்த கிட்னம்மாவக் கூட்டிட்டு பத்துமைல் வண்டிகட்டிட்டு தினமும் கேக்கப்போனார்பொன்னுகுட்டி.ராமர்பிறந்த கதைய சொன்ன அண்ணிக்கிதான் கிட்னம்மாவுக்கு வலி வந்துச்சு. நல்ல வேளை பக்கத்திலேயே ஆஸ்பத்திரி இருந்தங்காட்டிக்கு உடனே சேத்து இவம் பொறந்தான் சத்தியவந்தன் ராமர் மாதிhp இருக்கணும்னு பொன்னுகுட்டி அவனுக்கு சத்தியன்னு பேர்வச்சார்.
ராமர் காட்டுக்குப் போயி தசரதர் புத்திர சோகத்திலே படுறபாட்டை வாரியார் சாமி சொல்லச் சொல்ல பொன்னுகுட்டிக்கு கண்லே தாரதாரையா நீர் வடிஞசது.அன்னிக்கு ஊட்டுக்குவந்துங்கூட விடிய விடிய அழுதார்.அப்படி ஒரு சோகம். வரக்கூடாதுன்னு வேண்டாத சாமியே கெடையாது.
ஆனா அவரோட வாழ்க்கையிலேயே வந்துடுச்சே! ஆசை ஆசையா வளத்து அருமையா இங்கிலிஸ் பள்ளிக்கூடத்துக் கெல்லாம் அனுப்பிபடிக்கவச்சார். அரிசிச்சோத்தத் தவிர வேறே எதையும் கண்ணுலகூட பாத்ததில்லே. அப்பேர்பட்ட மகன் சோளக்கஞ்சி குடிக்கிறான்னா மனசு என்ன பாடுபடும்.
ஊருக்குள் புகுந்து ரொட்டிக் கடையைத் தாண்டும் போது அந்த பழைய பேப்பர் செய்தியை யாரோ உரக்கப் படித்துக்கொண்டிருந்தார்.


3
“பீலிஊரைச் சார்ந்த சத்யன் என்பவர் வயது30 இவர் அதே ஊரைச்சேர்ந்த பட்டியம்மாள் வயது24 என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற் போது பாப்பம்பட்டியில் இருவரும் கூலிவேலை செய்து பிழைத்து வந்தனர். கடன் தொல்லை தாங்காது சத்யன் விஷம் குடித்து இறந்து போனார். விஷயமறிந்த காவல் துறையினர்….”
பொன்னுகுட்டியால் அந்தசேதியை ஜீரணிக்க இயலவில்லை. மவன் செத்துப் போயிட்டானா. துக்கம் தொண்டையை அடைக்க அழுகை பீறிக்கொண்டு வந்தது. யாராவது பார்த்துவிட்போகிறார்கள் என்று துண்டால் வாயை பொத்திக் கொண்டார்.மனசு விட்டு வாய்நிறைய சத்தம் போட்டு அழவேண்டும் போலிருந்தது. அழுதால்தான் மனசு ஆறும் போல இருந்தது. ஊருக்குவெளியே குட்டையை நெருங்கிக்கொண்டிருந்தார்.சுமை தாங்கிக் கல்லருகே போய் உட்கார்ந்து கொண்டார். இருளைகிழித்துக் கொண்டு காந்திபுரம் போகும் பஸ்வந்து நின்றது.
சட்டென்று தாவி படிக்கட்டில் கால் வைத்ததும் பஸ்கிளம்பியது கம்பியை இரு கையால் சாpயாகப் பிடிக்காததால் ஆடி விழப்போனார். “ ஏம் பெரிசு நீ சாகரதுக்கு எம் பஸ் தானாகெடச்சது.” “ அ ஆம் போ.” கண்டக்டாpன் கையைப்பிடித்து ஒர சீட்டில் அமர்ந்தார். பஸ்ஸில் நாலைந்து போ;தான் உட்கார்ந்திருந்தனர் கண்டக்டர் போட்ட சத்தத்தில் தூக்கம் கலைந்தவர். திரும்பிப்பார்த்தார். “ அட என்னங் மாமா மணி ஆறுகூட ஆகலே இந்நேரத்துக்கெங்க கிளம்பீட்டே.” “ அடடே சுப்ராயனா.” “ மாமா கேள்விப்பட்டது நெசந்தானா?” “ எதை கேக்கறே” “ நம்ப நஞசப்பந்தா பேப்பர்லே என்னவோ போட்டிருக்குன்னு சாயந்தரம் உளர்னா,” “ யாருக்கு தொpயும்.” “ போன வாரம்தான் சந்தையிலே பாத்தானாம்.” “ ஆமாமா எங்குட்டையும்தா சொன்னா.”
4
“எப்படி இப்படி” “ அவம் விதி. அஞசங்கணம் ஊடு. ஆறேக்கறா தோட்டம் மாடுகண்ணு ஊரு சொந்த சனங்க இத்தனை பேரு இருக்கறப்ப எங்கயோ போய் தொலைஞ்சிருக்கானே பாவிமகன்..”அவரையும் மீறி அழுகை பீறிட்டது. “அழுகாதீங்க மாமா.மனசைத்தேத்திகங்க. நானுமுங்க கூடத்தான் வர்றேன்.” “எதுக்கு” என்பதுபோல பார்த்தார்பொன்னுகுட்டி.. “நீங்க அக்காகிட்டகூட சொல்லாம வந்திட்டிங்களாமா.இந்த நாரவாயன் நஞ்சப்பன் தா ராத்திhp அக்காகிட்டயும் சொல்லிப்போட்டானாம்.. உங்களுக்கு தொpயக் கூடாதுன்னு ஒண்ணும் சொல்லையாம். .ராத்திhp பு+ராவும் நீங்க படறபாட்டை பாத்துட்டுதா இருந்துச்சாம். சொல்லாம கொள்ளம புறப்பட்டதை பார்த்ததுமே அக்காவுக்கு புhpஞ்சு போச்சாம். நீங்க மகன பாக்க பாப்பம்பட்டி பொறப்பட்டீங்கன்னு விசுக்குன்னு எங்கூட்டுக்கு ஓடி வந்து சீக்கிரமா போய் பஸ்ஸப்புடிக்கச் சொன்னா. நா குறுக்குத்தடத்தில ஓடிவந்து பஸ்ஸப் புடிச்சு வர்றேன். அதுக்குள்ள குட்டைப் பக்கம் வநற்துட்டீங்களே. நான்தான பஸ்ஸை நிறுத்தச்சொன்னேன்.” “சேதி அப்படியா கிட்னம்மாளுக்கும் விசயம் தொpஞ்சு போச்சா சாpயான கைகாhp.”
கண்டக்டர் காந்திபுரத்துக்கு டிக்கெட்டை கொடுத்தார். ஆப்பாரசட்டை பையில் துழாவி பத்து ருபாய் நோட்டைத் தந்தாh; “நீ டிக்கெட் வாங்கிட்டயா.” “ நா அங்கயே வாங்கிட்ட மாமா.” பஸ்ஸின் ஆட்டத்தில் அவா;களுடைய பேச்சு அடிபட்டுப்போய் மௌனம் நிலவியது. “ஏண்டா சுப்ராயா?” “ஏனுங்க மாமா?” “அங்க பாப்பம்பட்டியில அவனூடு எவடதாலக்காம்?” “ அதென்னமாமா பொpய பட்னமா. பட்டிக்காடுதானே மிஞ்சிப்போனா நாலுசந்திருக்கும். அதுவுமில்லாம போலிஸ் கேஸ்வேறே ஊரே தேர் கூட்டமா கசமுசன்னு பேசிட்டு நிப்பாங்க. கண்டுபிடிக்கறதொண்ணும் கஷ்டமில்லே மாமா.”
5
“என்னவோ போப்பா அறுபதுவயசிலே நா இப்படி இருக்கோணும். அவங்காhp யத்ததை நாம் பாக்கோணும்னு இருக்கு.” “என்னங் மாமா சொல்றீங்க?” “இன்னுமென்னத்தச் சொல்றது. யாரென்ன சொன்னாலும் சொp. ஊரே எதுத்தா லும் சொp. என்றமகனே எந்தோட்டத்திலே தான் அடக்கம் பண்ணனும்னு தீர்மானம் பண்ணிப் போட்டம் போ.” “அதெப்படிங்க மாமா முடியும் ஊர் கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்குதுல்லோ. குலத்துக்குப் பொpயவங்க நீங்க. நீங்களே இப்படி…” “கொலமாவது கோத்தரமாவது அதையிதையிஞ் சொல்லித்தாண்டா அவன ஊரவுட்டே ஓட்னீங்க உப்ப உசிருக்கே ஒலையும் வெச்சுப்போட்டிங்க.சுப்ராயா சனங்க நடக்கற மாதிhp இந்த கொங்குமண்ணிலே நடந்ததே இல்லே. ராசாக் காலத்திலேகூட இந்த கொங்குமண்ணுலே சாதி பிரச்சனை கெடையாது. அதததுக்கு பட்டயமே போட்டுப் போட்டான். வு+ட்டுக்கு வௌ;ளையடிக்கறது, செத்தா ரெண்டுசங்கு வைக்கறது செருப்புப் போட்டுட்டு ஊருக்குள்ளே வாரதுன்னு இதுக்கெல்லாம்கூட அனுமதி தந்து சாதிப்பிரச்சனை யே வராம இருந்தமண்ணு இந்த மண்ணு. அதுமட்டும் புள்ளப்பெத்தா கொழந்தைய வளக்கறது,குளிப்பாட்டறது,ஏன் புள்ளை அழுதாமுலைப்பால் கொடுக்கறதுகூட அந்தமாதாhp புள்ளைகதான். என்னவோ இப்பத்தான் கீழ்சாதி கீழ்சாதின்னு நெம்பத்தான் ஆடறானுக. “என்கென்னவோ சத்தியன் செத்துட்டான்னே மனசு ஒப்பமாட்டீங்குது மாமா.” “பேப்பர்லே போட்டிருக்கானேடா சுப்ராயா.” “பேப்பர்லே போடறதெல்லாம் நெசமாயிடுமா?”
பஸ் காந்திபுரத்தை நெருங்கியது. மத்தியபஸ் நிலையம் மணி எட்டைக் காட்டி கலகலத்துக்கொண்டிருந்தது. “மாமா கடையிலே ஏதாவது சாப்புட்டுபோட்டு போலாங்களா? அங்க பாப்பம் பட்டிலே சாப்பிடறதெல்லாம் தோதுபடாது. அதுவுமில்லாம இனி எந்நேரமாகுதோ?” “எனக்கொண்ணும் வேண்டாம். நீ வேண்ணா சாப்புடு.” “எனக்கும் ஒண்ணும் வேண்டாம். நீங்க பசிதாங்கமாட்டீங்க. பரவால்லே ரெண்டு பேரும் சாப்புட்டுபோட்டே போலாம் வாங்க.”

6 இருவரும் எதிரே இருந்த காப்பிக்கடையில் சாப்பிட்டுவிட்டு திரும்பினார்கள். பாப்பம்பட்டி போகிற பஸ் தயாராய் நிக்கவும் அதில் ஏறப் போனார்கள். பஸ் புறப்பட இன்னும் நேரமிருந்தது. பஸ்ஸில கூட்டம்; நிறைய இருந்தது. இளவட்ட பையன்கள் நாலைந்து பேர் பஸ்ஸூக்கு வெளியே நின்று கொண்டு வருகிற போகிறவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். பொன்னுகுட்டியும்,சுப்ராயனும்பஸ்ஸில் ஏற முயன்றார்கள். கூடீ நின்ற கும்ப லில் ஒருவன், “பொpசு எதுவரைக்கும்?” “பாப்பம்பட்டிக்குதாங் கண்ணு.” “ஆரூட்டுக்கு?” “ ஆரூட்டுக்குமில்லே. நேத்துசாயந்திரம் பேப்பர்லே போட்டிருந்துச்சே சத்தியன்னு விசங்குடுச்சு….” “ அடடே பாடிய ராத்திhpயே பொpயாஸ்பத்திhpக்கு கொண்டுபோயி-ட்டாங்க. அவங்க சம்சாரம்கூட ஆஸ்பத்திhpக்குத்தான் போயிருக்கு. ஊர்லே அவங்களுக்கு யாருமில் லே. அங்க போய் யாரப் பாக்கப்போறீங்க?” “ அட அப்பிடியா. நல்லதாப் போச்சு. அப்ப பொpயாஸ்பத்திhpக்கே போயிர் லாங்க மாமா.” “ ம் சொp பொpயாஸ்பத்திhpக்குப் போற பஸ்ஸப் பாரு.”
பொpயாஸ்பத்திhp காலைவேளை சுறுசுறுப் போடு வேகமாய் இயங்கிக் கொண்டிருந்தது. வௌ;ளை யுடுப்பில் கையில் ஸ்டெதாஸ்கோப்புடன் கும்பல் கும்பலாய் மருத்துவக்கல்லூhp மாணவமாணவிகள் அரட்டையுடன் போயிக்கொண்டிருந்தனர். ஓவ்வொரு வார்டிலும் நோயாளிகள் வாpசையில் டாக்டர் தாpசனத்திற்குக்காத்திருந்தனர் ஸடச்சர் வண்டி அவ்வப்போது கிறீச் கிறீச் என்ற சத்தத்தோடு போயிக்கொண்டிருந்தது. பொன்னுகுட்டியும் சுப்ராயனும் எந்த பக்கம் போவது யாரை விசாhpப்பது என்பது தொpயாமல் விழித்துக் கொண்டிருந்தனர். இடதுபுறம் மேல் கோடியில் கூட்டம் அதிகமாயிருந்தது. “மாமா அங்க பாருங்க அதுதான் சாவுரூம் அஙகதான் பொணத்த அறுப்பாங்க. வாங்க போய் பாக்கலாம். அதுவரை மறந்திருந்த துக்கம் மறுபடியும் பீறிக்கொண்டுவர பொன்னுகுடடி தன்னையும் மறந்து,
7 “என்ற ராசா உன்னை இந்தக் கோலத்துல பாக்கவா தவமிருந்து பெத்தேன்.ராமரப்போல நெனைச் சேனே. இப்படிப் பண்ணிப்போட்டியேடா பாவி.” -என்று கதறி வாய்விட்டழுதார்;.அவருடைய ஓலம் சுற்றி நின்றவர்களையும் கலங்கச் செய்துவிட்டது. கூட்டத்தில் யாரோ சுப்ராயனின் தோளைப் பற்றுவது உணர்ந்து திரும்பி னார். சுப்ராயன் கண்ட காட்சியில் அதிர்ச்சியுற்று, “ மாமோய் இங்க திரும்பிப்பாருங்க. இந்த அதிசயத்தை.” சட்டென்று. திரும்பிய பொன்னுகுட்டி கண்டகாட்சியில் ஆடிப்போனார். “அட என்ற ராசா. ஊன்ன செத்துப் போயிட்டானுட்டானுகளே.” “ இல்லப்பா நா சாகலே.” “ அப்ப பேப்பர்லே போட்டது.” “ அது நம்மூர் அய்யர்மகன் சத்தியநாராயணன்பா. அவனும் பாப்பம்பட்டிலே தான் குடியிருக்கான். “அப்ப பட்டியம்மான்னு போட்டிருந்ததே.” “எம்பொண்டாட்டி பேரு பட்டத்தரசிப்பா.” “ எப்படியோசாமி எங்கமாமா வேண்டுன சாமிக கையுடலங்கறதே போதுங்க சாமி இனி எவனெதுத்தாலும் சொp எந்த சாதியும் நமக்குத் தேவையுமில்லே. இனி நீங்க பீலியு+ர் மண்ணுலேதான் பொழைக்கோணும்.” என்று உணர்ச்சி பொங்க சுபடராயான் சொன்னார்.
ழூழூழூழூழூஇச்சிறுகதையை எழுதியவர் பாரதிதேவராஜ். ஆ.யு219குடீ மணியகாரர்நகர்வேலாண்டிபாளையம்கோவை. 641025


சிறுகதை 1 அன்பாலே தேடிய என்… “திங்கட் கிழமை பாக்கலாம்; சீயு+.” பஸ்ஸைவிட்டு இறங்;கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய்விட்டது. பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந் தார் சட்டென்று, “என்ன தாரணி மேடம்.” “அட அதெப்படி நாந்தான்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?” “:மேடம் எனக்கு கண்ணு மட்டும்தான் பாக்க முடியாதே தவிர மத்த எல்லா பாகங்களும் உங்களவிட டபுளாவேலை செய்யும் ஒரு குரலெ ஒருதடவை கேட்டாலே ஆழமா பதிவாயிடும் அடுத்தமுறை அந்தக் குரலை கேட்டவுடனே இன்னார் தான்னு தொpஞ்சுடும்.” “சூப்பர்!” தாரணி கலகலவென்று சிரித்தாள். “சாp இன்னிக்கு சனிக்கிழமை. ஆபிஸ்லெ வேலையிருக்கோ?” “இல்லே கண்ணுசாமி பேங்க வரைக்கும் போகணும்.” “அப்ப சவுகர்யமா போச்சு. நானும் அங்கதான் போகணும். கூட்டிட்டு போறீங்களா?” “ஓயெஸ் போலாமே.” “என்ன பேங்கலே பணம் எடுக்கணுமா?” “இல்லே கண்ணுசாமி. ஒரு லோன் விசயமா மானேஜரப் பாக்கணும்.” “சாhp மேடம்.உங்களுக்கெதுக்கு லோன்?” “அட.நா என்ன அவ்வளவு பொpய ஆளா. வீட்லே வரன் பாத்துட்டிருக் காங்க. திடீர்னுமுடிவாயிட்டா பணம் தேவைப்படுமே. அதுக்கோசரம்தான் அட்வான்சா கேட்டுவைப்போமேன்னு.” “வாழ்த்துகள் மேடம். மணி என்னாச்சு?.” “ஒம்பதரை ஆறது.” “இன்னும் அரைமணி நேரமிருக்கே பேங்க் தெரக்கறதுக்கு.” “ஆமா கண்ணுசாமி. ஆபிஸ் பக்கந்தானே அங்கே போய் கொஞ்சநேரம் இருந்துட்டுபோனா சாpயாயிடும்.” “அதுவும் சாpதான். ஆபிஸ் இன்னிக்கி தொறந்திருக்குமில்லே?” “ஜி.எம் வருவாரு ப்யு+ன்நடராஜன்கூட வந்திருப்பார்.”
2 “அப்ப நடராஜ் கையாலே காப்பி சாப்பிட்டு போலங்கறீங்க.சாpபோயிடலாம்.” தாரணிக்கு இந்த வைகாசியோடு இருபத்தைந்து முடிகிறது. நல்லசிவந்த உடல்.கட்டான தேகம். எவரையும் வசிகாpக்கும் தன்மை. ஆபிஸ் வந்துவிட்டது. “அடடே கண்ணுசாமி. வாங்க இந்தப் பொண்ண எங்க புடுச்சீங்க” “என்ன நடராஜன் சார் பேங்க் போலாம்னு புறப்பட்டேன். ஊர்லேருந்து பஸ்ஸப்புடுச்சு காலேஜ் பஸ் ஸ்டாப்பில வந்து இறங்கிட்டேன்.ரோட கிராஸ் பண்ணலாம்னு நின்னுட்டிருந்தப்ப தாரணி மேடம் வந்தாங்க. அவங்களும் பேங்குக்குத்தான் போறேன் னாங்க அது சாpன்னு வந்தேன். மணி ஒம்பதரைதான் ஆச்சு.கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்னு ரெண்டுபேரும் வந்தோம்.” “பாரப்பா அவனவன் ஆபிஸ்லே வேலை செய்யறதுக்கு வந்தா நீங்க ரெஸ்ட் எடுக்க வர்றீங்க. காபி சாப்பிடறிங்களா?” “அப்புறம் அதுக்குத்தான் வந்திருக்கோம். போயிட்டு சீக்கரமா வாங்க.”காசை பர்சிலிருந்துஎடுக்கப்போனார்கண்ணுசாமி.அதற்குள் தாரணியே கொடுத்தனுப்பினாள் “கண்ணுசாமி உங்களுக்கு பொறந்ததிலிருந்தே கண் தொpயாதா?” “பொறந்தப்பல்லாம் கண்ணு நல்லாதான் தொpஞ்சது. மூணாவது படிக்கற வரைக்கும் கண்ணு தொpஞசுட்டுதான் இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கப்புறம் விஷக்காய்ச் சல் மாதிhp வந்துச்சு. கண்ணு அப்ப நீலநிறமா தொpய ஆரம்பிச்சுடுச்சு. அந்த நேரத்திலே புளியங்கா அடிக்க எவனே வீசின கல்லு என் கண்ணுலேபட்டு காயமாயிடுச்சு. ஆஸ்பத்தி hpககு போகாம எண்ணெயக்காய்ச்சி கண்ணுலே விட்டாங்க. அப்புறம் கொஞ்சமா தொpஞ்ச பார்வையும் சுத்தமா போயிடுச்சு. அப்புறம் நா பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.நா இருக்கிறது கிராமந்தானே கக்கூஸ் வசதியெல்லாம் கிடையாது. ஊருக்குவெளியே காட்டுக்குள்ளதான் போகணும். கண்ணுதொpயாத நா தனியா போகமுடியாது. தம்பிதான் கூட்டிட்டு போகணும்.. அவம்பண்ற அட்டூழியம் சொல்லித்தீராது.சோறுபோடற அம்மா ஒருபக்கம் செத்துப்போற மாதிhp பேசுவா. தம்பிஒருபக்கம் இதனால சாப்பிடறதயே நிறுத்திட்டு தண்ணியக்குடிச்சுடே காலத்த ஓட்னே. வாரத்துக்கொருதாட்டி அப்பா டவுன்லேந்து வருவாரு. அவருதான் எனக்கு அனுசரணையா நடந்துப்பாரு. கொஞ்சநாள் அவரால சகிக்க முடியாம கிருஸ்டியன் ஹாஸ் டல்ல சேத்தாரு. அங்கதான் பத்தாவது வரைக்கு படிச்சேன் சேர் பின்ற தொழிலகத்துக்கொடுத் தாங்க. பொpய பொpய ஆபிஸ்லே வேலைகிடைச்சது என்னமாதிhp இருக்கறவங்களவச்சு காண்டராக்ட் எடுத்து செய்யறேன் ஏதோ ஒரளவுக்கு வசதியா இருக்கேன். இப்ப வீட்லே
3 தாங்குதாங்குன்னு தாங்கறாங்க. ஆனா அது எனக்கு இஷ்டமில்லை. உங்களமாதிhp நாலு நல்ல சனங்ககூட பழகறதே மனசுக்கு நிம்மதி தருது. அதுசாp என்றகத பொpசு அது இன்னக்கி தீராது.நடராசண்ணே வந்தாச்சுபோலிருக்கு காபி மணக்குதுங்க தாரணி மேடம்” “ஆமா சாப்பிடுங்க.மணி பத்தரையாச்சு புறப்படலாம்.” 00000 பாங்கில் ஏகப்பட்ட கூட்டம். தாரணி, “கண்ணுசாமி உங்களுக்கென்ன பணமெடுக்கணுமா?” “இல்ல மேடம்.பாஸ்புக் என்ட்hp போடணும். நா பாத்துக்கிறேன். நீங்க மானேஜரப் பாத்துட்டுவாங்க.” தாரணி மானேஜர் அறைக்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் வெளியே வந்தாள். கண்ணுசாமி பாஸ்புக் என்ட்hpயை போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்திருந்தார். “கண்ணுசாமி போகலாமா?” “என்ன மேடம் அதுக்குள்ள வேலைமுடிஞ்சிடுச்சா?” “இல்லே கண்ணுசாமி. மானேஜர் ரொம்ப பிஸியாம்.அடுத்தவாரம் வரச்சொன் னார்” அதே சமயம் தாரணி ஹேண்ட் பேக்கில் செல்போன் அழைத்தது. “ஹலோ” “நா அம்மா பேசறேன். அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலிக்குதுன்னார். சரவணா ஆஸ்பத்திரியிலே சேத்திருக்கோம.; நீ உடனே புறப்பட்டுவா.” “கண்ணுசாமி அப்பாவுக்கு உடம்பு முடியல்லே.ஆஸ்பத்திhpலே சேத்திருக்கா” நா புறப்படட்டுமா?” “ மேடம் உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா,நானும்கூட வரட்டுமா ஒரு ஆட்டோ புடுச்சு போயிரலாமா?”-என்று கண்ணுசாமி கேட்கவும்,தாரணிக்கு என்ன செய்வ தென்று தொpயவில்லை. ஆஸ்பத்திhp பக்கம்தான் இருந்தாலும் இவர் எதற்கு. இவரைபாக்கவே ஒரு ஆள் வேணும். இவர் வந்து என்ன செய்யப் போகிறார். இருந்தாலும் அவளது உள் மனசு அவரை அழைத்துப் போக அனுமதிக்கவே, “சாp வாங்க.” என்று ஒருஆட்டோவைப் பிடித்து ஆஸ்பத்திhpக்கு விரைந்தார் கள். வாசலில் தாரணியின் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தனர். “அக்கா அப்பாவ ஐசியு+லே அட்மிட் பண்ணியிருக்கா உடனே இருவத் ;தையாயிரம் கட்டணும்றா என்ன பண்றதுன்னு ஒண்ணும் புhpயல்லே. நம்மகிட்டே காசே கிடையாது. உன்னட நகை ஏதாச்சு வச்சு பணம் ஏற்பாடு பண்ணலாமாக்கா.”
4 “என்னோட நகைய வச்சாக்கூட அவ்வளவு தேறாதே. உள்ளே அப்பாவ பாக்கமுடியுமா?” “இல்லக்கா யாரையும் பாக்க அலவ் பண்ணமாட்டா.” “கண்ணுசாமி அப்பாவ ஐசியு+லே வச்சிருக்கங்களாம். யாரையும் உள்ள அனுமதிக்கமாட்டாங்களாம் நீங்க எப்படி. இங்கிருந்து ஏழுலே போய் காந்திபுரத்திலே இறங்கிஅங்கிருந்து செம்மேட்டு பஸ் புடுச்சு ஊருக்குப் போயிடுவீங்களா?” “மேடம் தப்பா நெனச்சுக்காதீங்க பணம் ஏதோ வேணும்னு சொன்னமாதிhp கேட்டுச்சு. எவ்வளவு வேணும்னு தொpஞ்சா நா ஏதாவது உதவி பண்ணலாம் இல்லையா?” “அவ்வளவு பணம் உங்க கிட்ட இருக்குமா? இருபத்தஞ்சாயிரம் வேணுமா. இன்னும் எவ்வளவு தேவைப்படுமோ தொpயல்லே. பேசாம ஜி.எச் சுக்குப் போயிர்லாமான்னு யோசனை பண்றேன்.” “மேடம் இந்த ஹேண்ட் பேக்க வாங்கிக்கங்க. அதிலே அம்பதாயிரம் இருக்கு. என் தம்பி கல்யாணத்துக்காக எடுத்தேன் அதவிட இதுதான் முக்கியம். இன்னும்வேணாலும் பாங்க்லே இருக்கு எடுத்துக்கலாம் நீங்க ஆஸ்பத்திhpக்கு எவ்வளவு பணம் கட்டணும்னு பாத்து கட்டுங்க.” தாரணிக்கு பொட்டில் அறைந்த மாதிhp கிருகிருத்துப் போனது. ஏதை நம்பி எதற்காக கொடுக்கிறார். “ மேடம் நீங்க எந்த யோசனையும் பண்ணவேண்டாம் நா எந்த எதிர்பார்ப்பு லேயும் இதைகொடுக்கலே. மனிதாபிமானம்தான் உங்களுக்கு உதவரதுக்கு இப்ப எங்கிட்ட இருக்கே அதுக்காக கடவுளுக்குதான் நன்றி சொல்லணும். எடுத்துக்கங்க.” 00000 பத்து நாட்களில் அப்பா தேறி வீடு வந்து சேர்ந்தார். தாரணியை பெண் பார்த்து விட்டுப் போனவர்கள் அப்பா நிலையால் ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆகிட்டால் அப்புறம் சீர்செனத்தியெல்லாம் யார் செய்வார்கள். அதற்காக ஒருலட்ச ரூபாய் முதலில் கொடுத்துவிட வேண்டும் என்று கண்டிசன் போட்டார்கள் இப்போதை நிலையில் கல்யாணம் செய்யவே முடியாத நிலை. அப்பாவின் உடல் தேறவே அங்கே இங்கே என்று கடனை வாங்கி இருக்கிற நகையெல்லாம் பாங்கில் வைத்து அப்பாவை பிழைக்க வைக்க வேண்டியிருந்தது. கடைசியில் எங்களால் இப்போதைக்கு முடியாது. நீங்கள் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டாள். மாலைமணி நான்கிருக்கும். பத்துநாள் அலைந்த களைப்பில் எல்லோரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.கதவை தட்டும் ஓசை கேட்டது,
5 தாரணிதான் கதவைத் திறந்தாள். கண்ணுசாமியும் அவர் அப்பாவும் நின்று கொண்டிருந்தனர். தாரணியின் மனசுக்கு இதமாயிருந்தது. “வாங்க கண்ணுசாமி .அப்பாவா?” “ஆமாம்மா.” அப்பாவைப் பார்த்து ஒரு கூடை பழங்களை எடுத்து வைத்தார்கள்.கண்ணுசாமிக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே தொpயவில்லை. அன்றுமட்டும் அவர் பணம் கொடுத்துதவவில்லை என்றால் அப்பா பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. அதுமட்டுமா அன்றுமுழுக்க ஆஸ்பத்திhp வாசலிலே காத்திருந்து விசாhpத்துக்கொண்டே யிருந்தார். இந்த பத்துநாளும் தினமும் ஒருமுறையேனும் வந்து விசாhpத்துவிட்டு செல்வார். அவருடைய அப்பா தன் அப்பாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். “எம் பையனுக்கு கண்ணுதா குருடா போச்சு. வேறே எல்லாம் சம்பாhpச்சுட்டான். ஒருகல்யாணத்தையும் பண்ணவேண்டியது என்கடமை. ஆனா பார்வையில் லாதவனுக்கு யார் பொண்ணு தருவா. எந்தப்பொண் கட்டிக்க வருவா?” -தாரணியின் மனசு சட்டென்று முடிவெடுத்தது, “அப்பா அவங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா நான் அவரை ஏத்துக்கறேன். உங்களுக்கு பணஉதவி செஞ்சதுக்குமட்டுமில்லே அவரை முன்னாடியே மனசுலே விரும்பிட்டுதான் இருந்தேன்.சாpயா கண்ணு. ..சாhp சாpங்களா? “சாpதான்.” என்பதுபோல கண்ணுசாமியும் ஆமோதித்தான் மனதுள் அவள்மேல் ஒருதலைக் காதலாயிருந்தது இவ்வளவு விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
-00000- இச்சிறுகதையை எழுதியவர் பாரதிதேவராஜ். ஆ.யு219குடீ மணியகாரர்நகர்வேலாண்டிபாளையம்கோவை. 641025