Pages

Tuesday, July 26, 2011

........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
2

a
சிறுவர் பகுதி-நாவல்.
துரத்துவது யார்?
பாரதி தேவராஜ்.
1. எழுத்தாளரின் மரியாதை!
மணி ஏழாகியிருந்து. கிழக்கே சூரியன் மெல்ல எட்டிப் பார்த்தான் கோவை ரயில் நிலையம் கலகலத்துக் கொண்டிருந்தது. இன்று ஏகப்பட்ட கூட்டம். எழுத்தாளர் கீர்த்தீயனை வரவேற்க ஒரு கும்பல் மாலையோடு காத்திருந்தது. அவர்களில் ஓரமாய் ஒரு சின்னஞ்சிறிய சிறுவனும் வந்திருந்தான். அவன்தான் சுந்தர். சுந்தர் கீர்த்தீயனின் பரமரசிகன். அவருடைய ஒவ்வொரு கதையும் வெளியாகிற அடுத்த நாள் அக்கதை பற்றி ஒரு சிறு விமர்சனமாய் சுந்தரின் கடிதம் அவரை அசர வைக்கும்.
அதோ ரயில் வந்து விட்டது. இஞ்சினை அடுத்திருந்து முன்பதிவு செய்யாத சாதாரண பெட்டியிலிருந்து அவர் இறங்கினார். அவரது ரசிகர்கள் மாலை போட்டும் கதர் துண்டு போர்த்தியும் வரவேற்றனர். ஓரமாய் நின்ற சுந்தர்,
“சார்.நான் சுந்தர் அடிக்கடி கடிதம் எழுதுவேன்”
“ ஓ! சுந்தர். வாவா. என்ன அங்கேயே நின்னுட்டே வா இங்கே.”
சுந்தர் அவரின் அருகில் வந்து தன் கையிலிருந்த எலுமிச்சங்கனியை அவரிடம் கொடுத்தான். கூட்டத்தினர் என்ன நினைத்தார்களோ படபடவென கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சுந்தருக்கு வெட்கமாய் போய் விட்டது.
கீர்த்தீயன் சுந்தரை நோக்கி, “சுந்தர் நான் கனகா லாட்ஜ்லே தங்கியிருக்கேன் ஒரு பத்து மணிக்கு நீ அங்க வந்துரு. சாயந்தரம் நாலுமணி வரைக்கும் புல்ப்ரிதான் பிரியா பேசுவோம். எழுத்து வேலை கொஞ்சம் முடிக்கணும் இல்லேன்னா உன்னையும் இப்பவே எங்கூடவே கூட்டிட்டு போயிடுவேன். உனக்கொண்ணும் வருத்தமில்லையே?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லே சார்”.
சுந்தர் சைக்கிளை முன்வாசலில் நிறுத்திவிட்டு, “அம்மாம்மா இன்னிக்கி கீர்த்தீயன் சாரைப் பார்த்தேன். என்ன உயரமாயிருக்கார் நானே என்னை அறிமுகம் செஞ்சுகிட்டேன். அவர் ரொம்ப சந்தோசப்பட்டார். என்னுடைய கடிதங்களைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோசப் படுவேன்னு சொன்னார்ம்மா!”
— பேப்பர் கொண்டுபோகும் ரெக்ஸின் பையை சுவற்று ஆணியில் மாட்டினான் சுந்தர்.
“அப்புறம்”
“ஏதோ தொடர்கதையோட அத்தியாயம் எழுதணுமாம். பத்து. மணிக்கு மேலே என்னை வரச் சொல்லி இருக்கார்.. இன்னைக்கு பூரா அவரோடதான் இருப்பேன்.” சுந்தரின் முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்கியது.
“நல்ல புள்ளப்பா. சரிசரி டிபனச் சாப்பிட்டுட்டு எங்கவேணா போ” என்று சொல்லி விட்டு அடுக்களையில் நுழைந்து தட்டெடுத்து வைத்தாள்.
*******
கோமளத்தம்மாவிற்கு சுந்தர் ஒரேபிள்ளை. ரம்யா சுந்தருக்கு மூத்தவள். கோமளத்தம்மாவின் கணவர் கொஞ்சமும் பொறுப்பில்லாதவர் எப்போதாவது வருவார். கையிலிருக்கும் பணத்தைக் கொடுத்து விட்டுப் போவார். மறுபடியும் எப்போது திரும்புவார் எனச் சொல்லவே முடியாது, நல்ல வேளை குடியிருந்த வீடு சொந்தமாயிருந்தது. ஒரு போர்சன் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் ரம்யா எப்படியோ பள்ளியிறுதி வகுப்பு வரை படித்து விட்டாள். டைப்புக்குப் போய் பாஸ் செய்திருந்தாள். ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்குப் போகிறாள். சுந்தர் பனிரெண்டு வயது பையனானாலும் படு புத்திசாலி பள்ளிக்குச் சென்ற நேரம் போக மீதி நேரத்தில் எதையாவது செய்வான்.
யாரையோ கேட்டுக் காலை நேரத்தில் எழுந்து போய் பேப்பர் போடும் வேலையைத் தேடிக் கொண்டான். அதில் வருவது சொற்பமானாலும் ஒருசின்ன செலவுக்காவது ஈடுகட்டத்தான் செய்தது. சுந்தருக்குப் படிப்பதில் ஆர்வம். வார, மாதப் பத்திரிக்கைகள் ஒன்று விடமாட்டான். இன்று பிரபலமாகி எல்லாப் பத்திரிக்கைளிலும் எழுதிக் குவித்து வரும் கீர்த்தியன் என்றால் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய ஒவ்வொரு கதையும் படித்து விட்டு அதைப் பற்றி அவருக்குக் கடிதமெழுதுவான். நாலைந்து கடிதங்களுக்குப் பின் ஒரு ஒற்றை வரியில் கீர்த்தீயனிடமிருந்து பதில் வரும். அதைப் பார்த்ததும் மிகப் பெரிய விருது கிடைத்தது போல எல்லோரிடமும் காட்டி மகிழ்வான்.
“ஏண்டா இன்னும் ஒரு இட்லிதான் வைச்சுக்கோயேன்”
“ வேண்டாம். வேண்டாம். ”என்றவன்.
தட்டைத் தூக்கிக் கிணற்றடியில் கிடந்த பாத்திரங்களுக்கருகில் வைத்து விட்டு அவசரமாய்; கையலம்பினான்.
கனகா லாட்ஜ் வெய்யிலின் அருமை தெரியாமல் குளுமையோடிருந்தது. வரவேற்பறையில் சந்தனக் கீற்றோடு நின்று கொண்டிருந்தவர். யாருடனோ சுவாரஸ்யமாய் செல்லில் பேசிக் கொண்டிருந்தார். சுந்தர் நிதானமாய் கவுண்ட்டர் அருகே போய் நின்றான். சு
ந்தரைக் கண்டதும் அந்த வரவேற்பாளர், “தம்பி உங்க பேர் சுந்தரா?”
“ஆமாம்”
“ம் கீர்த்தீயன் சார் கொஞ்சம் வெளியே போயிருக்கார். அறைச் சாவிய உங்கிட்ட கொடுக்கச் சொன்னார். ரூம்லே பத்து நிமிஷம் இருக்கச் சொன்னார். இந்தா ரூம் 203 மேலே லெப்ட் சைடுல இருக்கு.”
பெரிய ‘கீ’ செயினோடிருந்த சாவியைச் சுந்தர் கையில் கொடுத்தார்.
சுந்தருக்கு கொஞ்சம் ஏமாற்றமாயிருந்தாலும் உற்சாகமாய் மாடிப்படிகளில் தாவி 203-ம் அறையின் கதவைத் திறந்து உள்ளே போனான். கொசுவலை ஸ்டேண்டில் ஒரு ஈரத்துண்டு தொங்கியது. பேன் வேகமான சுழற்சியில் ஈரத்தை காய வைக்க முயன்றது. ஹாலின் நடுவில் ஒரு டபிள்பெட் சுத்தமாகயிருந்தது. தலைமாட்டிலிருந்த சின்ன டீபாயில் நாலைந்து புத்தகங்கள் புதுக்கருக்கோடிருந்தது.
ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஜன்னலோரமாயிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு புத்தகத்தைப் பிரித்தான். ஜன்னல் வழியாக கீழே பார்த்தான். தெருவில் ஒரு மாட்டுவண்டி சலங்கைகள் குலுங்கப் போய்க் கொண்டிருந்தது. டவுன் பஸ் ஒன்று அதை முந்திக் கொண்டு போனது. நடுத்தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு பெரியவர் பயந்து அலறியபடி பிளாட் பாரத்திற்கு ஓடிப்போய் திரும்பிப் பார்த்தார், சுந்தருக்கு சிரிப்பாயிருந்தது.
தூரத்தில் பாண்டு வாத்திய சத்தம் கேட்டது. பையனொருவன் நோட்டைக் கையில் வைத்துக் கொண்டு வீடுவீடாய் போய்க் கொண்டிருந்தான் சுந்தர் இன்னும் நன்றாக எட்டிப்பார்த்தான். பார்வையற்ற உடல் ஊனமுற்ற ஐந்தாறு பேர் பாண்ட் வாத்தியங்களை வாசித்துக் கொண்டு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தனர். தெருவில் வருவோர் போவோர் நின்று, நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
லாட்ஜ்க்கு நேராய் வாத்தியம் வாசிப்போர் வந்த போது ஜனக் கூட்டம் சற்று அதிகமானது. டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் சட்டென்று கூட்டத்தை விலக்கி லாட்ஜ்க்குள் ஒடிவந்தான் முன்னால் நின்ற வரவேற்பாளரிடம் விசாரித்தவன். மாடிப்படிகளில் சரசரவென்று ஏறினான். சுந்தர் இருந்த அறையில் சட்டென்று புகுந்து கதவைச் சாத்தினான். அவசர அவசரமாய் டிரம்ஸின் நட்டுகளைக் கழட்டி, கேக் வடியிலிருந்த காகிதம் சுற்றிய ஒரு பொருளை சுந்தரின் கையில் கொடுத்து, “இது பத்திரமாய் ரூமில் எங்கயாவது ஒளிச்சு வை யாருக்கும் தெரியக் கூடாது” என்று சொல்லியவன் மறுபடியும் டிரம்ஸ் நட்டுகளைப் பழையபடி போட்டு முறுக்கிய அதே நேரம் கதவைத் தட்டும் ஒலி கேட்டது டிரம்ஸை விட்டுவிட்டு பாத்ரூமுக்குள் அந்தப் பையன் பாய்ந்து ஓடினான். சுந்தர் கதவைத் திறந்தான்.
மெட்டையடித்த ஒரு கருப்பு மனிதன் மாமிச மலை போல பயங்கரமாய் நின்று கொண்டிருந்தான்..
(தொடரும்)
பகுதி-2


ch_client = "msmuthukamalam";
ch_width = 468;
ch_height = 60;
ch_type = "mpu";
ch_sid = "Chitika Default";
ch_backfill = 1;
ch_color_site_link = "#0000CC";
ch_color_title = "#0000CC";
ch_color_border = "#FFFFFF";
ch_color_text = "#000000";
ch_color_bg = "#FFFFFF";



முகப்பு

Srcid=2853;Tarid=0;Adty=16;Width=728;Height=90;Skin=12;Banner=0;Filt=0;

........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
2

Srcid=2853;Tarid=0;Adty=16;Width=728;Height=90;Skin=11;Banner=0;Filt=0;



a
சிறுவர் பகுதி-நாவல்.
துரத்துவது யார்?
பாரதி தேவராஜ்.
2. எழுத்தாளராக ஆசை.
சுந்தர் அந்த பெரிய மாமிச மலை போன்ற மனிதனைக் கண்டதும் பயந்து விக்கிப் போய் நின்றான்.
“ஏய் இங்க வந்த பையன் எங்கே?” என்று அலறினான்.
பயத்தில் வார்த்தைகள் வாயிக்கு வராமல் பாத்ரூமை நோக்கிப் பார்வையை வீசினான். அதற்குள் அந்தப் பையன் டிரவுசரை தூக்கி பட்டன்களை மாட்டியபடி வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் அந்த பயங்கர மனிதன் தன் சிவந்த முட்டைக் கண்கள் உருட்டியபடி, “இங்கே என்னடா பண்ற கேடி?” கர்ச்சித்தான்.
அந்தப் பையனோ கொஞ்சம் கூட பயப்படாமல், “ஒண்ணுக்கு அவசரமா வந்துடுச்சு போகமலிருக்க முடியலே” என்று சொல்லிவிட்டு டிரம்ஸைத் தூக்கித் தோளில் மாட்டிக் கொண்டான்.
“ஓகோ பெரிய துரை லாட்ஜ் ரூம்லேதான் ஒண்ணுக்கு போவாரோ. ரோட்டோரமா இருக்க வேண்டியதுதாண்டா. உங்களையெல்லாம் கொண்டாந்து சேத்தரதுக்குள்ளே இருக்கு நடநட.” -என்று பிட்றியைப் பிடித்துத் தள்ளாத குறையாய் நகர்த்திக் கொண்டு போனான்.
அவன் நகர்ந்ததும் சுந்தர் மெல்ல கதவில் எட்டிப் பார்த்தான். குண்டன் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான். டிரம்ஸைத் தூக்கிய சிறுவன் டிரவுஸர் பட்டனை சரி செய்வது போல தயங்கிபடி நின்றான். அவன் தயங்கியதைக் கண்டதும் மீண்டும் மீன் நழுவி விடக்கூடாதே என்று “ஏண்டா பயலே?”
“டிராயர் பட்டன் எட்டமாட்டிங்குதுய்யா”.
“எட்டாதுரா”.
“எட்டு எட்டு எட்டிருச்சு” என்றவன் சுந்தரைப் பார்த்து
“எட்டுமணி” என்று கத்தினான். அதற்குள் அந்த பெரிய ஆள் கீழே இறங்கியிருந்தான். மேலும் நிற்காமல் விடுவிடு என அந்த பையனும் இறங்கிப் போய்விட்டான்.
வாத்தியக் கோஷ்டி அதற்குள் கொஞ்சம் தூரம் நகர்ந்து போயிருந்தது. அவர்களோடு அந்தச் சிறுவனும் அந்தக் குண்டனும் சேர்ந்து கொண்டனர். சுந்தர் சுற்றும் முற்றும் பார்த்தபடி அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே கட்டிலின் மேல் அமர்ந்தான். பயத்தில் நெஞ்செல்லாம் லேசாய் நடுங்குவது போலிருந்தது. பையன் கொடுத்த பொட்டலத்தில் என்ன இருக்கும், என அறிய ஆவலாயும் இருந்தது.
டிரம்ஸிலிருந்து எடுத்த சதுரமான காகிதம் சுற்றிய பொட்டலம் கட்டிலுக்கடியிலிருந்த குப்பைக் கூடையில் பத்திரமாயிருந்தது. அந்தப் பொட்டலத்தை எடுக்கக் குனிந்த போது கூடவே அழைப்பு மணியின் ஒலியும் கேட்டது. சுந்தர் பதறிப் போனான். அந்தப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் போனான். எங்கே ஒளிப்பது என்று யோசித்தான். முகம் பார்க்கும் கண்ணாடிக்குப் பின்னால் ச்சேச்சே கீழே விழுந்து மானத்தை வாங்கலாம். அழைப்பு மணி மறுபடியும் ஒலித்தது. மேலே இருந்த வெண்டிலேட்டரைப் பார்த்தான். அதுதான் பத்திரமான இடம் ஆனால் வைப்பது எப்படி? குழாயின் மேல் கையைப் பிடித்து காலையூன்றி கஷ்டப் பட்டு வைத்தாகி விட்டது. அழைப்பு மணி விடாமல் ஒலித்தது. ஓடிப் போய்க் கதவைத் திறந்தான். எழுத்தாளர் கீர்த்தீயன் மாலையும் கையுமாய் நின்று கொண்டிருந்தார் அவருடன் கூட ஒருவரும் நின்று கொண்டிருந்தார்.
“என்ன சுந்தர் இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டிருந்தே?”
“பா…பா…பாத்ரூ…”
“பாத்ரூம் போயிருந்தயா? அதற்கு ஏன் இப்படி திணருகிறே முகமெல்லாம் ஒரே வேர்வையாய் வேர்க்கிறது”
“ அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க.” கீர்த்தீயன் உள்ளே வந்தார்
மாலையை கோட் ஸ்டேண்டில் மாட்டினார். சட்டையைக் கழற்றி விட்டு கட்டிலில் அமர்ந்தார். கூடவந்தவர் தயங்கி நின்றார். “மிஸ்டர் ராம்ராஜ் நீங்க கூட இருக்க வேண்டிய அவசியமில்லை இந்தப் பையன் இருக்கான் நீங்க வேறே ஏதாவது வேலையிருந்தா பாருங்களேன்” என்றதும் அந்த ஆள் சரிங்க என்று கிளம்பினான்.
சுந்தர் இப்போது சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான்.
கீர்த்தீயன் அவனைப் பார்த்து சிரித்தபடி, “சுந்தர் நீ ரொம்ப நேரத்திலேயே வந்துட்டயா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க... சார் கொஞசம் முன்னாலதான் வந்தேன்.”
அப்போது அழைப்புமணி கேட்டது.
சுந்தர் ஓடிப்போய் கதவைத் திறந்தான.
ரூம் பையன் இரண்டு காபியுடன் வந்திருநதான். ஒன்றைத் தான் எடுத்துக் கொண்டு சுந்தரையும் பருகச் சொன்னார். சுந்தர்க்கு தானும் கீர்த்தீயன் மாதிரி ஒரு பெரிய எழுத்தாளராகி விட வேண்டும் என்று நெடுநாளைய கனவு கண்டு கொண்டிருந்தான் வழிதான் புலப்படவில்லை. இன்று அவரையே கேட்டுவிட வேண்டியதுதான் என்று,
“ஐயா நானும் உங்கள மாதிரி ஒரு எழுத்தாளராகனும்னு ஆசை. அதுக்கு என்ன வழின்னு நீங்க சொல்லணும.”
அதைக் கேட்டதும் பலமாய் ஒரு முறை சிரித்துக் கொண்டு, “இது சாத்தியம்தான் ஆனால் பொறுமையோடு கொஞ்சம் போராட வேணும். தினசரி எதையாவது எழுத வேணும் எழுதுவதை எல்லா பத்திரிகைகளுக்கும் மாற்றி மாற்றி அனுப்ப வேணும் கதை திரும்பி வருகிறதே என்று சோர்ந்து போகாமல் சலிக்காமல் ஒரு வருஷம் எழுது. அடுத்த வருஷம் என்ன மாதிரி என்பதை நீயே புரிஞ்சுக்க முடியும் இவ்வளவுதான்" என்றதும் ஒரு மாபெரும் வித்தையை கற்றுக் கொண்ட சுந்தரின் மனது ஒரேயடியாய் துள்ளியது.
அப்போது ஒட்டடைக் குச்சியோடு ஒட்டடை அடிப்பவன் அறையுள் நுழைந்து பாத்ருமைத் திறந்தான் வெண்டிலேட்டர் ஓரமாய் ஏராளமாய் ஒட்டடைகள் தொங்கின.
(தொடரும்)
பகுதி-1 பகுதி-3


முகப்பு

ch_client = "msmuthukamalam";
ch_width = 728;
ch_height = 90;
ch_type = "mpu";
ch_sid = "Chitika Default";
ch_backfill = 1;
ch_color_site_link = "#0000CC";
ch_color_title = "#0000CC";
ch_color_border = "#FFFFFF";
ch_color_text = "#000000";
ch_color_bg = "#FFFFFF";

........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
2

a
சிறுகதை-79
ஊட்டவுட்டுத் தொரத்த ஆள் வந்தாச்சு!
-பாரதி தேவராஜ்.
மஞ்கள் கதிரவன் கண்ணைக் கரித்தது. மணி நாலிருக்கும் போலிருந்தது. அடுப்பு ஈரவெறகால் புகையைக் கிளப்பியது. கமலா கண்ணைக் கசக்கியபடி முள்ளுக்கட்டை ஒன்றை சொருகினாள்.
அடுத்த கணம், “மடோர்” என்று பானை உடைந்து மூணு படி, நெருச்சு போட்டு காய்ச்சிய சோளக்கஞசி அடுப்பைச்சுற்றி பரவலாய் ஓடியது.
இருபது வயதை கடந்த கமலாவின் நெஞ்சில் “திக்“ என்று பயம் பரவியது. கண்ணில் நீர் வெள்ளமாய் பெருகியது. என்ன பண்ணுவது என்று ஒன்றும் புரியவில்லை. பொழுது சாய்ந்து கொண்டிருந்தது.
தட்டு வணடிகள் வந்து சேர்ந்தன. கணுவாய் சோமையம்பாளையம் சோளக்காட்டுக்கு கதிரறுக்கப்போன தன் சின்னாத்தா வேறே வந்தால் தன்னைக் கொன்றே விடுவாள்.
தட்டுவண்டிகள்லே வர்றவங்களுக்கு சின்னாத்தா கஞ்சி காச்சச் சொல்லியிருந்தாள். மூணுமணிக்கே அடுப்பப்பத்தவச்சு, மூணு படி சோளத்தை ராயிக்கல்லுல போட்டு நெருச்சு, கஞ்சி காச்சத் துவங்கினாள் கமலா. பானைக்கடியில் எங்கேயோ லேசா விரிசல் விட்டிருக்கும் போலிருந்தது. கஞ்சி வெந்ததும் இறக்கி வைக்கலாம் என்றிருந்தாள்.
இப்படியாகும் என்று யார்கண்டா?
நல்லாம்பாளையம் கிராமத்தில் கமலாவின் அப்பா வீராசாமி பெருந்தனக்காரர்.அந்தஊரில் அவர்கள் வீடுதான் அரண்மனை மாதிரி.
பெரிய வீடு. பின்னால் மூன்றேக்கராவில் காய்கறி தோட்டம். தானி யங்கள் காயப்போட விஸ்தாரமான சிமெண்ட்தளங்கள் ஓரமாய் பெரிய கவலைகிணறு.எந்நேரமும் மோட்டர்தண்ணி வயலுக்கு பாய்ந்து கொண்டே இருக்கும்.
“அடிஏண்டி பனமரமாட்டம் நிக்கிறே? மலங்க மலங்க முழிக்கறே கண்ணுல வேறே தண்ணி. என்னத்தப் பண்ணினே. சொல்லித்தொலை.பொழுது சாஞ்சாச்சு. தட்டுவண்டிக வேறே வந்தாச்சு. கருதறுக்கப் போன உன்ற சின்னாத்தா வேறே வந்துருவாளே. சொல்லுடீ.” -என்று பக்கத்தூட்டு பங்கஜக்கா கேட்டதும் கமலத்திற்கு கொஞசம் துணிவு வந்தது.
அதுவரை சும்மா இருந்தவள் லேசான விசும்பலுடன்,“அது வந்துக்கா....வந்து......”
“சொல்றீ சிறிக்கி வயசுதா இருவதாகுது. ஒரு வேக்கியானத்தையும் காணம்.”
“தட்டுவண்டிலே வர்றவங்களுக்கு சின்னாத்தா கஞ்சி காச்சச் சொல்லியிருந்தா. நானும் மூணுமணிக்கே அடுப்ப பத்தவச்சு கஞ்சி காச்சுனே பானைக்கடியிலே எங்கியோ லேசா தூறுட்டிருக்கும் போலிருக்கு கஞ்சி வெந்து வர்ற சமயம் பளோர்னு சட்டி ஒடைஞ்சு முச்சூடும் கொட்டிப் போச்சுக்கா.”
“ஓகோ அவ்வளவு போதுமே. உங்க சின்னாத்தாளுக்கு இன்னிக்கி நீ அவ்வளவுதான். வெறகு கட்டை பொளக்கப் போகுது. எத்தன படி சோளம் போட்டே.”
“மூணுபடிக்கா.”
“மூணுபடியா உன்னய இன்னிக்கி ஊட்ட விட்டே தொரத்துனாலும் தொரத்திடுவா. பாரு. நானு மன்னாடும் சொல்லிட்டுதானே இருக்கேன். பாத்து பதவிசா நடந்துக்கண்ணு. நீ எங்கே உருப்படப்போறே. என்னக்கின்னாலும் ஒருநா உன்னை ஊட்டவுட்டு தொரத்ததான் போறா. அந்த கோவில் மேட்டு செல்லாயி சீரழிஞ்சா மாதிரி சீரழிஞ்சு ரோட்ரோடா அலையத்தான் போறே.” -என்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டு,
“ பொறைக்கு கொஞ்சம் மோர் குட்றீ.”
கமலாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
பத்துவயதில் தாயை இழந்த கமலாவுக்கு மறுவருடமே சின்னாத்தா வந்து சேர்ந்தாள்.
இதுவரை பட்ட துன்பம் இவ்வளவு என்று சொல்ல முடியாது. நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்று அடியும் உதையும் வார்த்தைகளும் வசவுகளும் வாங்கி வாங்கி மறத்துப் போனது..
இப்போதைய புதிய கவலை. நொடிக்கு நூறுதரம்
“உன்னை ஊட்டஉட்டு தாட்றன்னைக்குதான் எனக்கு விடிவுகாலம்” என்கிறாள். எதேச்சையாய் பக்கத்து வீட்டு பங்கஜத்திடம் இதுபற்றி விசாரிக்கப் போக, அவள் இதையே பெரிசு படுத்தி ஓடிப்போன செல்லாயிக்கு நேர்நத கதிகளை கதைகதையாய் மீண்டும் ஒருமுறை கூறி பயமுறுத்தத் துவங்கினாள்.
மாட்டு ஜலங்கைகள் ஒலிக்க நான்கைந்து வில்லுவண்டிகள் வரிசையாய் தோட்டத்தில் நுழைந்தன.
“ஏண்டி மச மசன்னு நிக்கறே .போ சீக்கிரமா மூஞ்சியக் கழுவீட்டு, தலையக்கட்டு. பொட்டீல உன்ற சீருக்கெடுத்த பட்டு சீலைய எடுத்து கட்டிக்க உன்னைய பொண்ணு பாக்க வந்திருக்காங்க.” என்று அவசரப்படுத்தினாள்.சின்னாத்தா.
மறுபடியும் அசையாமல் நின்ற கமலத்தைப் பார்த்து, “என்னடி சொல்லிட்டேயிருக்கேன்.”
“சின்னாத்தா கஞ்சிப்பானை ஒடஞ்சுபோச்சு.”
“எனக்குத் தெரியுமடி காலையிலேயே சொல்லணும்னிருந்தேன். அது தூறுட்டுப் போச்சு. தட்டுவண்டகாரங்கள அய்யர் கடையிலே சாப்பிடச் சொல்லி பணங்கொடுத்துட்டேன். போனது போகட்டும் நீ நல்லவிதமா அவிங்க போற வரைக்கும் ஒழுங்கா நடந்துக்க..”
இப்படி பேசுவது சின்னாத்தா தானா இதுவரை இல்லாத புதிய பாசத்தோடு பேசுவது கமலாவுக்கு வியப்பாகவும் இதமாகவும் இருந்தது.
நிஜமாகவே நல்ல வாழ்வு வந்துவிட்டதா? என்று சந்தோசப்பட்டாள். கை கால்கழுவ கிணற்றடிக்கு ஒரு துள்ளலுடன் ஓடிய கமலாவைக் கண்ட பங்கஜம் “என்னடீ ஒரே துள்ளல்”
கமலாவுக்கு சிரிப்பு வந்தது கூடவே, “அக்கா நீ சொன்ன மாதிரியே என்னை ஊட்டவிட்டு தொரத்த ஆளுக வந்துட்டாங்கக்கா”.
“அடிக்கள்ளி அடிச்சனா பாரு அப்பவும் திமிரடங்கலேபாரு.”.
பாரதி தேவராஜ் அவர்களது மற்ற படைப்புகள்
முந்தைய கதைகள் காண


Srcid=2853;Tarid=0;Adty=1;Width=468;Height=60;Skin=4;Banner=0;Filt=0;



முகப்பு

........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
2

ch_client = "msmuthukamalam";
ch_width = 728;
ch_height = 90;
ch_type = "mpu";
ch_sid = "Chitika Default";
ch_backfill = 1;
ch_color_site_link = "#0000CC";
ch_color_title = "#0000CC";
ch_color_border = "#FFFFFF";
ch_color_text = "#000000";
ch_color_bg = "#FFFFFF";



a
சிறுகதை-87-கதை
கண் தெரியாத காதல்?
-பாரதி தேவராஜ்.
”திங்கட்கிழமை பாக்கலாம். சீயூ.” பஸ்ஸை விட்டு இறங்கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய் விட்டது.
பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந்தார் சட்டென்று, “என்ன தாரணி மேடம்.”
“அட அதெப்படி நாந்தான்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?”
“:மேடம் எனக்கு கண்ணு மட்டும்தான் பார்க்க முடியாதே தவிர மத்த எல்லா பாகங்களும் உங்களவிட டபுளா வேலை செய்யும் ஒரு குரலை ஒருதடவை கேட்டாலே ஆழமா பதிவாயிடும் அடுத்த முறை அந்தக் குரலை கேட்டவுடனே இன்னார் தான்னு தெரிஞ்சுடும்.”
“சூப்பர்!” தாரணி கலகலவென்று சிரித்தாள்.
“சரி, இன்னிக்கு சனிக்கிழமை.ஆபிஸ்லே வேலையிருக்கோ?”
“இல்லே கண்ணுசாமி பேங்க் வரைக்கும் போகணும்.”
“அப்ப சவுகர்யமா போச்சு. நானும் அங்கதான் போகணும். கூட்டிட்டு போறீங்களா?”
“ஓயெஸ் போலாமே.”
“என்ன பேங்கலே பணம் எடுக்கணுமா?”
“இல்லே கண்ணுசாமி. ஒரு லோன் விசயமா மானேஜரப் பாக்கணும்.”
“சாரி மேடம்.உங்களுக்கெதுக்கு லோன்?”
“அட. நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா. வீட்லே வரன் பாத்துட்டிருக்காங்க. திடீர்னு முடிவாயிட்டா பணம் தேவைப்படுமே. அதுக்கோசரம்தான் அட்வான்சாக் கேட்டு வைப்போமேன்னு.”
“வாழ்த்துகள் மேடம். மணி என்னாச்சு?.”
“ஒம்பதரை ஆறது.”
“இன்னும் அரைமணி நேரமிருக்கே பேங்க் திறக்கறதுக்கு.”
“ஆமா கண்ணுசாமி. ஆபிஸ் பக்கந்தானே அங்கே போய்க் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போனா சரியாயிடும்.”
“அதுவும் சரிதான். ஆபிஸ் இன்னிக்கி திறந்திருக்குமில்லே?”
“ஜி.எம் வருவாரு ப்யூன் நடராஜன் கூட வந்திருப்பார்.”“அப்ப நடராஜ் கையாலே காப்பி சாப்பிட்டு போலங்கறீங்க. சரி போயிடலாம்.”
தாரணிக்கு இந்த வைகாசியோடு இருபத்தைந்து முடிகிறது. நல்ல சிவந்த உடல். கட்டான தேகம். எவரையும் வசிகரீக்கும் தன்மை.
ஆபிஸ் வந்துவிட்டது.
“அடடே கண்ணுசாமி. வாங்க இந்தப் பொண்ண எங்க புடுச்சீங்க”
“என்ன நடராஜன் சார் பேங்க் போலாம்னு புறப்பட்டேன். ஊர்லேருந்து பஸ்சப்புடுச்சு காலேஜ் பஸ் ஸ்டாப்பில வந்து இறங்கிட்டேன். ரோட்டைக் கிராஸ் பண்ணலாம்னு நின்னுட்டிருந்தப்ப தாரணி மேடம் வந்தாங்க. அவங்களும் பேங்குக்குத்தான் போறேன்னாங்க அது சரின்னு வந்தேன். மணி ஒம்பதரைதான் ஆச்சு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போலாம்னு ரெண்டு பேரும் வந்தோம்.”
“பாரப்பா அவனவன் ஆபிஸ்லே வேலை செய்யறதுக்கு வந்தா நீங்க ரெஸ்ட் எடுக்க வர்றீங்க. காபி சாப்பிடறிங்களா?”
“அப்புறம் அதுக்குத்தான் வந்திருக்கோம். போயிட்டு சீக்கிரமா வாங்க.”
காசை பர்சிலிருந்து எடுக்கப் போனார் கண்ணுசாமி.அதற்குள் தாரணியே கொடுத்தனுப்பினாள்.
“கண்ணுசாமி உங்களுக்கு பொறந்ததிலிருந்தே கண் தெரியாதா?”
“பொறந்தப்பல்லாம் கண்ணு நல்லாதான் தெரிஞ்சது. மூணாவது படிக்கற வரைக்கும் கண்ணு தெரிஞ்சுட்டுதான் இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கப்புறம் விஷக்காய்ச்சல் மாதிரி வந்துச்சு. கண்ணு அப்ப நீல நிறமா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. அந்த நேரத்திலே புளியங்கா அடிக்க எவனோ வீசின கல்லு என் கண்ணுலே பட்டுக் காயமாயிடுச்சு. ஆஸ்பத்திரிக்குப் போகாம எண்ணெயக் காய்ச்சி கண்ணுலே விட்டாங்க. அப்புறம் கொஞ்சமா தெரிஞ்ச பார்வையும் சுத்தமாப் போயிடுச்சு. அப்புறம் நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. நான் இருக்கிறது கிராமந்தானே கக்கூஸ் வசதியெல்லாம் கிடையாது. ஊருக்கு வெளியே காட்டுக்குள்ளதான் போகணும். கண்ணு தெரியாத நான் தனியாப் போக முடியாது .தம்பிதான் கூட்டிட்டுப் போகணும். அவம் பண்ற அட்டூழியம் சொல்லித் தீராது. சோறு போடற அம்மா ஒரு பக்கம் செத்துப் போற மாதிரி பேசுவா. தம்பி ஒரு பக்கம் இதனால சாப்பிடறதயே நிறுத்திட்டு தண்ணியக் குடிச்சுட்டே காலத்த ஓட்டினேன். வாரத்துக்கொரு தாட்டி அப்பா டவுன்லேர்ந்து வருவாரு. அவருதான் எனக்கு அனுசரணையா நடந்துப்பாரு. கொஞ்ச நாள் அவரால சகிக்க முடியாம கிருஸ்டியன் ஹாஸ்டல்ல சேத்தாரு.அங்கதான் பத்தாவது வரைக்கும் படிச்சேன் சேர் பின்ற தொழில கத்துக் கொடுத்தாங்க. பெரிய பெரிய ஆபிஸ்லே வேலை கிடைச்சது என்ன மாதிரி இருக்கறவங்கள வச்சு காண்ட்ராக்ட் எடுத்து செய்யறேன் ஏதோ ஒரளவுக்கு வசதியா இருக்கேன். இப்ப வீட்லே தாங்கு தாங்குன்னு தாங்கறாங்க. ஆனா அது எனக்கு இஷ்டமில்லை. உங்கள மாதிரி நாலு நல்ல சனங்க கூடப் பழகறதே மனசுக்கு நிம்மதி தருது. அது சரி என்ற கத பெரிசு அது இன்னக்கித் தீராது. நடராசண்ணே வந்தாச்சு போலிருக்கு காபி மணக்குதுங்க தாரணி மேடம்”
“ஆமா சாப்பிடுங்க. மணி பத்தரையாச்சு புறப்படலாம்.”
*******
பாங்கில் ஏகப்பட்ட கூட்டம்.
தாரணி, “கண்ணுசாமி உங்களுக்கென்ன பணமெடுக்கணுமா?”
“இல்ல மேடம். பாஸ் புக் என்ட்ரி போடணும். நான் பாத்துக்கிறேன். நீங்க மானேஜரப் பார்த்துட்டு வாங்க.”
தாரணி மானேஜர் அறைக்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் வெளியே வந்தாள். கண்ணுசாமி பாஸ்புக் என்ட்ரியைப் போட்டு விட்டு சோபாவில் அமர்ந்திருந்தார்.
“கண்ணுசாமி போகலாமா?”
“என்ன மேடம் அதுக்குள்ள வேலை முடிஞ்சிடுச்சா?”
“இல்லே கண்ணுசாமி. மானேஜர் ரொம்ப பிஸியாம். அடுத்த வாரம் வரச் சொன்னார்” அதே சமயம் தாரணி ஹேண்ட் பேக்கில் செல்போன் அழைத்தது.
“ஹலோ”
“நான் அம்மா பேசறேன். அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னார். சரவணா ஆஸ்பத்திரியிலே சேத்திருக்கோம் நீ உடனே புறப்பட்டு வா.”
“கண்ணுசாமி அப்பாவுக்கு உடம்பு முடியல்லே. ஆஸ்பத்திரிலே சேத்திருக்கா” நா புறப்படட்டுமா?”
“மேடம் உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா, நானும் கூட வரட்டுமா ஒரு ஆட்டோ புடுச்சு போயிரலாமா?” என்று கண்ணுசாமி கேட்கவும், தாரணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆஸ்பத்திரி பக்கம் தான் இருந்தாலும் இவர் எதற்கு. இவரை பார்க்கவே ஒரு ஆள் வேணும். இவர் வந்து என்ன செய்யப் போகிறார். இருந்தாலும் அவளது உள் மனசு அவரை அழைத்துப் போக அனுமதிக்கவே, “சரி வாங்க.” என்று ஒரு ஆட்டோவைப் பிடித்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள்.
வாசலில் தாரணியின் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தனர்.
“அக்கா அப்பாவ ஐசியூலே அட்மிட் பண்ணியிருக்கா உடனே இருபத்தையாயிரம் கட்டணும்றா என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல்லே. நம்மகிட்டே காசே கிடையாது. உன்னோட நகை ஏதாச்சும் வச்சு பணம் ஏற்பாடு பண்ணலாமாக்கா.”
“என்னோட நகைய வச்சாக் கூட அவ்வளவு தேறாதே. உள்ளே அப்பாவப் பார்க்க முடியுமா?”
“இல்லக்கா யாரையும் பாக்க அலவ் பண்ண மாட்டா.”
“கண்ணுசாமி அப்பாவ ஐசியூலே வச்சிருக்காங்களாம். யாரையும் உள்ள அனுமதிக்க மாட்டாங்களாம் நீங்க எப்படி. இங்கிருந்து ஏழுலே போய் காந்திபுரத்திலே இறங்கி அங்கிருந்து செம்மேட்டு பஸ் புடுச்சு ஊருக்குப் போயிடுவீங்களா?”
“மேடம் தப்பா நெனச்சுக்காதீங்க பணம் ஏதோ வேணும்னு சொன்ன மாதிரி கேட்டுச்சு. எவ்வளவு வேணும்னு தெரிஞ்சா நான் ஏதாவது உதவி பண்ணலாம் இல்லையா?”
“அவ்வளவு பணம் உங்க கிட்ட இருக்குமா? இருபத்தஞ்சாயிரம் வேணுமா. இன்னும் எவ்வளவு தேவைப்படுமோ தெரியல்லே. பேசாம ஜி.எச் சுக்குப் போயிடலாமான்னு யோசனை பண்றேன்.”
“மேடம் இந்த ஹேண்ட் பேக்க வாங்கிக்கங்க. அதிலே அம்பதாயிரம் இருக்கு. என் தம்பி கல்யாணத்துக்காக எடுத்தேன் அதை விட இதுதான் முக்கியம். இன்னும் வேணாலும் பாங்க்லே இருக்கு எடுத்துக்கலாம். நீங்க ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு பணம் கட்டணும்னு பார்த்துக் கட்டுங்க.” தாரணிக்கு பொட்டில் அறைந்த மாதிரி கிருகிருத்துப் போனது. ஏதை நம்பி எதற்காக கொடுக்கிறார்.
“மேடம் நீங்க எந்த யோசனையும் பண்ண வேண்டாம் நா எந்த எதிர்பார்ப்புலேயும் இதைக் கொடுக்கலே. மனிதாபிமானம்தான் உங்களுக்கு உதவறதுக்கு இப்ப எங்கிட்ட இருக்கே அதுக்காகக் கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். எடுத்துக்கங்க.”
******
பத்து நாட்களில் அப்பா தேறி வீடு வந்து சேர்ந்தார். தாரணியைப் பெண் பார்த்து விட்டுப் போனவர்கள் அப்பா நிலையால் ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆகி விட்டால் அப்புறம் சீர் செனத்தியெல்லாம் யார் செய்வார்கள். அதற்காக ஒரு லட்ச ரூபாய் முதலில் கொடுத்து விட வேண்டும் என்று கண்டிசன் எல்லாம் போட்டார்கள் இப்போதை நிலையில் கல்யாணம் செய்யவே முடியாத நிலை. அப்பாவின் உடல் தேறவே அங்கே இங்கே என்று கடனை வாங்கி இருக்கிற நகையெல்லாம் பாங்கில் வைத்து அப்பாவைப் பிழைக்க வைக்க வேண்டியிருந்தது. கடைசியில் எங்களால் இப்போதைக்கு முடியாது. நீங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டாள்.
மாலை மணி நான்கு இருக்கும். பத்து நாள் அலைந்த களைப்பில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.கதவை தட்டும் ஓசை கேட்டது,
தாரணிதான் கதவைத் திறந்தாள். கண்ணுச்சாமியும் அவர் அப்பாவும் நின்று கொண்டிருந்தனர். தாரணியின் மனசுக்கு இதமாயிருந்தது.
“வாங்க கண்ணுசாமி. அப்பாவா?”
“ஆமாம்மா.”
அப்பாவைப் பார்த்து ஒரு கூடை பழங்களை எடுத்து வைத்தார்கள். கண்ணுசாமிக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே தெரியவில்லை. அன்று மட்டும் அவர் பணம் கொடுத்துதவவில்லை என்றால் அப்பா பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா அன்று முழுக்க ஆஸ்பத்திரி வாசலிலே காத்திருந்து விசாரித்துக் கொண்டேயிருந்தார். இந்தப் பத்து நாளும் தினமும் ஒரு முறையேனும் வந்து விசாரித்து விட்டுச் செல்வார். அவருடைய அப்பா தன் அப்பாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
“எம் பையனுக்கு கண்ணுதான் குருடா போச்சு. வேறே எல்லாம் சம்பாரிச்சுட்டான். ஒரு கல்யாணத்தையும் பண்ண வேண்டியது என்கடமை. ஆனா பார்வையில்லாதவனுக்கு யார் பொண்ணு தருவா. எந்தப் பொண்ணு கட்டிக்க வருவா?”
தாரணியின் மனசு சட்டென்று முடிவெடுத்தது
“அப்பா அவங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா நான் அவரை ஏத்துக்கறேன். உங்களுக்கு பண உதவி செஞ்சதுக்கு மட்டுமில்லே அவரை முன்னாடியே மனசுலே விரும்பிட்டுதான் இருந்தேன்.சரியா கண்ணு. ..சரி சரிங்களா?
“சரிதான்.” என்பது போல கண்ணுசாமியும் ஆமோதித்தான் மனதுள் அவள் மேல் ஒருதலைக் காதலாயிருந்தது இவ்வளவு விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கவேயில்லை...
பாரதி தேவராஜ் அவர்களது மற்ற படைப்புகள்
முந்தைய கதைகள் காண


முகப்பு

Srcid=2853;Tarid=0;Adty=16;Width=728;Height=90;Skin=3;Banner=0;Filt=0;

........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
2

ch_client = "msmuthukamalam";
ch_width = 728;
ch_height = 90;
ch_type = "mpu";
ch_sid = "Chitika Default";
ch_backfill = 1;
ch_color_site_link = "#0000CC";
ch_color_title = "#0000CC";
ch_color_border = "#FFFFFF";
ch_color_text = "#000000";
ch_color_bg = "#FFFFFF";



a
சிறுகதை-87-கதை
கண் தெரியாத காதல்?
-பாரதி தேவராஜ்.
”திங்கட்கிழமை பாக்கலாம். சீயூ.” பஸ்ஸை விட்டு இறங்கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய் விட்டது.
பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந்தார் சட்டென்று, “என்ன தாரணி மேடம்.”
“அட அதெப்படி நாந்தான்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?”
“:மேடம் எனக்கு கண்ணு மட்டும்தான் பார்க்க முடியாதே தவிர மத்த எல்லா பாகங்களும் உங்களவிட டபுளா வேலை செய்யும் ஒரு குரலை ஒருதடவை கேட்டாலே ஆழமா பதிவாயிடும் அடுத்த முறை அந்தக் குரலை கேட்டவுடனே இன்னார் தான்னு தெரிஞ்சுடும்.”
“சூப்பர்!” தாரணி கலகலவென்று சிரித்தாள்.
“சரி, இன்னிக்கு சனிக்கிழமை.ஆபிஸ்லே வேலையிருக்கோ?”
“இல்லே கண்ணுசாமி பேங்க் வரைக்கும் போகணும்.”
“அப்ப சவுகர்யமா போச்சு. நானும் அங்கதான் போகணும். கூட்டிட்டு போறீங்களா?”
“ஓயெஸ் போலாமே.”
“என்ன பேங்கலே பணம் எடுக்கணுமா?”
“இல்லே கண்ணுசாமி. ஒரு லோன் விசயமா மானேஜரப் பாக்கணும்.”
“சாரி மேடம்.உங்களுக்கெதுக்கு லோன்?”
“அட. நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா. வீட்லே வரன் பாத்துட்டிருக்காங்க. திடீர்னு முடிவாயிட்டா பணம் தேவைப்படுமே. அதுக்கோசரம்தான் அட்வான்சாக் கேட்டு வைப்போமேன்னு.”
“வாழ்த்துகள் மேடம். மணி என்னாச்சு?.”
“ஒம்பதரை ஆறது.”
“இன்னும் அரைமணி நேரமிருக்கே பேங்க் திறக்கறதுக்கு.”
“ஆமா கண்ணுசாமி. ஆபிஸ் பக்கந்தானே அங்கே போய்க் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போனா சரியாயிடும்.”
“அதுவும் சரிதான். ஆபிஸ் இன்னிக்கி திறந்திருக்குமில்லே?”
“ஜி.எம் வருவாரு ப்யூன் நடராஜன் கூட வந்திருப்பார்.”“அப்ப நடராஜ் கையாலே காப்பி சாப்பிட்டு போலங்கறீங்க. சரி போயிடலாம்.”
தாரணிக்கு இந்த வைகாசியோடு இருபத்தைந்து முடிகிறது. நல்ல சிவந்த உடல். கட்டான தேகம். எவரையும் வசிகரீக்கும் தன்மை.
ஆபிஸ் வந்துவிட்டது.
“அடடே கண்ணுசாமி. வாங்க இந்தப் பொண்ண எங்க புடுச்சீங்க”
“என்ன நடராஜன் சார் பேங்க் போலாம்னு புறப்பட்டேன். ஊர்லேருந்து பஸ்சப்புடுச்சு காலேஜ் பஸ் ஸ்டாப்பில வந்து இறங்கிட்டேன். ரோட்டைக் கிராஸ் பண்ணலாம்னு நின்னுட்டிருந்தப்ப தாரணி மேடம் வந்தாங்க. அவங்களும் பேங்குக்குத்தான் போறேன்னாங்க அது சரின்னு வந்தேன். மணி ஒம்பதரைதான் ஆச்சு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போலாம்னு ரெண்டு பேரும் வந்தோம்.”
“பாரப்பா அவனவன் ஆபிஸ்லே வேலை செய்யறதுக்கு வந்தா நீங்க ரெஸ்ட் எடுக்க வர்றீங்க. காபி சாப்பிடறிங்களா?”
“அப்புறம் அதுக்குத்தான் வந்திருக்கோம். போயிட்டு சீக்கிரமா வாங்க.”
காசை பர்சிலிருந்து எடுக்கப் போனார் கண்ணுசாமி.அதற்குள் தாரணியே கொடுத்தனுப்பினாள்.
“கண்ணுசாமி உங்களுக்கு பொறந்ததிலிருந்தே கண் தெரியாதா?”
“பொறந்தப்பல்லாம் கண்ணு நல்லாதான் தெரிஞ்சது. மூணாவது படிக்கற வரைக்கும் கண்ணு தெரிஞ்சுட்டுதான் இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கப்புறம் விஷக்காய்ச்சல் மாதிரி வந்துச்சு. கண்ணு அப்ப நீல நிறமா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. அந்த நேரத்திலே புளியங்கா அடிக்க எவனோ வீசின கல்லு என் கண்ணுலே பட்டுக் காயமாயிடுச்சு. ஆஸ்பத்திரிக்குப் போகாம எண்ணெயக் காய்ச்சி கண்ணுலே விட்டாங்க. அப்புறம் கொஞ்சமா தெரிஞ்ச பார்வையும் சுத்தமாப் போயிடுச்சு. அப்புறம் நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. நான் இருக்கிறது கிராமந்தானே கக்கூஸ் வசதியெல்லாம் கிடையாது. ஊருக்கு வெளியே காட்டுக்குள்ளதான் போகணும். கண்ணு தெரியாத நான் தனியாப் போக முடியாது .தம்பிதான் கூட்டிட்டுப் போகணும். அவம் பண்ற அட்டூழியம் சொல்லித் தீராது. சோறு போடற அம்மா ஒரு பக்கம் செத்துப் போற மாதிரி பேசுவா. தம்பி ஒரு பக்கம் இதனால சாப்பிடறதயே நிறுத்திட்டு தண்ணியக் குடிச்சுட்டே காலத்த ஓட்டினேன். வாரத்துக்கொரு தாட்டி அப்பா டவுன்லேர்ந்து வருவாரு. அவருதான் எனக்கு அனுசரணையா நடந்துப்பாரு. கொஞ்ச நாள் அவரால சகிக்க முடியாம கிருஸ்டியன் ஹாஸ்டல்ல சேத்தாரு.அங்கதான் பத்தாவது வரைக்கும் படிச்சேன் சேர் பின்ற தொழில கத்துக் கொடுத்தாங்க. பெரிய பெரிய ஆபிஸ்லே வேலை கிடைச்சது என்ன மாதிரி இருக்கறவங்கள வச்சு காண்ட்ராக்ட் எடுத்து செய்யறேன் ஏதோ ஒரளவுக்கு வசதியா இருக்கேன். இப்ப வீட்லே தாங்கு தாங்குன்னு தாங்கறாங்க. ஆனா அது எனக்கு இஷ்டமில்லை. உங்கள மாதிரி நாலு நல்ல சனங்க கூடப் பழகறதே மனசுக்கு நிம்மதி தருது. அது சரி என்ற கத பெரிசு அது இன்னக்கித் தீராது. நடராசண்ணே வந்தாச்சு போலிருக்கு காபி மணக்குதுங்க தாரணி மேடம்”
“ஆமா சாப்பிடுங்க. மணி பத்தரையாச்சு புறப்படலாம்.”
*******
பாங்கில் ஏகப்பட்ட கூட்டம்.
தாரணி, “கண்ணுசாமி உங்களுக்கென்ன பணமெடுக்கணுமா?”
“இல்ல மேடம். பாஸ் புக் என்ட்ரி போடணும். நான் பாத்துக்கிறேன். நீங்க மானேஜரப் பார்த்துட்டு வாங்க.”
தாரணி மானேஜர் அறைக்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் வெளியே வந்தாள். கண்ணுசாமி பாஸ்புக் என்ட்ரியைப் போட்டு விட்டு சோபாவில் அமர்ந்திருந்தார்.
“கண்ணுசாமி போகலாமா?”
“என்ன மேடம் அதுக்குள்ள வேலை முடிஞ்சிடுச்சா?”
“இல்லே கண்ணுசாமி. மானேஜர் ரொம்ப பிஸியாம். அடுத்த வாரம் வரச் சொன்னார்” அதே சமயம் தாரணி ஹேண்ட் பேக்கில் செல்போன் அழைத்தது.
“ஹலோ”
“நான் அம்மா பேசறேன். அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னார். சரவணா ஆஸ்பத்திரியிலே சேத்திருக்கோம் நீ உடனே புறப்பட்டு வா.”
“கண்ணுசாமி அப்பாவுக்கு உடம்பு முடியல்லே. ஆஸ்பத்திரிலே சேத்திருக்கா” நா புறப்படட்டுமா?”
“மேடம் உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா, நானும் கூட வரட்டுமா ஒரு ஆட்டோ புடுச்சு போயிரலாமா?” என்று கண்ணுசாமி கேட்கவும், தாரணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆஸ்பத்திரி பக்கம் தான் இருந்தாலும் இவர் எதற்கு. இவரை பார்க்கவே ஒரு ஆள் வேணும். இவர் வந்து என்ன செய்யப் போகிறார். இருந்தாலும் அவளது உள் மனசு அவரை அழைத்துப் போக அனுமதிக்கவே, “சரி வாங்க.” என்று ஒரு ஆட்டோவைப் பிடித்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள்.
வாசலில் தாரணியின் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தனர்.
“அக்கா அப்பாவ ஐசியூலே அட்மிட் பண்ணியிருக்கா உடனே இருபத்தையாயிரம் கட்டணும்றா என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல்லே. நம்மகிட்டே காசே கிடையாது. உன்னோட நகை ஏதாச்சும் வச்சு பணம் ஏற்பாடு பண்ணலாமாக்கா.”
“என்னோட நகைய வச்சாக் கூட அவ்வளவு தேறாதே. உள்ளே அப்பாவப் பார்க்க முடியுமா?”
“இல்லக்கா யாரையும் பாக்க அலவ் பண்ண மாட்டா.”
“கண்ணுசாமி அப்பாவ ஐசியூலே வச்சிருக்காங்களாம். யாரையும் உள்ள அனுமதிக்க மாட்டாங்களாம் நீங்க எப்படி. இங்கிருந்து ஏழுலே போய் காந்திபுரத்திலே இறங்கி அங்கிருந்து செம்மேட்டு பஸ் புடுச்சு ஊருக்குப் போயிடுவீங்களா?”
“மேடம் தப்பா நெனச்சுக்காதீங்க பணம் ஏதோ வேணும்னு சொன்ன மாதிரி கேட்டுச்சு. எவ்வளவு வேணும்னு தெரிஞ்சா நான் ஏதாவது உதவி பண்ணலாம் இல்லையா?”
“அவ்வளவு பணம் உங்க கிட்ட இருக்குமா? இருபத்தஞ்சாயிரம் வேணுமா. இன்னும் எவ்வளவு தேவைப்படுமோ தெரியல்லே. பேசாம ஜி.எச் சுக்குப் போயிடலாமான்னு யோசனை பண்றேன்.”
“மேடம் இந்த ஹேண்ட் பேக்க வாங்கிக்கங்க. அதிலே அம்பதாயிரம் இருக்கு. என் தம்பி கல்யாணத்துக்காக எடுத்தேன் அதை விட இதுதான் முக்கியம். இன்னும் வேணாலும் பாங்க்லே இருக்கு எடுத்துக்கலாம். நீங்க ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு பணம் கட்டணும்னு பார்த்துக் கட்டுங்க.” தாரணிக்கு பொட்டில் அறைந்த மாதிரி கிருகிருத்துப் போனது. ஏதை நம்பி எதற்காக கொடுக்கிறார்.
“மேடம் நீங்க எந்த யோசனையும் பண்ண வேண்டாம் நா எந்த எதிர்பார்ப்புலேயும் இதைக் கொடுக்கலே. மனிதாபிமானம்தான் உங்களுக்கு உதவறதுக்கு இப்ப எங்கிட்ட இருக்கே அதுக்காகக் கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். எடுத்துக்கங்க.”
******
பத்து நாட்களில் அப்பா தேறி வீடு வந்து சேர்ந்தார். தாரணியைப் பெண் பார்த்து விட்டுப் போனவர்கள் அப்பா நிலையால் ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆகி விட்டால் அப்புறம் சீர் செனத்தியெல்லாம் யார் செய்வார்கள். அதற்காக ஒரு லட்ச ரூபாய் முதலில் கொடுத்து விட வேண்டும் என்று கண்டிசன் எல்லாம் போட்டார்கள் இப்போதை நிலையில் கல்யாணம் செய்யவே முடியாத நிலை. அப்பாவின் உடல் தேறவே அங்கே இங்கே என்று கடனை வாங்கி இருக்கிற நகையெல்லாம் பாங்கில் வைத்து அப்பாவைப் பிழைக்க வைக்க வேண்டியிருந்தது. கடைசியில் எங்களால் இப்போதைக்கு முடியாது. நீங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டாள்.
மாலை மணி நான்கு இருக்கும். பத்து நாள் அலைந்த களைப்பில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.கதவை தட்டும் ஓசை கேட்டது,
தாரணிதான் கதவைத் திறந்தாள். கண்ணுச்சாமியும் அவர் அப்பாவும் நின்று கொண்டிருந்தனர். தாரணியின் மனசுக்கு இதமாயிருந்தது.
“வாங்க கண்ணுசாமி. அப்பாவா?”
“ஆமாம்மா.”
அப்பாவைப் பார்த்து ஒரு கூடை பழங்களை எடுத்து வைத்தார்கள். கண்ணுசாமிக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே தெரியவில்லை. அன்று மட்டும் அவர் பணம் கொடுத்துதவவில்லை என்றால் அப்பா பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா அன்று முழுக்க ஆஸ்பத்திரி வாசலிலே காத்திருந்து விசாரித்துக் கொண்டேயிருந்தார். இந்தப் பத்து நாளும் தினமும் ஒரு முறையேனும் வந்து விசாரித்து விட்டுச் செல்வார். அவருடைய அப்பா தன் அப்பாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
“எம் பையனுக்கு கண்ணுதான் குருடா போச்சு. வேறே எல்லாம் சம்பாரிச்சுட்டான். ஒரு கல்யாணத்தையும் பண்ண வேண்டியது என்கடமை. ஆனா பார்வையில்லாதவனுக்கு யார் பொண்ணு தருவா. எந்தப் பொண்ணு கட்டிக்க வருவா?”
தாரணியின் மனசு சட்டென்று முடிவெடுத்தது
“அப்பா அவங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா நான் அவரை ஏத்துக்கறேன். உங்களுக்கு பண உதவி செஞ்சதுக்கு மட்டுமில்லே அவரை முன்னாடியே மனசுலே விரும்பிட்டுதான் இருந்தேன்.சரியா கண்ணு. ..சரி சரிங்களா?
“சரிதான்.” என்பது போல கண்ணுசாமியும் ஆமோதித்தான் மனதுள் அவள் மேல் ஒருதலைக் காதலாயிருந்தது இவ்வளவு விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கவேயில்லை...
பாரதி தேவராஜ் அவர்களது மற்ற படைப்புகள்
முந்தைய கதைகள் காண


முகப்பு

Srcid=2853;Tarid=0;Adty=16;Width=728;Height=90;Skin=3;Banner=0;Filt=0;

........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
2

a
சிறுகதை-86-கதை
காகிதக் கால்கள்.
-பாரதி தேவராஜ்.
அபாண்டமாய் சுரேஷ் மேல் அந்த பழி வந்த போது என்னால் நம்பவே முடியவில்லை. இந்தக் கழுதையா அப்படிச் செய்தது. முணுக்முணுக்கென்றிருந்து விட்டு இந்த வேலை செய்திருக்கிறானே? ஸ்கூல் விட்டு வீட்டுக்குப் போனதும் படுவாவை உண்டு இல்லை என்று பண்ணிவிட வேண்டியதுதான்.
ஒழுங்கான படிப்பு கிடையாது. வாத்தியார் பிள்ளை மக்கு என்பது சரியாய்தான் ஆகிவிட்டது. சுரேஷ் என் மகன் என்பதற்காக என்ன செய்ய முடியும் படிடா என்று கண்டிக்கலாம். படிக்கிற மாதிரி பாவ்லா பண்ணுவதற்கு என்ன செய்ய முடியும்? அவன் அதிர்ஷ்டமோ என் நேரமோ பிளஸ்டூவைத் தாண்ட வைத்தாயிற்று.
வேலை வெட்டியில்லாத தண்டபசங்களோடு சுற்றி கெட்டுப்போய் விடக்கூடாது என்று கவலைப்பட்டு சுப்பையா ஸ்டோரில் சேர்த்து விட்டேன்.
சுப்பையாவும் பரவாயில்லை. “சார் பையன் சுறுசுறுப்பா வேலை செய்யறான். வர்ற கஷ்டமர் கூட ரொமப அப்ரிசேட் பண்றாங்க சார்.”என்று சர்டிபிகேட் கொடுத்த போது ஏதோ இல்லாத குறை எப்படி எல்லாமோ வரக் கனவு கண்டு இப்போதைக்கு இதுவே இருக்கட்டும் என்ற நினைத்த மறுநாளே குண்டைத் தூக்கிப் போட்டாற்போல இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு நிக்கறானே...
காலையில் ஸ்கூலுக்கு லேட்டாய் போயிடுச்சேன்னு அவசரஅவசரமா சைக்கிள் மிதிக்கிறேன். சுப்பையா பரபரப்பாய் ஓடி வந்து, ”வாத்தியார் சார் இப்படி கொஞசம் வந்துட்டுப் போங்களேன்” -கூப்பிட்டார் இதென்ன தொந்தரவு வயசான காலத்திலே அனாவசியமாய் ஒரு பேச்சு வாங்கக்கூடாது என்று நினைத்து நேரத்தோடு புறப்பட்டவனுக்கு இப்படி ஒரு சோதனை.
கடையை நெருங்கிய போது சுரேஷைக் குற்றவாளி போல நிற்க வைத்து நாலைந்து பேர் விசாரித்துக் கொணடிருந்தனர்.
”வாங்க வாத்தியார் சார் உங்க பையன் பண்ணியிருக்கிற வேலையைப் பாத்திங்களா? மீசை கூட சரியா முளைக்கலே இப்பவே இவனுக்குப் பொண்டாடடி வேணுமாமாம். ஏம் பொண்ணுக்கு காதல் கடிதாசி கொடுக்கறான்யா அதுவும் எப்ப? எங்க வீட்டுக்கு நாலு பேர் பொண்ணு பாக்க வந்திருக்காங்க கொஞசங்கூட பயமில்லாம லவ் லெட்டர் கொடுத்தனுப்பறான் சார் நியாயமான்னு நீங்களே விசாரிங்க” எதிர் வீட்டு குப்புசாமி குதித்தார்.
மனசுக்குள் பதட்டமாயிருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், “உங்களப் பாதிக்கிற அளவு நிச்சயம் விடமாட்டேன். டேய் சுரேஷ் நீ வீட்டுக்குப் போடா” என்றேன்.
”அப்பா எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா நா எந்த லெட்டரும் எழுதலப்பா.” சுரேஷ் கண் கலங்கியபடி சொன்னான் அதில் சற்று சலனம் கொள்ளச் செய்தது.
என்னய்யா பெரிய மனுசன்னு விசாரிக்கச் சொன்னா நீ என்னவோ தப்பிக்கப் பாக்கறீயே” குப்புசாமியின் வார்த்தைகள் தடிக்கவும் சுப்பையா குறுக்கிட்டு மரியாதையா பேசு... கையை ஆட்டினார் அவரை அமைதிப்படுத்த.
”ஆத்திரப்படாதிங்க. இப்ப என்ன நடந்தது எம் பையன் லெட்டர் எழுதி உங்க பொண்ணுகிட்ட கொடுத்தானா?”
”ஆமாய்யா அதனால பொண்ணு பார்க்க வந்தவங்க எந்திரிச்சு போயிட்டாங்க.இதுக்கு ஒரு பதில் சொல்லியே ஆகணும்.”
“எங்க அந்த லெட்டரக் கொடுங்க”
லெட்டரை கையில் கொடுத்தார்.
”லெட்டரைத் தவிர வேறு ஒண்ணும் தப்பு தண்டா நடக்கலையே?”
”இல்லை”
”இவன்தான் எழுதினான்னு எப்படி உறுதியாச் சொல்றீங்க?”
இதென்ன இந்த குழந்தையைக் கேளுங்க”
ஏம்மா யார் கொடுத்தாங்க இந்த லெட்டரை... இவனா?” சுரேஷைக் காட்டிக் கேட்டேன்.
”இல்லை”
”ஏய் பொய் சொல்றயா. நீதான எதிரு கடைல நிக்கற மாமா தான் கொடுத்தார்னே இப்ப இல்லேங்கறே.”
குழந்தை மலங்க மலங்க விழித்துவிட்டு, ”ஆமா இந்த மாமாதான் கொடுத்தார்.”
”போதுமா”
”சரி நா விசாரிக்கறேன்.பையன் இனிமே உங்க வீட்டு விசயத்தில தலையிட மாட்டான். நா கியாரண்டி.” என்றேன்.
”சார் நீங்க புறப்படுங்க” என்றார் சுப்பையா.
நானும் புறப்பட்டு வந்து விட்டேன். முதல் பீரியட் லிஸர்தான் இரண்டாவது பீரியட் அக்கௌண்டன்ஸி நோட்ஸ் கொடுக்கணும். பீரோவிலிருந்த பழைய நோட்சை எடுத்துக் கொண்டு டேபிள் முன் அமர்ந்து ஒரு பார்வை விட்டேன். சட்டென அதிர்ந்து போனேன். அந்தக் கடிதத்தையும் எடுத்துப் பார்த்தேன் சந்தேகமே இல்லை. இந்த நோட்டு யாருடையது என்று பார்த்தேன். சுப்பையாவுடையது. பத்து வருசத்துக்கு முந்தியது. சுப்பையா என்னுடைய மாணவன்தான். எழுத்து முத்து முத்தாயிருக்கும். அவனை மாதிரி எழுதணும் என்று கண்டித்து கண்டித்து சுரேஷின் எழுத்தும் கிட்டத் தட்ட இது போலவே இருக்கும். ஆனால், ஓரு வித்தியாசம் சுப்பையாவுக்கு’கே’ வுக்கும் ‘கோ’வுக்கும் வித்தியாசம் தெரியாது எங்கே கால் போடவேண்டும் என்பது சந்தேகம். சந்தேகமே இல்லை சுப்பையாவுடையதுதான்.’அனபே’என்று துவங்கிய கடிதத்தில் “அன்போ” எனத் துவங்கியிருப்பதே சாட்சி.”
மத்தியானம் சாப்பாட்டைக் கூட கவனிக்காமல் சுப்பையாவின் கடைக்குப் போனேன்.
”என்ன சுப்பையா கடிதாசி நீதானே எழுதினே?” என நேரடியாகவே கேட்டேன்.
”சார் என்னை மன்னிச்சுடுங்க. குப்புசாமி எனக்கு முறைமாமன் அநதப் பொண்ணும் நானும் மனப்பூர்வமா விரும்பறோம். மாமா உத்யோகத்திற்கு போகிற மாப்பிள்ளைக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்” என்றார். அதனாலதான் இப்படி செஞ்சேன். ஆனா தெரியாத்தனமா பழி சுரேஷ் மேல விழுந்துடுச்சு.அந்த நேரத்தில தைரியமா நான்தான் எழுதினேன் சொல்ல மனசு வர்லே.”
நான் வந்ததைப் பார்த்ததும் வந்த குப்புசாமி எல்லாமே கேட்டிருக்க வேண்டும். வாத்தியார் சார் என்னையும் மன்னிச்சுடுங்க மாப்பிள்ளைய பத்தி முன்னாடியே விஷயம் கேள்விப்பட்டேன் ஆனா முறைப்படி கேட்காம எப்படி பொண்ணக் கொடுக்க முடியும். அதுக்காக எத்தனை நாளைக்கு பொண்ணை வச்சிட்டிருக்க முடியும்.” என்று குப்புசாமி சமாதானமானார்.
எனக்குள் சிரிப்பு எழுந்தது சுப்பையாவைப் பார்த்து, “என்னப்பா காதலுக்கு கண் இருக்குதோ இல்லையோ உன்னோட இந்தக் காதலுக்கு ஒருகால் அதிகமா இருக்குப்பா.” என்றதும் சிரிப்பலைகள் கடையைக் கடந்தது.
சுப்பையாவுக்கு வெட்கம் அதிகமானது.
பாரதி தேவராஜ் அவர்களது மற்ற படைப்புகள்
முந்தைய கதைகள் காண


Srcid=2853;Tarid=0;Adty=1;Width=468;Height=60;Skin=4;Banner=0;Filt=0;



முகப்பு

ch_client = "msmuthukamalam";
ch_width = 728;
ch_height = 90;
ch_type = "mpu";
ch_sid = "Chitika Default";
ch_backfill = 1;
ch_color_site_link = "#0000CC";
ch_color_title = "#0000CC";
ch_color_border = "#FFFFFF";
ch_color_text = "#000000";
ch_color_bg = "#FFFFFF";


........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
2

ch_client = "msmuthukamalam";
ch_width = 728;
ch_height = 90;
ch_type = "mpu";
ch_sid = "Chitika Default";
ch_backfill = 1;
ch_color_site_link = "#0000CC";
ch_color_title = "#0000CC";
ch_color_border = "#FFFFFF";
ch_color_text = "#000000";
ch_color_bg = "#FFFFFF";



a
சிறுகதை-84 -கதை
மணியின் மேல் காதல்?
-பாரதி தேவராஜ்.
ஏழு மணிக்கே வெய்யில் சுர்ர்ரென்று உறைத்தது.
சீதாவை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போகவேணடும். மாதத்தில் இரண்டாவது புதன்கிழமை டாக்டரிடம் சீதாவை காட்ட வேண்டிய நாள். எது எப்படி இருந்தாலும் அன்றைக்கு ஒத்திப் போட முயலுவதில்லை. இது அவள் வாழ்க்கைப் பிரச்சனை, நான்காண்டுகள் ஒரு சடங்கு போல தவறாமல் நடந்து வருகிறேன்
“சீக்கிரம் புறப்படும்மா. நாழியாறது. லேட்டா போனா டோக்கன் கிடைக்காது.”
“இதோ வந்துட்டேன்பா”- சமையல் அறையிலுருந்து சீதாவின் குரல் வந்தது.
செருப்பு மாட்டிக் கொண்டு வாசலுக்கு வந்த போது எதிர்வீட்டில் ஆட்டோ ஒன்று படபடப்போடு வந்து நின்றது. அதிசயமாய் யாரென்று நிமிர, எதிர் வீட்டு மணி நாலைந்து சூட்கேசுகளுடன் தோளில் ஒரு ஜோல்னா பை தொங்க இறங்கியது தெரிந்தது.
சட்டென்று முகம் மாறியது உள்ளே போகலாமா என்று தயங்கிய போது, குட்மார்னிங் அஙகிள்“ அவன் பழசை அடியோடு துடைத்து விட்டுச் சொன்னான்.எனக்கும் தயக்கம் குறைந்தது.
“குட்மார்னிங் மணி. சௌக்கியமா?”
“நல்ல சௌக்கியம். எங்கியோ புறப்பட்டீங்க போலிருக்கு.”
நடையில் சீதா செருப்பை மாட்டிக் கொண்டிருந்தாள்.
“ஆமா மணி. டாக்டர்கிட்ட போகணும். சாயந்திரம் பாப்போம்.”
அவனை அப்போதைக்கு கழட்டி விட்டேன்.
“ஓகே! அஙகிள் சீயு.” அதற்குள் அவன் அம்மா பெட்டிகளைத் தூக்கிப் போனாள். அவன் ரொம்பவும் இங்கிதமானவன்தான். சீதா அவனைப் பார்க்கும் முன் உள்ளே போய்விட்டான்.
மணி ரொம்பவும் நல்ல இளைஞன்தான்.வயது இருபத்தெட்டிருக்கும்.
சிவந்தமேனி. சுருட்டையாய் முடி.அகன்ற முகம். எடுப்பான மூக்கு. தேக்குக்கட்டை போன்ற அகன்ற தோள்கள் உயரம்கூட இப்போது கூடி விட்டான்.யாரிடமும் பழகும் வெள்ளை உள்ளம்.
ஐந்தாணடுகளுக்கு முன்பாக முதல்முதலாய் இந்த வீட்டுக்கு வந்த போது அறிமுகமானவன் ஐம்பது வயது நிரம்பிய என்னோடு மிக நெருங்கிய நண்பனாகிப் போனான். ஏதோ கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிக்யுட்டாக பணிபுரிகிறான். கணிசமான சம்பளம். புதுப் படம் ஏதாவது ரிலீஸானால் போதும் உடனே ரிசர்வ் செய்து விடுவான். கச்சேரி காலச்சேபம் இலக்கியவிழா நாடகம் என எங்கு போனாலும் ஜோடியாக சுற்றினோம்.
சீதாவுக்கு அவன் மேல ஒருகண் என ரொம்பவும் தாமதமாகத்தான் எனக்குத் தெரிந்தது. அது கூட நானாகத் தெரிந்து கொள்ளவில்லை.
பெங்களுரிலிருந்து வந்த என் தங்கைதான் கண்டுபிடித்தாள்.மணி என்னதான் நல்லவனானாலும் காதல் என்றாலே சீறும் சொந்தக்காரர்களுக்குப் பயப்பட்டேன். இதைத் துண்டிக்க நினைத்தேன்.
மணி ரொம்பவும் முன்னெச்சிரிக்கைக்காரன் என்பதை அதில்தான் கண்டேன். காலையில் நான் ஏதாவது சமாதானம் சொல்லி அவன் வரவைத் துண்டிக்க எண்ணினேன்.
ஆனால் மாலையில் அவனே வந்தான்.
“அங்கிள் எனக்கு சென்னைக்கு டிரான்ஸ்பர் வந்துடுச்சு. நாளைக்கே அங்க போய் ஜாயின் பண்ணனும். ராத்திரி சேரன்லே ரிசர்வ் பண்ணியாச்சு. உங்களோட ரொம்ப பழகிட்டேன். பிரியறதுக்கு மனசு ரொம்ப கஷ்டப்படுது. என்றான்.
என்னுடைய கணகளிலும் ஜலம் பெருகியது. என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவன் போய்விட்டான்.
அவன் போன பிறகு எங்கெல்லாமோ வரன்கள் வருவதும் போவதுமாய் நாட்கள் கழிந்தன.ஒன்று கூட குதிரவில்லை. ஒன்று ஜாதகம். இல்லையென்றால் சீர்செனத்தி. ரெண்டும் விட்டால் வரன் லடசணமாயில்லாதது. இப்படி ஒரு வருஷம் முடிந்தது. அந்தத் தீபாவளியை ஏதோ சொரத்தில்லாமல்லாமல் கொண்டாடினோம்.
கொல்லையில் புடவை காயப்போட்டுக் கொணடிருந்தாள் சீதா. திடீரென்று எங்கிருந்தோ ஒரு ராக்கெட் வெடி அவள் முகத்தில் மோதி வெடித்தது.வெறும் காயம் எனறு ஏதோ ஆயின்மெணட் வாங்கிப் போட்டோம். புண் சரியாகிப் போனது. ஆனால் அந்த இடம் மட்டும் கன்னம் முழுக்க மேரி பிஸ்கட் அளவுக்கு வெள்ளைத் திட்டாக நின்று போனது.
டாக்டரிடம் காட்டிய போது ஸ்கின் ஸ்பெஷலிஸ்டை கன்சல்ட் பண்ணச் சொன்னார். ஸ்பெஷலிஸ்ட்டிடம்தான் இநத நான்கு வருடமும் மாதம் தவறாது இரண்டாவது புதன்கிழமை போய் காட்டி வருகிறோம்.ஆயின்மெணட்டும் பில்சுமா எழுதிக் கொடுப்பார். நான்கு வருட மருத்துவத்தில் லேசாய் குணம் தெரிந்த மாதிரி இருக்கிறது. வெள்ளை வட்டத்தைச் சுற்றி லேசாய் பழுப்பு படர்கிறது.
“இது நல்ல அறிகுறி நாளடைவில் சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னார். இப்படியானதிலிருந்து சொந்தபந்தம் முழுக்க இவளுக்கு இப்படியானதையே பேசினார்கள் எந்த வரனும் அமையவில்லை.
மனசு முழுக்க சோகத்தை தேக்கியபடி இதோ நாட்களை கடத்துகிறேன்.
“அப்பா டோக்கன் எட்டுன்னு கூப்பிடறாங்க நாமதானே?”
தூக்கத்திலிருந்து விடுபட்டவனாய் “ஆமாம்மா வா போகலாம்.” என்றேன்.
டாக்டரின் அறை பளிச்சென்று வெள்ளையிலிருந்தது.
“உக்காருங்க சார். வாம்மா இப்படி சீதா தானே? இம்ப்ருவ்மெனட் என்னான்னு பார்ப்போம்.”
டாக்டர் பரிசோதனை செய்தார்.
“நல்லா இம்ப்ரூவ் ஆகியிருக்கு. இன்னொரு ஆயின்மென்ட் மாத்திப் பார்போம். இன்னும் ரெண்டொரு வாரத்திலே குணமாயிடும்.
வெளியே வந்தோம்.
மாலையில் மணியின் வரவை என்னால் தடுக்க முடியவில்லை.பழையபடி எங்கள் நட்பு துளிர்த்தது. இப்போது அவன் சீதாவை பார்ப்பது கூட இல்லை.
டாக்டர் சொன்னபடி ஒரே வாரத்தில் அது காணாமல் போனது. சீதா இப்போது பழைய முகத்தோடு மலர்ச்சியாயிருந்தாள். அநத வாரத்தில் ஒரு கல்யாணம் வந்தது. குடும்பத்தோடு போனோம் முன்பு பெண் பார்த்து விட்டுப் போனவர்கள் சீதாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். மறுபடி சம்பந்தம் பேச வருவதாகச் சொன்னார்கள்.
நான் சரியாக பதில் சொல்லவில்லை.
மறுநாள் மணியைப் பார்த்தேன்.
“மணி ஒரு விஷயம் சீதா உன்னே விரும்புறா.இல்லையா?”
“ ஆமா சார்”
“உனக்கும் விருப்பம்தானே.?”
“ஆமா சார்” சலனமில்லாமல் சொன்னான்.
“ஆறுமாசத்துக்கு முன்னேயே நான் இந்த முடிவுக்கு வந்துட்டேன். மணி ஆனா அப்போ நான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சிருந்தா மத்தவங்க என்ன நினைப்பாங்க? ஏதோ பொண்ணுக்கு வியாதி. கன்னம் கூட வெள்ளையாயிருக்கு அதான் உன் தலையிலே கட்டி வச்சுட்டேன்னு பேசுவாங்க. இப்போ முழுசுமா குணமாயிடுச்சு அதான் உன்னைக் கேட்டேன்.” என்றேன்.
மணியின் கண்கள் பனித்திருந்தன.
பாரதி தேவராஜ் அவர்களது மற்ற படைப்புகள்
முந்தைய கதைகள் காண


முகப்பு

Srcid=2853;Tarid=0;Adty=16;Width=728;Height=90;Skin=6;Banner=0;Filt=0;

........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
2

a
சிறுகதை-81
திடீர் மருமகள்!
-பாரதி தேவராஜ்.
திங்கட்கிழமை காலைச் சூரியன் கிளம்பி உஷ்ணத்தைக் கூட்டியது.
துடியலூர் சந்தை நாள். ஆடு, மாடு வியாபாரம் செமத்தியாய் நடக்கிற நாள். இன்று பஸ்ஸில் பிரயாணம் செய்வது நரக வேதனை.
சீதா தன் வயிற்றுப் பிழைப்புக்காக தினசரி பெரியநாய்க்கன் பாளையம் வரை சென்று பேக்டரி ஒன்றில் வேலை பார்த்து மாலையில் திரும்புகிறவள்.
சாயிபாபா கோவிலருகே பஸ் நின்ற போது சீதா ஏறிக் கொண்டாள். கூட்டத்தில் நீந்தி நெரிசலில் சிக்கி நுழைத்துக் கொண்டாள். பெரிய கில்லாடியான பெண் அவள்!
தெரிந்த முகம் ஏதாவது இருக்கிறதா என்று நோட்டம் விட்டாள்.
அப்போதுதான் அது நடந்தது.
ஒரு வயதானவர்.கட்டுக்குடுமி. தொளதொள சட்டை முழங்கால் வரை தொங்கியது. முகம் முழுக்க பயம் பதுங்கியிருந்தது. அடிக்கடி அடிமடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.பெரியவர் மாடு வாங்க வந்திருக்க வேண்டும். குறைந்தது ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாயாவது மடியில் கனக்கிறது என்று புரிந்து கொண்டாள் சீதா. சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள். மறுகணம் ஒருதிட்டம் உருவானது.
“அடடே மாமா.என்ன இப்படி? அதிசயமா இருக்கே! இப்படி வாங்க என்று பெரியவரின் கையைப் பிடித்து பெண்கள் நின்றிருந்த பக்கமாய் இழுத்தாள்.
பெரியவர் சுத்தமாய் பயந்து விட்டார்.
“யாருடி மாமா? வுட்றீ என்னை!”
பெரியவர் திமிறினார் சீதாவோ விடவில்லை.
என்னதான் உங்க மகன் உங்களை திட்டினாலும் இப்படியா கோவிச்சுகிட்டு போவாங்க? அதுக்காக மருமகங்கறதை ஏன் மறைக்கணும்? நான் உங்களை ஒண்ணும் சொல்லையே!
பஸ் கவுண்டம்பாளயத்தில் நிற்கவும் இரண்டு சீட்கள் காலியானது பெரியவரை உள்ளே தள்ளி, ”நீங்க உக்காருங்க அப்புறம் பேசலாம். எதுக்காக இந்த வயசான காலத்தில சந்தை சந்தையா அலைஞ்சு மாடு வாங்கி பண்ணயம் பாக்கறீங்க.! மகன் இன்ஸ்பெக்டர்! கை நிறைய சம்பாத்தியம் அக்கடான்னு உக்காந்து சாப்பிட வேண்டியதுதானே?”
சீதா சத்தம் போட்டுச் சொன்னாள்.
இநத வார்த்தையை சிந்திய மறுவினாடி பெரியவரைச் சுற்றி நின்ற நாலுபேர் புறப்பட இருந்த பஸ்ஸை விட்டு மளமளவென்று இறங்கினர்.
பெரியவர் ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தார்.
“நீ என்னம்மா சொல்றே? எனக்கு பையனே கிடையாதே”. என்றார் பயத்தில்.
“இல்லாட்டி பரவாயில்லை.உங்க பணம் பத்திரமாயிருக்கா பாருங்க?”
பெரியவருக்கு பக்கென்று நினைவு வந்தவராய் மடியைத் தொட்டுப் பார்த்தார்.
மடியிலிருந்த பணமூட்டை கீழே பாதி கிழிக்கப்பட்டு பிதுங்கப் பார்த்தது. இன்னும் கொஞசம் கிழிந்திருந்தாலும் பையிலிருந்த பணம் எட்டாயிரமும் கை மாறியிருக்கும் என்பதை சட்டென்று உணர்ந்தார்.
“பெரியவரே நான் பஸ்சுலே ஏறினப்போ உங்க நிலைமை என் கண்ணில பட்டுச்சு உங்க மடியில இருக்கிற பணத்தை அடிச்சுட்டுப் போறதுக்கு நாலு திருட்டுப் பசங்க உங்கள நெருக்கறத பாத்தேன் அவுங்க கிட்டயிருந்து காப்பாத்ததான் மாமான்னும் இன்ஸ்பெக்டர்ன்னும் கதை வுட்டேன் அவுங்க பயந்து இறங்கி போயிட்டாங்க.” என்றாள் சீதா.
பெரியவர் கண்ணில் நீர்வடிய, “நீ என் மருமகளா இல்லாட்டாலும் மக மாதிரி என்னை காப்பாத்தினியே நீ நல்லாயிருக்கணும் தாயி.”
பாரதி தேவராஜ் அவர்களது மற்ற படைப்புகள்
முந்தைய கதைகள் காண


Srcid=2853;Tarid=0;Adty=1;Width=468;Height=60;Skin=1;Banner=0;Filt=0;



முகப்பு

........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
2

a
சிறுகதை-78
பணப்பெட்டியுடன் ஓட்டம்!
-பாரதி தேவராஜ்.
மாலைநேரம்.
ஆரஞ்சு வண்ணச் சூரியன் மேறகுமலைச் சாரலில் ஒளியத் துவங்கினான்.மாரியம்மன் கோவில் கலகலத்தது. கலர் பார்க்கும் விடலையர்களைத் தவிர்த்து சீனு தனியாக நின்று அம்மனைக் கும்பிட்டான் கூடவே ரகுவையும் நினைத்துக் கொண்டான்இம்மாதிரி வேலைகளுக்கு ரகுதான் லாயக்கு. அவனை எங்கே பார்ப்பது நாளொரு திருட்டும் பொழுதொரு ஜெயிலுமாய் அலைகிறவன் அவன்.
அர்ச்சகர் கொடுத்த திருநீற்றை நெற்றியில் இட்டுக் கொண்டு வெளியே வந்தான்.சீனு. தூரத்தில் ஆட்டோ ஸ்டாணட் ஓரமாய் சீனுவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ரகுதான் நின்றிருந்தான்.“டேய் ரகு! ” உரக்கக்கூப்பிட்டான்.
சட்டென முடியை சிலுப்பிக் கொண்டு திரும்பினான் ரகு.
“டேய் சீனு நீயா! என்னப்பா என்ன அக்கரையா கூப்பிடற ஏதாச்சும் கல்யாணம் கான ஏதாச்சுமா?”
“அட நீ ஒண்ணு அது ஒண்ணுதான் குறைச்சல்.”
“உனக்கென்னப்பா.வேலைக்குப்போறே.மாசமானா சம்பளம்.”
“இங்க பார் ரகு. இநதக் காலத்திலே சம்பளம். உத்யோகம் இதெல்லாம் ஒண்ணும் நடக்காது எம் முதலாளியைப் பாரு. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்காதான் வியாபாரம் பண்றான். பாங்குக்கு போறதுக்கும் வர்றதுக்கும்தான் என்னை நம்பறான் அனாவசியமாய் சம்பளத்தைத் தவிர பைசா கழுவின தண்ணியக் கூட காட்ட மாட்டேங்றான். அதனாலே ஒருபிளான் பண்ணியிருக்கேன். நீ தான் உதவி பண்ணனும்.”
“பிளானப்பத்தி அப்புறம் பேசுவோம் மொதல்ல அய்யர் கடை இடலியைப் பத்திக் கொஞ்சம் பேசணுமாம். போலாமா?”.
“ம்”
கிருஷ்ணா கபே காற்று வாங்கியது.
உண்மையிலேயே கிளீனர் பையன் ஈக்களை விரட்ட படாதபாடு பட்டுக்கொண்டிருந்தான். இருவரும் உட்கார்ந்தார்கள்.
கிருஷணய்யர் கேட்காமலே சுடச்சுட இட்லியை இலையில் வைத்தார்.
ரகு “ஐயரே தொண்ட ஒருமாதிரியிருக்கு கொஞ்சம் வெண்ணீர் கொண்டா.” என விரட்டினான்“இப்ப சொல்லு”
“நாளைக்குக் காலையிலே ஒரு பார்ட்டிக்குக் கொடுக்கறதுக்காக பாங்கியிலே நாலு லட்சம் எடுத்துட்டு வரப் போறோம். நானும் டிரைவர் மட்டும்தான் கார்லே போறோம். சாயிபாபா காலனி “கோவைபாங்கிலே“ பணத்தை எடுத்துட்டு தடாகம் ரோடு வழியா வருவோம். ஜி.சி.டி தாண்டினதும் ஈ காக்கா கூட அந்தநேரத்திலே இருக்காது. திக்பாரஸ்ட். ரெண்டு பக்கமும் கருவேலமரங்கள்தான் நிக்கும். ஆனைகட்டி போற பஸ்களும் பன்னென்டு மணிக்குத்தான் லாரிக எப்பவாச்சும் வரும். அங்க ஒருசின்ன பால மிருக்கும். அந்த பாலத்துக்குப் பின்னாடி நீ நிக்கணும். காரை நிறுத்திட்டு இறங்குவோம்.“
“எதுக்கு”“ ஒண்ணுமில்லே. ஒண்ணுக்குப் போகத்தான். அங்கதான் போறது வழக்கம்.”
“ ஓகோ!”
“நாங்க ரெண்டுபேரும் இறங்கி ஜிப்பை திறக்கறதுக்குள்ளே பின்பக்கமாக சட்டுன்னு பெட்டிய எடுத்துட்டு ஏதாவது கட்டையாலே முதல்லே லேசா என் மண்டையப் பாத்து அடி. நா கீழே விழுந்துடுவேன். முடிஞ்சா அவனையும் ரெண்டு சாத்து சாத்து. அவனும் கீழே விழுந்துடுவான். டைம் பார்த்துட்டு பாங்க்குக்கு போன் பண்ணுவாரு பணத்தை எடுத்தாச்சுன்னா கண்டிப்பா காரெடுத்துட்டு தேடிட்டு வருவாரு. ஆஸ்பத்திரிலே.சேர்ப்பாரு. போலிஸ்லே கம்ப்ளைண்ட் கொடுப்பாரு. நீ பெட்டிய நம்ம ரூம்லே வச்சுட்டு தைரியமா உலா வரலாம் ரெண்டுநாள் கழிச்சு, டிஸ்சார்ஜ் ஆயிடுவேன். போலிஸ் விசாரணையில் என்னைய விட டிரைவர் தெளிவா சொல்வான். நா கவலைப் படாம வீடு வந்து சேர்ந்துடறேன். நைட்டோட நைட்டா மங்களுர் எக்ஸ்பிரஸ்லே வடக்கே எங்கியாவது கிராமத்தில செட்டிலாயிடலாம்.”
தன் திட்டத்தை விஸ்தாரமாய் விளக்கினான் சீனு.
“நீ என்ன சொன்னாலும் சரி எனக்கென்னவோ இது வொர்க்அவுட் ஆகிறமாதிரி தெரியல.”
“ நோ நோ கண்டிப்பா சக்ஸஸ் ஆகும். நாளைக்குக் காலையிலே நீ தயாரா இரு.”
சீனு புறப்பட்டான்.
மறுநாள் திட்டப்படி எல்லாமே சரியாக நடந்தது. ஆனாலும் எல்லோரும் அவசரக்காரர்களாய் போய்விட்டதால் கொஞசம் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே நடந்துவிட்டது.திட்டப்படி சீனுவும் டிரைவரும் பணம் நாலு லட்சத்தை பெட்டியில் சுமந்து கொண்டு பதட்டப்படாமல் தடாகம்ரோடு சின்னப் பாலத்தினருகே காரை நிறுத்திவிட்டு இறங்கி முள்வேலி ஓரமாய் ஒதுங்கிய அதே வேளையில் ரகு நல்ல இரும்புத்தடியால் மண்டையைப் பார்த்து நெஜமாகவே இருவரையும் செமத்தியாய் தாக்கினான். நிஜமாகவே இருவரும் மயங்கி விழுந்தனர். இருவரின் மண்டையிலிருந்தும் ரத்தம் லேசாய் எட்டிப்பார்த்தது. இப்போது ரகு உஷாரானான். அவனுடைய திட்டப்படி இன்னும் இரண்டு மைலில் வரும் இடையர் பாளையத்தில் பஸ் ஏறி ஆனைகட்டி வழியாய் கேரளா சென்று கேரளாவாசி ஆகிவிடுவது எனபது அவன் திட்டம். பெட்டியை தூக்கிக் கொண்டு கண்மண் தெரியாமல் ஓடீனான். அவனுடைய துரதிர்ஷ்டம் அழகேசன் சாலையிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர் குடிபோதையில் இவனையே குறிபார்த்து சரியாய் மோதி மரத்தோடு சாய்த்துவிட்டு பயத்தில் இறங்கி வந்த வழியே ஓடிவிட்டான்.
லாரி இடையில் சிக்கிய ரகுவும் பணப்பெட்டியும் ஒரு சேர வாயைப் பிளந்தனர்.
பெட்டியில் அடுக்கப்பட்டிருந்த நான்கு லட்சங்களும் கோவை நகர காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அரசின் வனத்துறை கருவேலமரங்களில் போய் உட்காரத் துவங்கின..
பாரதி தேவராஜ் அவர்களது மற்ற படைப்புகள்
முந்தைய கதைகள் காண


Srcid=2853;Tarid=0;Adty=1;Width=468;Height=60;Skin=4;Banner=0;Filt=0;



முகப்பு


........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
2

Srcid=2853;Tarid=0;Adty=16;Width=728;Height=90;Skin=10;Banner=0;Filt=0;



a
சிறுகதை-77
சாப்பாட்டுக்கு சேதமில்ல...?
-பாரதி தேவராஜ்.
நான்கு நாட்களாய் விடாது பெய்த மழையில் ஊரே தண்ணிரில் மிதந்தது. சாய்ங்காலம் லேசாய் ஒரு வெட்டாப்பு விட்டபோதுதான் அநத சேதி கிடைத்தது.
“என்ன செல்லா எண்ணையூத்தரானாக்கும்?” என்று யாரோ கூவியது யார் என்றுகூடநிமிர்ந்து பார்க்காத செல்லாவும் அவள் மகள் சின்னியும் ஆளுக்கு இரண்டு மண்ணெண்ணை டின்களை எடுத்துக் கொண்டு ஓடியபடியே,
“ஆமாமுங்கோய் எண்ணதா ஊத்தறானா. இநத ஊத்தாத மழையிலே இவனுக்கென்ன கொள்ளையோ?” பதில் சொன்னாள் செல்லா.
நல்லவேளை குட்டைமேட்டில் நின்ற ரேசன் கடையில் கூட்டம் குறைவாக இருந்தது.
“தேய், சட்டுன்னு டின்னுகளை லைன்லே வை. தோ நா பில்லு போட்டு வந்தர்றேன்.”
செல்லா மகளை லைனில் நிறுத்திவிட்டு பின்புறமாய் போய், அரிசியளக்கும் ரங்கப்பனிடம், “ரங்கண்ணோய்” என்று கெஞ்சும் பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு கார்டுகளையும் பணத்தையும் நீட்டினாள்.
ரங்கப்பன் அவளை ஒரு பரிதாபத்தோடு பார்த்தான். கிள்ளி விடக் கூட சதையில்லாத மெல்லிய வரண்டதோலும் எலும்புமாய், கண்களை மட்டும் பெரிதாக வைத்துக் கொண்டு நின்றவளின் தலைக்கு எண்ணையே அவசியமில்லை. என்பது போல் பஞ்சு வெள்ளையாய் நரைத்திருந்தது.
பார்க்கப் பாவமாய் இருந்தாலும் ரங்கப்பன் தன் பிகுவை விடாமல், “உனக்கு வேற வேலையே இல்லே? ஏதோ தலைவர் ஊட்லே குடியிருக்கறயேன்னு பாத்தா இதே பொழப்பா அலையறயே”
“போகட்டும் ராஜா. ஊட்லே சோறக்கி ரெண்டு நாளாச்சு ஏதோ இதைக் கொண்டு போய்க் கொடுத்தா கெடைக்கற அஞசு ரூபாயில அரை வயிராவது சாப்பிடலாம் எனக்கில்லேனாலும் புள்ளைக மயங்கறதுக் கொசற மாச்சும் கொஞ்ம்...”
ரங்கப்பனால் அதுக்கு மேலும் ஒன்றும் பேசமுடியவில்லை.
“செரி செரி இப்பவே ஒண்ணும் முடியாது. அரைமணி நேரம் கழிச்சு வா பாக்கலாம் போ.”
செல்லாளுக்கு உயிர் கைக்குள் வந்த மாதிரி “மகராசந் தலைநாள்லே ஆம்பிளப் புள்ளயாவே பெத்துக்க சாமி” என்று வார்த்தைகளைச் சிந்திவிட்டு மகள் நின்ற வரிசைக்கு வந்த போது கூட்டம் இன்னும் சேர்ந்திருந்தது சட்டென கவனம் வந்தது போல,
“சின்னி இஞசினியருட்லே ஒண்ணும் கொடுக்கலையா புள்ள?”
தாயின் கேள்வி காதில் விழுந்ததும் தீயை மிதித்தவள் போல் “ஐய்யோ இரும்மா தா இன்னொருவாட்டி இஞ்சினியர் வீட்டுக்கு போகோணும்.”
“எதுக்கடி?”
“பழைய சோறு கொஞ்சம் மிச்சமிருக்குன்னு ஒரு போசிலே போட்டு கொடுத்தாங்க அத நா அங்கயே வச்சுப் போட்டு வந்துட்டேன் அந்த பாழாப் போன நாய்கான தின்னுடுமோ என்னவோ?”
பயந்து ஓடினாள் மழையில் நனைந்து களிமண் நிலம் வசக் வசக் என்று காலைப் பிடித்தது.
பாத்துப்போடி எங்கியாவது உளுந்துகான தொலைக்காதே காலையிலே வேலைக்குப் போக முடியாது. சம்பாதிக்கற லடசணம் மாத்துதுணிக்கு கூட வழியில்லை. என்று உரக்கக் கூவியவள் அக்கம்பக்கம் தன்னையாராவது பார்க்கிறார்களா என்று ஒருமுறை பார்த்துக் கொண்டாள். அதற்குள் எண்ணை வாங்க பணம் கொடுதத காலனிக்காரி சீதாவும் தோட்டத்து பொன்னியும்
“எனன் செல்லா எண்ணெ கிடைக்குமா?”
“வாங்கீர்லாம்மா.”
“பில் போட்டாச்சா?” என்று தங்கள் பணத்துக்கு பாதுகாப்பு தேடினார்கள்.
“ம் பணம் கொடுத்துட்டேன இப்ப ரங்கப்பன் கொண்டாந்து தந்துருவான்.” அவள் சொல்லிக் கெண்டிருந்த போதே நடையின் பின்பக்கம் நின்ற ரங்கப்பன்
“இந்தா செல்லம்மா” அதட்டலுடன் கூவினான்.
“ தோ வந்துட்டேன்” என்றவள் அவர்களைப் பார்த்து
“பில் போட்டாச்சும்மா. பத்து நிமிஷத்திலே எண்ணை வாங்கிடலாம்” எனறபடியே ரஙகப்பனைப் பார்க்கப் போனாள்.
பில்லையும் மிச்சப் பணத்தையும் வாங்கிக் கொண்டு வந்த போது சின்னி தன் வற்றல் உடம்பில் பெரிதாய் தெரிந்த பற்களை மட்டும் காட்டியபடி கெசுவாங்க ’புஸ்புஸ்’ என்று மூச்சைவிட்டு,
“நல்லவேளைம்மா அந்தப் பாட்டி எடுத்து உள்ளே வச்சிருந்தாங்க. இல்லேன்னா இந்நேரம் நாய்தான் சாப்பிட்டிருக்கும்.”
“செரிசெரி என்ன பழையசோறு மட்டும்தானா ஊத்திக்க என்ன?” தாழ்ந்த குரலில் கேட்டாள்
“ஊத்திக்கெல்லாம் ஒண்ணும் கொடுக்கல்ல” சாப்பாடு சேதமில்லாமல் போன சந்தோசத்தில் கொஞசம் சிணுங்கியபடி சொன்னாள்.
“நீ இங்கே நில்லு நா வீட்டுக்குப்போய் தம்பிக்கு கொஞ்சம் போட்டுட்டு அடம் புடிக்காம தண்ணியெடுத்து அடுப்பப்பத்தவச்சு உலையவை. அதுக்குள்ள எண்ணயக் கொடுத்துட்டு அரிசிய வாங்கிட்டு வந்தர்றேன். இல்லேன்னா எல்லோரும் இன்னிக்கு பட்னிதான் கெடக்கணும்.”
தன் சாப்பாட்டு ஆற்றாமையை மகள் கையிலிருந்த போசியை வாங்கிக் கொண்டு போனாள்.
தூரத்தில் வீட்டுக்கு பக்கம் போகும் போதே கூட்டமாய் நாலைந்து பேர் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் வேரென்ன எவனாவது தண்ணியப் போட்டுட்டு ரகளை பண்ணுவானுக.. வேடிக்கை பாக்கறதுக்கு சொல்லவா வேணும். மனதில் வைத்தவளாய் நிமிர்ந்து பார்க்காமல் விடுவிடு வென்று வீட்டுக்குள் நுழைந்தாள்.
சாப்பாட்டுப் போசியை அடுப்புத் திண்ணை மேல் வைத்துவிட்டு “இவனெங்க போனா“ அடேய் மருது என்று சத்தம் போட்டு குரல் கொடுத்தாள்.
தாயின் குரலைக் கேட்டதும் முன்னாலிருந்த கூட்டத்திலிருந்து வெளியே வந்தான் மருது. பத்து வயசிருக்கலாம்.
“அங்கென்னடா பண்ணீட்டிருக்கே?”
“சத்தமேம்மா போடறே நம்ம ஊட்டுக்கார தாத்தா செத்து போயிட்டாரம்மா” செல்லாளுக்கு பகீரென்றது.
“நீ என்னடா சொல்றே” என்று அவள் கேட்டதற்குக் கூட பதில்தராமல்
“ என்னம்மாது போசியிலே சோறா?”. போசியை திறந்து சோற்றை அள்ள முயன்றான்.
அவன் பதில் சொல்லாமல் போனாலும் ஊர் பெண்களின் ஒப்பாரி ஓலம். அந்தப் பகுதியையே நிறைத்தது.
சோற்றை அள்ளப் போனவனின் கையைப் பிடித்து இழுத்து வந்தாள்.
வேண்டான்டா எழஊட்லே சாப்பிடக்கூடாது. உனக்கு என்னமாச்சும் வாங்கிதர்றேன். வாப்பா.”
“எனக்கென்னும் வேண்டாம் சோறுதான் வேணும் மூணுநாளா இப்படித்தா சொல்லிட்டிருக்கே நா சாப்பிட்டுதா வருவம் போ.” அழுதபடி அவள் பிடியிலிருந்து திமிறினான் உள்ளே ஓடிய வேகத்தில் கால் இடறி போசியிலிருந்த சோறு முச்சூடும் கீழே சிந்தி மண்ணுக்கிரையானது.
“வாடா பேசாம” இழுத்துக் கொண்டு தெருவில் இறங்கினாள்.
பாரதி தேவராஜ் அவர்களது மற்ற படைப்புகள்
முந்தைய கதைகள் காண


முகப்பு

........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
2

a
சிறுகதை-75
பாட்டி கொடுமை?
-பாரதி தேவராஜ்.
“உள்ள ராசப்பனிருக்கானுங்களா?”
-வெளியே நூலகரிடம் யாரோ ஒரு பெண்குரல் கேட்பது தெளி வாய் கேட்டது. வெளியே ராசப்பன் வந்தான். வெய்யில் கண்ணைக் கரித்தது. பக்கத்து வீட்டுஅங்காத்தாள்.
“சாமி ராசப்பா உன்ன எங்கெல்லாம் தொளாவறது போ. ஒரு மணி நேரமா சுத்துசுத்துன்னு சுத்தீட்டு வந்திருக்கம்போ.”
“அது சரிக்கா மெட்ராஸிலிருந்து எப்ப வந்தே? என்னை எதுக்குக்கா தேடணும்?”
இருபது வயது வாலிபனா அவன்? தலையெல்லாம் எண்ணை காணாது பஞசாய் பறக்க, அழுக்கு சட்டையில் ஒர்க்ஸாப் போரவனாட்டம் ஒல்லியாய் தெரிந்தான்.
“உங்க பாட்டிக்கு வேளை வந்திடுச்சு போலிருக்கு ராசப்பா”
அவள் வார்த்தை சவுக்காய் விழ, “ என்னக்கா சொல்றீங்க?” அதிர்ந்து போய்க் கேட்டான்.
“ஆமாப்பா துடுக்கு துடுக்குங்குது நொடிக்கொரு தரம் ராசப்பா ராசப்பாங்கறா. உங்க அத்தைதான் அக்கா கொஞசம்போய் கூட்டிட்டு வாங்கன்னா. நானும் உன்னைய மார்யாத்தா கோயிலு, ஸ்ரீராம் கொட்டாயி, பஸ் ஸ்டேணடு அஞ்சலி பேக்கரி, மஸ்தூர் சங்கம்னு தேடாத இடமில்ல.அப்புறம் எதுக்கால வந்த வேல்முருகந்தா லைப்ரரிக்குப் போய்ப் பாருன்னான். அதான் வந்தேன்.”
“வேல வெட்டியில்லாத பயலுகளுக்கு இந்த இடந்தானே போக்கிடம்.அதுசரி மெடராஸிலிருந்து எப்ப வந்தீங்க மச்சானும் கூட வந்திருக்கா?”
“காலைலே நானும் மச்சானும்தான் வந்தோம். பாட்டிக்கு உடம்பு சரியில்லாமப் போய் நா பாக்கவேயில்லையே பாக்கலாம்னு வந்தேன். நாம் பாத்த வேளையோ என்னவோ மூஞ்சியே கோணிப் போய் எல்லாத்தை ஒருமாதிரி பாக்கறாங்க ராசப்பா. ராசப்பாங்கறது மட்டும்தா காதுலே கேட்குது. அதுசரி உங்க பாட்டிக்கும் உனக்கும்தான் ஏழாம் பொருத்தமாச்சே. எப்பிடி இப்படி ஒரு கரிசனம் தீடீர்னு.”
அங்காத்தா சொந்த அக்காவாக இல்லாவிட்டாலும் அவன் மேல் ஒருபாசம்.அவள் கேட்பதில் ஒரு நியாயமிருந்தது. அவள் ஊருக்கு வந்தே ஐந்து வருடமிருக்கும். ராசப்பன் நினைத்துப் பார்த்தான் அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எப்போதும் அவனை ஒரு எதிரியாகத்தான் பாட்டி பாவித்திருக்கிறாள்.
அவள் தாத்தாவும் அப்பாவும் ப்ளேக் வந்த போது ஒரே சமயத்தில் இருவரும் போய் சேர்ந்து விட்டார்கள். தாத்தா வெள்ளைக்காரன் கம்பெனியில் வேலை பார்த்ததனால் வாரிசுக்கு மாமாவை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்கள்.
இதற்கு ராசப்பனோடு பிறந்தவர்கள் யாருமே இல்லை. புழுக்கை மாதிரி ஒட்டாத ஒண்டி ஆளாய்த்தான் பிறந்தான். அந்த பாவமோ என்ன்வோ பாட்டிக்கு அவன் மேல் வெறுப்போ வெறுப்பு.ராசப்பனுக்கு ஐந்து வயதிருக்கும் பள்ளிக்கூடத்தில் எல்லோரும் ஒரே மாதிரி பொம்மை சட்டை போட்டுக் கொண்டு வருகிறார்கள் தனக்கும் அது மாதரி வேணும் மாமாவிடம் சொல்லி வாங்கித் தர அவன் அம்மாவிடம்தான் கேட்டான்.
“நீ கெட்ட கேட்டுக்கு பொம்மை சட்டை ஒண்ணுதான் பாக்கி. சோத்துக்கே வழியக் காணோம் உங்க மாமன் சம்பாரிக்கறது அவனிருமலுக்கே பத்தாம கெடக்குது. போடா மாமா காதுலகான விழுந்துச்சு உன்னக் கொன்னே போடுவான்.பாட்டி அதட்டினாள் சிறுகுழந்தைதானே ஆசை அவ்வளவு சீக்கிரம் விடுமா? அழுதான். அடம் பிடித்தான். அம்மாகூட சமாதானம் செய்தாள். அப்போதுதான் வெறுப்பேற்படும்படியான முதல் நிகழ்ச்சி நடந்தது.
“அவன இப்படியெல்லாம் விட்டா சரிப்படாது. இஙகவுடு”
அவன் கையைப் பிடித்திழுத்து திண்ணைகாலில் வாழை மட்டையால் கட்டி வைத்து ரெண்டு கண்ணிலும் வெங்காயத்தை தட்டிப் பிழிந்து விட்டாள் பாட்டி.
அப்போது எப்படி துடித்தான் என்பது இருபது வருடம் கழிந்தும் கூட நினைவில் பசுமையாய் நின்றது.
இது போல ஏதேதோ காரணத்துக்காக ஒரு தரம் சமையல் அறைக்குள் படியில் நெருப்பைப் போட்டு ஒருகை மிளகாயைப் போட்டு கார நெடி மூக்கிலேற அந்த அறைக்குள் ராசப்பனைத் தள்ளிக் கதவை சாத்தி விட்டாள்.
சாதாரணமாகத் தாளிக்கும் போது ஏற்படும் கார நெடியே தாங்க முடிவதில்லை. மிளகாய்ப் புகை அறை முழுக்கப் பரவியிருக்கும் போது அந்த பிஞ்சு எப்படி அழுந்தியிருக்கும்.
இன்னொரு தரம் கூடையை கயிற்றில் கட்டி அவனை உட்கார வைத்துக் கிணற்றில் இறக்கி விட்டாள்.
அவனுக்கு அப்படியே குதித்து விடலாமா என்றுகூட தோன்றியது. இருந்தாலும் அடிக்கடி அம்மா சொன்னது நினைவுக்கு வரும் “ஏண்டா எனக்கு நீ ஒரே பையன்.நீ பெரியவனாயி சம்பாரிச்சு என்னைய காப்பாத்தணும்பா பெரிய உத்தியோகத்திலே உக்காந்து உங்கப்பா பேர் எடுக்கணும்.”
-என்று சொல்லியதற்காக பாட்டி சொன்னதை யெல்லாம் கேட்டான். தன் ஆசைகளையெல்லாம் காலில் போட்டு நசுக்கினான். மாமாவின் வருமானம் வறுமையிலிருந்து எழவே முடியாமல் போனது.
ஒருவழியாக மேல் வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தான்.
காலை ஐந்து மணி ஆனால் போதும்...
“டேய் எந்திரிடா. எந்திரிச்சு படிடா” என அதட்டல் போடுவாள் பாட்டி. காலை நேரத்தில் நல்ல தூக்கம் வரும். சவுடாலாய் ரெண்டு நிமிடம் தாமதிப்பான்.
உடனே, “இன்னும் எத்தனை காலம் உங்களுக்கு வடிச்சுக் கொட்டிட்டு உங்க மாமானிருக்கணுமோ?” என்பாள்.
அவனுக்குக்கூட வேடிக்கையாயிருக்கும் மாமா என்ன காரணத்திற்காகவோ திருமணத்தைத் தளளிப்போட அதற்குக் கூட அவர்கள் தான் காரணம் என்பது எப்படி பொருத்தமாகும்.நல்லவேளை எப்படியோ சீக்கிரம் ஒரு வசதி குறைந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ரெண்டு பையன்களுக்கும் அப்பாவாகி விட்டார். அத்தை வந்த வேளை அவனுக்கு ஆதரவு கிடைத்தது. ஆனால் பாட்டிக்குத் திடீரென பக்கவாதம் வந்து கைகால்கள் விளங்காமல் போனது. படுத்த படுக்கையாகி விட்டாள். பாட்டி எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை நாட வேண்டியிருந்தது. புது மருமகள் செய்வாள் எப்படியோ ஏதாவது ஒரு நேரத்திற்குத்தான் கவனிக்க முடியும். அந்த வேளை பார்த்து அம்மாவிற்கு ஒரு விடுதியில் வேலை கிடைத்தது. வீட்டின் வறுமையை விட பாட்டியின் நோய் பெரிதாய்படாததால் அம்மா விடுதி வேலைக்குப் போய் சேர்ந்து அங்கேயே தஙகிவிட்டாள்.பாட்டியைக் கவனிக்க அத்தையைத் தவிர யாருமில்லாமல் படாதபாடு பட்டாள்.
அவனுக்கு ஆரம்பத்தில் கொஞசம் சநதோசமாக இருந்தாலும் பின்னால் பாட்டி மருமகளிடம் படும் கொடுமைகளுக்காக இரக்கப்பட ஆரம்பித்தான்.
அவளைப் பார்த்தாலே பரிதாபமாக இருந்தது. அவன் பள்ளிப்படிப்பு முடிந்து வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தான் இந்த நேரத்தில் அவன் மாமாவும் திடீரென மாரடைப்பால் இறந்து போனார்.
துக்கம் விசாரிக்க வந்தவர்கள் எல்லாம் கிழவியைக் கரித்துக் கொட்டினார்கள்.
“இந்தக் கிழவி போயிருக்கக் கூடாதா? கையும் காலும் வராம கெடயிலேயே கெடந்துட்டு எத்தனை காலம் இருக்கப் போகுது.”
அதை நினைத்து நினைத்துக் கிழவி மிகவும் குமைந்து போனாள். ஒரு வேளை சாப்பிட்டுக் கொண்டிருந்ததையும் நிறுத்தி விட்டாள். சுத்தமாய் ஆகாரமென்பதே இல்லாமல் போனது.மாமா இறந்த பின் அவர் வேலை செய்த கம்பெனியிலேயே வேலையில் சேரும் வாய்ப்பு ஒன்று வந்தது. அதற்கான முயற்சியில் அலைய வேண்டியிருந்தது.நாளாக நாளாக கிழவி அசையக்கூட முடியாமல் படுத்துக் கிடப்பாள். கிடயிலேயே ரட மூத்திரம் இருந்து நாறும். கட்டெறும்புகள் கூட்டமாய்ப் படையெடுத்து இருபுறமும் வரிசையாய் நின்று கடித்துப் பிடுங்கும் வலி பொறுக்க முடியாமல் “ஐய்யோ ஐய்யோ ” என்று கறித்துடிப்பாள்.
புருசனை இழந்த துக்கத்தில் கிழவியை அறவே வெறுப்பதனால் அத்தைக்காரி கவனிப்பதையே நிறுத்திக் கொண்டாள்.
இப்போது கிழவியை கவனிப்பது ராசப்பன் மட்டுந்தான் சாப்பிடுவதையே கிழவி நிறுத்தி ஒரு பத்து நாட்களுக்குப் பின் சாப்பிட முடியாமல் போனது.
“பசிக்கிறது” என்பாள்.சாப்பிட என்ன கொடுத்தாலும் வாயில் போட்டவுடன் குமட்டி வாந்தி எடுப்பாள்.
அவளுக்கு ஆதரவாய் சில சமயங்களில் பேசிக் கொண்டிருப்பான். ராத்திரி கூட அவன் வேலை விசயமாய் பேசிக் கொண்டிருந்தான்.
“பாட்டி மாமா கம்பெனியிலேயே வேலை கெடச்சிருக்கு செக்யுரிட்டி போஸ்ட் பணங்கட்டணும் ஐயாயிரம் தேவைப்படுது. எங்கியாச்சும் கடன் வாங்கித்தான் கட்டணும். யார்கிட்ட கேக்கிறதுன்னு தெரியல்ல.“அவளிடம் சொல்லி என்னபிரயோசனம் சாகப் போகிறவள் என்னவோ ஒரு ஆதங்கத்திற்கு அப்படி பேசினான்.ஆனால் அதுவே கடைசி பேச்சாக இருக்கும் என்று அவன் நினைக்கவில்லை.
-----------
வீடு வந்து விட்டது. கிழவி திண்ணையில் நாராய் கிடந்தாள். யாரும் பக்கத்திலில்லை. அத்தை வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள். பையன்களுக்கு சாப்பாடு அனுப்பனும்அங்காத்தா கூட,
“தோ வந்துட்டேன் நீ போய் கிழவியப் பாரு என்ன சொல்லுதுன்னு?”
அவள் கழண்டு கொண்டாள்.
கிழவி துடித்துக் கொண்டிருந்தாள் அடிக்கொருதரம் விக்கல் எடுத்தது. பேச நா வரவில்லை. ராசப்பனை கண்டதும் முகத்தில் மலர்ச்சி பிறந்தது.
அருகில் வரும்படி சைகைக் காட்டினாள்.
“என்ன பாட்டி என்ன செய்யுது டாக்டரக் கூட்டிட்டு வரட்டுமா?”அவள் சிரமப்பட்டு வாயைத் திறக்க முயற்சி செய்து, “தலகானிலே தாலி” என்றாள்தலகாணிக்குள் கையை விட்டுப் பார்த்தான். ஒருசின்ன சுருக்குப்பை. அதனுள் அவளுடைய தங்கத்தாலி.அவன் கண்களில் நீர் வழிந்தது.
“வச்சுக்கோ“ என்றாள் தண்ணீர் தருமாறு சைகை செய்தாள். தண்ணீர் தந்தான். ஒருமிடறு உள்ளே போயிற்று உயிரும் பிரிந்தது.அவளுடைய தாலியைப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டான்இவளா கொடுமைக்காரி? இவள் அதட்டி அப்படி தன்னை முறைப்படுத்தி இருக்காவிட்டால் இப்படி ஒரு முழுமையான ஒழுங்கான ஆளாய் ஆகியிருக்க முடியாது என்பதை உணர்ந்தான்எந்தப் பாட்டி கொடுமைக்காரி என நினைத்தானோ அவள் தான் தன் எதிர்கால வெளிச்சத்திற்கு ஒளி தந்திருக்கிறாள்.
முந்தைய கதைகள் காண


Srcid=2853;Tarid=0;Adty=1;Width=468;Height=60;Skin=9;Banner=0;Filt=0;



முகப்பு

முத்துக்கமலத்தில் எனது படைப்புக்கள்