Pages

Saturday, June 19, 2010

ஆன்மீகக் கட்டுரைகள்

ஆரூரானை ஆட்கொண்ட பேரூர் பட்டீஸ்வரசுவாமி திருக்கோயில் கோவை நகரிலிருந்து மேற்கே போகும் சிறுவாணிசாலையில்; ஆறு கிலோ மீட்டர் பயணித்தால் பேரூர் பட்டீஸ்வரசுவாமி திருக்கோவிலின் ஐந்துநிலை களைக் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாய் நம்மை வரவேற்கிறது
மாலை கதிரவன் மேற்கு திசையில் விழும்நேரம். கோவிலின் பிரம்மாண்ட கதவின் முன் நிற்கிறோம். நிறையபேர் காத்திருக்கிறார்கள். தலைமைகுருக்கள் வருகிறார். கதவின் முன் நின்று கையிலிருக்கும் தீவட்டியால் மூன்றுமுறை சலாம் செய்வதுபோல் மேலும் கீழுமாய்ஆட்டுகிறார். நடை திறக்கப்படுகிறது
நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எதற்காக இப்படி செய்கிறார்கள் என்ற காரணத்தை அறிய விசாரித்தோம்.
“திப்புசுல்தான்காலத்திற்கு முன்பாக இங்கு பணிபுரியும் ஆலயகுருக்கள் களுக்கு முறையான வருமானம் ஏதுமின்றி மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த மைசு+ர் மன்னர் திப்புசுல்தான் நிரந்தர வருமானம் தரும் பயிர்நிலங்களை தானமாகக் கொடுத்து அவர்களின் வறுமையைப் போக்கினார்.அந்த உதவியை இன்றளவும் மறவாத அவர்களது சந்ததியினர் திப்புசுல்தான் மன்னருக்கு நன்றி செலுத்தவே இந்ததீவட்டி சலாம ஒவ்வொரு நாளும் செலுத்துகிறார்கள்.
கோவிலின் உள்ளே நீண்ட நடை. ஏராளமான கல்தூண்கள். விதானத்தில் அறு பத்துமூவரின்வரலாற்றுக்காட்சிகள்வண்ணஓவியங்களாய் காட்சி யளிக்கிறது. கூடவே கோவில் பிறந்த வரலாறும் ஓவியமாய் சித்தரிக்ப்பட்டிருக்கிறது
கரிகாற் பெருஞ் சோழன்காலத்திலே இது கட்டப்பட்டிருக்கிறது.பேரையன் என்ற இருளர் தலைமையில் இங்கிருந்த காட்டையழித்து ஊராக்கி அவன். பெயரிலே பேரூர் என்று பெயரிட்டனர்.
2
பசுமாடு ஒன்று இக்காட்டில் புதர் ஒன்றில் தானாக பால் சொரிந்து கொண் டிருந்தது. அம்மாட்டை விரட்ட அது அங்கிருந்து வேகமாக நகர்கையில் அதன் குழம்படி பட்டு அங்கிருந்த கல்லில் ரத்தம் வடிந்திருக்கிறது. அதனை விலக்கிப் பார்த்தபோது லிங்கம் தென்பட்டது. அறிந்து வியந்தனர்.
ஆடு மாடுகள் அடைக்கும் பட்டியிலிருந்து இறைவன் வெளிப்பட்டதால் பட்டிப் பெருமான், பட்டீஸ்வரர் என்றழைக்கப் பட்டார்.
கரிகாற் சோழன்காலத்தில் கொங்குநாட்டில் கட்டப்பட்ட பலகோவில்களில் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலும் ஒன்று.
பின்னர் வந்த பல மன்னர்கள் பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். விஜய நகரமன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் கொங்குநாட்டு பிரதிநிதியாக அளகாத்திரி நாயக்கர் நியமிக்கப்பட்டார். இவர்காலத்தில் கட்டப்பட்ட கனக சபை, செய்த திருப்பணிகள் இன்றளவும் புதிய பொலிவுடன் விளங்குகிறது.
கோவிலின் நடையைக் கடந்து இடதுபுறம் செல்கிறோம். மிகப்பெரியபிரகாரம். கல்தளமிட்டு காண்கிறது. தூரத்தில் ஒரு பாடல் தவழ்ந்து நம் காதை குளிரவைக்கிறது.
பாரூரும் அரவல்குல் உமைநங்கையவள் பங்கன் பைங்கண் ஏற்றன் ஊரூரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட்கொள்வான் ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் ஆணி காஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியு+ர்ச் சிற்றம்பலத்தே பெற்றோம் அன்றே.; -சட்டென்று நினைவுக்கு வருகிறது. சுந்தரர் தேவாரம். சிதம்பரம் தில்லையம்பலத்தே நின்று புலிஊர்ச்சிற்றம்பலத்தே பெற்றோம் அன்றே. என்கிறார். அப்படியானால் சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் வந்துள்ளாரோ?

3 சுந்தரமூர்த்தி நாயனார் தம் துணைவியார் பரவைநாச்சியாரோடு பேரூர் பட்டீஸ்வர பெருமானை தரிசிக்க வந்திருக்கிறார்.
அவர் வருகிற நேரத்தில் ஈஸ்வரன் உழவனாகவும் உமையவள் உழவன் துணைவியாகவும் மாறி காஞ்சிமாநதி ஓரமிருந்த வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்தார். நந்திதேவரிடம் தன்இருப்பிடம் பற்றி கூற வேண்டாம் என்று எச்சரித்துவிட்டுப் போனார்
சுந்தரர் கோவிலுக்கு வந்தார். ஈசனைகாணாது திகைத்தார் நந்திதேவரிடம் விசாரித்தார். நந்திதேவா; வாயால் கூறாமல் முகத்தைத் திருப்பி ஜாடையால் காட்டினார்.
சுந்தரர் வயல்வெளிக்குச் சென்று இறைவனை தரிசித்தார் என்பது வரலாறு.
வெளிபிரகாரத்தில் நிரதி விநாயகர், தண்டபாணி, விசாலாட்சி,விசுவநாதர் ஆகியோர் ஆலயங்கள் வரிசையாய் உள்ளன. வடக்குபிரகாரம் தாண்டி கிழக்கே திரும்பி னால் அம்மன்சந்நதி பச்சைநாயகி என அழைக்கப்படுகிறார். சந்நதியின் வலப்பக்கம் துர்க் கை இடபக்கம் வரதராஜபெருமாள் தனிசந்நதிகள் உள்ளது. துர்க்கையம்மன் சந்நதிக்கு முன் உள்ள சிம்மவாகனத்தின் வாயுள் சுழலும்கல் உள்ள மாதிhp சிற்பம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அம்மனை தரிசித்துவிட்டு முன்புறம் வருகிறோம். பலிபிடம் இடபவாகனம்கடந்து உள்பிரகாரம் செல்கிறோம்.
தென்கிழக்கு மூலையில் மேற்கு பார்த்த சூரியபகவான்சந்நதி தென்புறம் முழுக்க அறுபத்மூவர் திருவுருவச் சிலைகள். மேற்கில் லிங்கங்கள். வடக்கு மூலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி சந்நதி. பக்கத்தில் சுந்தரமூர்த்திநாயனார் சேரமான் பெருமாள் நாயனார் சிலைகள் வடகிழக்கு மூலையில் ஞானபைரவர் நாய்வாகன மின்றி காட்சியளிக்கிறார். பேரூர் ஓர்முக்தி ஸ்தலம் என்பதால் பைரவர் வாகனமின்றி நிற்கிறார்.இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி கிடையாது. இதனை வலியுருத்த இங்கே பிறவா புளி, இறவாப்பனை என்பது சாட்சியாக நிற்கிறது.



4 கோவிலுக்கெதிரே புளியமரமொன்றுள்ளது இதன் விதைகள் முளைப்பதில் லை. அதேபோல் ஆற்றங்கரை ஓரமாய் ஆறுபனைமரங்கள் நிற்கின்றன. இவை பல்லாயிர மாண்டுகள் வாழ்கின்றன. இவை இறப்பதில்லை. பிறப்பு,இறப்பு இல்லை என்பதற்கு இவையே சாட்சி.
அர்த்தமண்டபத்தில் ஏராளமான கல்துhண்கள்.கோவிலுக்கு தானமளித்தவர் என்ன அளித்தார் என்பன போன்ற செய்திகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.
கருவரையில் மூலவரை கண்குளிர தரிசிக்கிறோம்..வெளியே வந்தால் நடையின் வடபுறம் புகழ்பெற்ற கனகசபை அமைந்துள்ளது. இடதுகாலைத் தூக்கியாடும் நடராசர் சிவகாமவல்லியுடன் வௌ்ளியம்பலத்தில் காட்சியளிக்கிறார். கோவிலின் சிறப்பே கனகசபையில்தான்உள்ளது. கனகசபையின் மேல் விதானத்தில் சுழலும்கல்தாமரை, கல்சங்கலிகள் நுணுக்கமாய் செதுக்கியிருப்பதுகண்டு வியக்காமலிருக்கயியலாது.
கனகசபையின் இருபுறமும் எட்டுத்தூண்களில் மிக அரிய சிற்பங்கள். நர்த்தன விநாயகர், மயில் மீது அமர்ந்த சண்முகம்,ஊர்த்துவதாண்டவர், அகோரவீரபத்ரர், அக்கினிவீரபத்ரர் பிச்சாடநர், யானையுரி போர்த்தவர் என எட்டுசிற்பங்களும் என்றும் இளமையாக தோன்றுகிறது.. இக்கோவின் ஆண்டுவருமானம் ஒரு கோடியே பதினெட்டு லட்சம் என்று பெருமையாக சொல்லி மகிழ்கிறார்கள்.
கடந்த நூற்றாண்டுக்குள் சென்று வந்த திருப்தியோடு நாமும் விடைபெறு வோமா?
-000-
இக்கட்டுரையைஎழுதியவர்:- பாரதிதேவராஜ்.எம்.ஏ.,219FBமணியகாரர்நகர்வேலாண்டிபாளையம்கோவை - 641025

1கொங்குச் சான்றோர் போற்றியசங்கமேஸ்வரர் திருக்கோவில்
கரிகாற் சோழன் காலத்தில்தான் கொங்குநாடு புத்துயிர் பெற்றது. காடுகளை இருளர் முதலானோர் துணைகொண்டு அழித்து நாட்டை உண்டாக்கினான். நாடு முழுக்க முப்பத்தாறு கோவில்களைக் கட்டி திருப்பணி செய்து முடித்தான் என்கிறது சோழன் பு+ர்வ பட்டயம் என்னும் நூல் அவற்றில் கோவன் என்ற இருளர் தலைவனைக் கொண்டு புதிய ஊர் செய்து கோவன்புத்தூர் என அழைக்கச்செய்தான் இதுவே இன்றைய கேயமுத்தூர் ஆகும். நகரின் மையத்தில் அமைந்துள்ளது சங்கமேஸ்வரர் ஆலையம்.
சங்கு பு+க்கள் மண்டிய புதரைஅழிக்கும் போது தோன்றிய லிங்கவடிவான ஈசனை சங்கீஸ்வரர் என்றும் சங்கீஸ்வரமுடையார் என்றும் அழைத்தனர். நாளடைவில் சங்கமீஸ்வரர்,சங்கமேஸ்வரர் என்றும் வழுவி அழைக்கத் தலைப்பட்டனர்.
அப்போதே கோட்டை பேட்டை குளம் அமைத்திருந்தனர் என்று வௌ்ளிங்கிரி ஸ்தல புராணம் கூறுகிறது. பல மன்னர்கள் இக்கோவிலை திருப்பணி செய்து சிறப்பித்துள்ளனர்.பராந்கசோழன்காலத்தில்கோவில் மிகவும் சிறப்புற்று விளங் கியது. விஜயநகர மன்னர்கள் காலத்திலும் பின்னர் வந்த திருமலைநாயக்கர் காலத்திலும் தான் கோவில் விரிவுபடுத்தி திருப்பணி செய்துள்ளனர். ஆங்கி லேயர் காலத்தில் கொங்குநாடு திப்புசுல்தான் வசமிருந்தது. 1792 ஆண்டு டிசம்பர் மாதம் வௌ்ளையர் கம்பெனியார் திட்டமிட்டபடி கோயமுத்தூர் கோட்டை யை அவர்கள் வசம் சிக்கவிடாமல் கோட்டையை இடித்து தரை மட்டமாக்கும் படி திப்புசுல்தான் உத்தரவிட்டான் கோட்டைமண் மேடானது. அதன்பின் அந்தபகுதியின் பெயர் கோட்டைமேடு என அழைக்கத்துவங்கினர்.
2 இதன்பின்னர் இக்கோவிலுக்கு புதியதிருப்பம் ஏற்பட்டது. அகிலாண்டேஸ்வரி அம்பாள் விநாயகர். சண்முகசுப்ரமணியர் நாயன்மார்கள் பைரவர் நவக்கிரகம் ஆஞசநேயர் என தனி சன்னதிகள் அமைத்தனர்.
தரைமட்டத்திலிருந்து ஆறடிஆழத்தில்தான் அம்பாள் சன்னதியும், ஈஸ்வரர் சன்னதியும் அமைந்திருந்தது. பகதர்கள் தரிசிப்பதற்கு மிகவும்சிரமப்பட்டனர். அதன் பின் இப்போது வாஸ்து முறைப்படி உயர்த்திகட்டப்பட்டுள்ளது.
ஆயிரமாண்டுகள் சிறப்புடன் அருள்பாலித்துவரும்ஈஸ்வரர், மக்களின் பல குறைகளை நிவர்த்தி செய்கிறார். மக்கள் நன்மைக்காக பல வழிபாடுகள் செய்யப்படுகின் றன.
கார்த்திகை சோமவரங்களில் சங்கபிஷேகம் சங்கமேஸ்வரருக்கும் அம்பாளுக்கும் செய்வது மிக சிறப்பானது.
முதல்சோமவாரமும் கடைசி சோமவாரமும் ஆயிரத்தெட்டு சங்கபிஷேகமும் இரண்டாவது மூன்றாவது வாரங்களில் நூற்றி எட்டு சங்கபிஷேகமும் சிறப் பாக செய்யப்படு கிறது.
கார்த்திகை பௌர்னமியன்று அன்னபிஷேகமும் தரிசனமும் நடைபெறு கிறது.இந்தகோவிலுக்கே உரிய சிறப்புவழிபாடாக கருதுவது அஷ்டமிவழிபாடு. கோவிலில்உள்ள மகாபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்றுநெய்தீப மேற்றி சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்து அன்னதானம். வுழங்குவோருக்கு குழந்தையின்மை குறை நீங்கும்.
பஞசதீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாத் துன்பங்களும் தீரும், கடன்தொல்லை தீரும். காரியசித்தி உண்டாகும். (பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணை விளக்கெணணைதேங்காயெண்ணை, நல்லெண்ணை, பசுநெய் ஆகியவற்றை தனித்தனி தீபமேற்ற வேண்டும்)
3
இவ்வலயத்தில் கொண்டாடப்படும் மற்றுமொரு சிறப்பு விழா மாசிமாத மகா சிவராத்திhp.. அன்று 108முறை வலம் வரவேண்டும். 108முறை எண்ணிக்கை மாறாமலிருக்க 108காசுகளை உண்டியலில் போட்டுவணங்குவது இக்கோவி லின் தனிச்சிறப்பு.விரதமிருந்து கணவிழித்திருந்தால் திருமண பாக்கியம் கிட்டும். சகல ஐஸ்வர்யமும்கூடும் வியாபாரம் விருத்தியாகும் நன்மக்கட்பேறு கிட்டும்..
இக்கோவில் விழாக்களில் மிக முக்கியமானதும் சிறப்புவாய்ந்ததுமாக கருதப்படுவது. சித்திரைத்திருவிழா.சித்ரா பௌர்னமி அன்று சங்கமேஸ்வரரும் சண்முக சுப்ரமணியரும் இரு தேர்களில்நகரின்முக்கிய வீதிகளில் உலா வரு வது. கண்கொள்ளா காட்சி. இந்த காடசி பல ஆண்டுகளாய் நடைபெற முடி யாதசூழ்நிலை. தோ்கள் பழுதடைந்து போனது. இப்போது 8 லட்ச ரூபாய் செல வில் புதியதேர் செய்யப்பட்டு வருகிறது விரைவில் தேரோட்டத்தை பார்க்கிற பாக்கியம் இந்த தலைமுறைக்கு கிட்டும்.
தவிர மாதத்தில் கிருத்திகை சஷ்டி, பெர்ணமி, பிரதோசம் ஆகிய உற்சவங்கள் எப்பொழும்நடைபெறுகின்றன.
இவ்வளவுசிறப்புவாய்ந்த திருக்கோவில் கோவ நகரின் மத்தியில் மாநகராட்சி கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ளது. ரயில நிலையம், பஸ்நிலையம் ஆகியவற்றி லிருந்து புறப்படும் டவுன்பஸ்கள் அனைத்திலும் செல்லலாம். டவுன்ஹால் என்ற ஸ்டாப்பில் இறங்கி தென்புறம் செல்லும் சாலையில் ஐந்துநிமிட நடையில் நமது கோவிலை அடையலாம். சாpத்திரப் புகழ் வாய்ந்த இத் திருக்கோயிலுக்கு வந்து நம் குறைகள் நீங்க வேண்டிக்கொள்வோம்.
-00000-
இக்கட்டுரையை எழுதியவர்:-
பாரதிதேவராஜ்.எம்.ஏ.,219FB மணியகாரர்நகர்வேலாண்டிபாளையம்
கோவை - 641025

Monday, June 7, 2010

திண்ணை சிறுகதை






திண்ணை
ooo ooo ooo ooo
Main Sectionsமுகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்

PRINTER FRIENDLY
EMAIL TO A FRIEND
Sunday June 6, 2010
என்ன தவம் செய்தனை
பாரதிதேவராஜ். எம்.ஏ.,
பொழுதுகிளம்ப வெகுநேரம் இருக்கும் போல இருக்கு. பொன்னுக்குட்டி கிழவனுக்கு அதற்கு மேல் படுக்கையில் இருப்பு கொள்ளவில்லை. கட்டிலிலிருந்து எழுந்து கொண்டார். துண்டை எடுத்து மேலுக்குப் போட்டுக்கொண்டார்.எரவாரத்தில் சொருகியி ருந்த கைத்தடியை உருவிக்கொண்டார். திண்ணையில் கிழவி அசந்துத்தூங்கிக்கொண்டிருந்தாள்
அவளுக்கு சமாச்சாரம் தெரியாது. தெரிந்தால் ஊரையே கூட்டிஒப்பாரி வைப்பாள.; எதுக்கும் தான் போய் பார்ப்போம் என்று புறப்பட்டுவிட்டார். வெளியே சொல்ல முடியாவிட்டாலும் மனசு முச்சூடும் மகனைப் பற்றிய சோகமே நிறைந்து அழத்துடித்தது.
இந்த பாழாப்போனவனுக்கு பத்துமணிக்கு என்ன டீ குடிக் கக்கேக்குது. அதுவும் ராத்திரி. போகாம இருந்திருந்தா அந்தசேதி காதுலேயே விழுந்து தொலைச்சிருக்காது. இப்ப இந்த அவி தியு மிருக்காது.
வேலியைத்தாண்டி படலை சாத்திவிட்டு தெருவில் இறங் கினார். என்ன சமாதானம் செய்தாலும் மனசு சுத்தி சுத்தி அந்த சேதியிலேயே வந்துநின்றது.
பொன்னுக்குட்டி அதிகமாய் எங்கும் வெளியே வரமாட் டார். வர இஷ்டமில்லை என்பது ஒருபுறமிருந்தாலும் ஆறுவரு ஷத்திற்கு முன்பு தன் ஆசைமகன் எவளோ கீழ்சாதிப் பெண் ணோடு ஓடிப்போனான் என்பதை கருத்தில் வைத்து,
“என்னப்பிச்சி சத்தியனப் பத்தி சேதி உண்டா.”
“அப்பிச்சி சூலூர் சந்தைக்குப்போனனா. அங்க உன்ற மகனையும் மருமகனையும் பாத்துபேசினே. சத்தியனெங்கியோ
2
பண்ணைக்கு போறானாம். கஷ்ட ஜீவனந்தா. சோளம் வாங்கீட் டிருந்தாங்க. ஏண்டா தம்பி சோளக்கஞ்சிவச்சா குடும்பம் நடத்து றே. உனக்கேண்டா தலைவிதின்னேன். ‘வேறே வழி’ங்றான் நாந் தா போடா போக்கத்த பயலே அவளே எங்கயாச்சு ஓட்டியுட்டுட்டு ஊர் வந்துசேருன்னுட்டு வந்தேன்.
இதுமாதிரி ஏதாவது ஊர்சனங்க சொல்றத காது கொடுத் துக்கேக்க முடிய வில்லை இதனால் வெளியே வருவதையே விட்டொழித்துவிட்டார். பொன்னுகுட்டியின் மனைவி கிட்னம்மா கூட“இப்படி திண்ணையிலேயே பொழுதன்னிக்கும் தடியப்புடிச் சுட்டே குக்கிட்டி ருந்தா எப்பிடி. கோவில்மேட்லே சித்த உக்காரு. பக்கதாலே ரொட்டிக் கடைக்கு போயி ஒரு பன்னத் தின்னுட்டு டீ யக்குடிச்சிட்டுவா. இல்ல மொள்ள அப்படியே ரெங்கசாமி கோவி லுக்குப் போ. அய்யிரு நல்லதா ஏதாச்சும் சொல்வாரு. இப்படி கெடையிலேயே கெடக்காதே.பயித்தியந்தா புடிச்சுக்கும். அரும மகந்தா உலக அழகி கூட்டீட்டு ஓடிப் போயிட்டான் அதே நெனப்பு இனியும் எதுக்கு எந்திரிச்சு போ சாமி.”
என்பாள். எல்லாம் பழகிக் கொண்டாச்சு.
--000-
வாரியார்சாமி ராமர்கத சொல்றார்னு வயித்துப்புள்ளத் தாச்சியா இருந்த கிட்னம்மாவக் கூட்டிட்டு பத்துமைல் வண்டி கட்டிட்டு தினமும் கேக்கப்போனார்பொன்னுகுட்டி.ராமர்பிறந்த கதைய சொன்ன அண்ணிக்கிதான் கிட்னம்மாவுக்கு வலி வந்துச்சு. நல்ல வேளை பக்கத்திலேயே ஆஸ்பத்திரி இருந்தங்காட்டிக்கு உடனே சேத்து இவம் பொறந்தான் சத்தியவந்தன் ராமர் மாதிரி இருக்கணும்னு பொன்னுகுட்டி அவனுக்கு சத்தியன்னு பேர்வச்சார்.
ராமர் காட்டுக்குப் போயி தசரதர் புத்திர சோகத்திலே படுறபாட்டை வாரியார் சாமி சொல்லச் சொல்ல பொன்னுகுட் டிக்கு கண்லே தாரதாரையா நீர் வடிஞசது.அன்னிக்கு
3
ஊட்டுக்குவந்துங்கூட விடிய விடிய அழுதார்.அப்படி ஒரு சோகம். வரக்கூடாதுன்னு வேண்டாத சாமியே கெடையாது.
ஆனாஅவரோட வாழ்க்கையிலேயே வந்துடுச்சே! ஆசை ஆசையா வளத்து அருமையா இங்கிலிஸ் பள்ளிக்கூடத்துக் கெல் லாம் அனுப்பிபடிக்கவச்சார். அரிசிச்சோத்தத் தவிர வேறே எதை யும் கண்ணுலகூட பாத்ததில்லே. அப்பேர்பட்ட மகன் சோளக் கஞ்சி குடிக்கிறான்னா மனசு என்ன பாடுபடும்.
ஊருக்குள் புகுந்து ரொட்டிக் கடையைத்தாண்டும்போது அந்த பழைய பேப்பர் செய்தியை யாரோ உரக்கப் படித்துக் கொண்டிருந்தார்.
“பீலிஊரைச் சார்ந்த சத்யன் என்பவர் வயது30 இவர் அதே ஊரைச்சேர்ந்த பட்டியம்மாள் வயது24 என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பாப்பம் பட்டியில் இருவரும் கூலிவேலை செய்து பிழைத்து வந்தனர். கடன் தொல்லை தாங்காது சத்யன் விஷம் குடித்து இறந்து போனார். விஷயமறிந்த காவல் துறையினர்….”
பொன்னுகுட்டியால் அந்தசேதியை ஜீரணிக்க இயலவில்லை. மவன் செத்துப் போயிட்டானா. துக்கம் தொண்டையை அடைக்க அழுகை பீறிக்கொண்டு வந்தது. யாராவது பார்த்துவிட்போகிறார்கள் என்று துண்டால் வாயை பொத்திக் கொண்டார்.மனசு விட்டு வாய்நிறைய சத்தம் போட்டு அழவேண்டும் போலிருந்தது. அழுதால்தான் மனசு ஆறும் போல இருந்தது.ஊருக்குவெளியேகுட்டையைநெருங்கிக்கொண்டிருந்தார். சுமை தாங்கிக் கல்லருகே போய் உட்கார்ந்து கொண்டார். இருளைகிழித்துக் கொண்டு காந்திபுரம் போகும் பஸ்வந்து நின்றது.
4 சட்டென்று தாவி படிக்கட்டில் கால் வைத்ததும் பஸ்கிளம்பி யது கம்பியை இரு கையால் சரியாகப் பிடிக்காததால் ஆடி விழப்போனார்.
“ ஏம் பெரிசு நீ சாகரதுக்கு எம் பஸ் தானாகெடச்சது.”
“ அ ஆம் போ.” கண்டக்டரின் கையைப்பிடித்து ஒர சீட்டில் அமர்ந்தார். பஸ்ஸில் நாலைந்து பேர்தான் உட்கார்ந்திருந்தனர் கண்டக்டர் போட்ட சத்தத்தில் தூக்கம் கலைந்தவர். திரும்பிப் பார்த்தார்.
“ அட என்னங் மாமா மணி ஆறுகூட ஆகலே இந்நேரத்துக் கெங்க கிளம்பீட்டே.”
“ அடடே சுப்ராயனா.”
“ மாமா கேள்விப்பட்டது நெசந்தானா?”
“ எதை கேக்கறே”
“ நம்ப நஞசப்பந்தா பேப்பர்லே என்னவோ போட்டிருக்குன்னு சாயந்தரம் உளர்னா,”
“ யாருக்கு தெரியும்.”
“ போன வாரம்தான் சந்தையிலே பாத்தானாம்.”
“ ஆமாமா எங்குட்டையும்தா சொன்னா.”
“எப்படி இப்படி”
“ அவம் விதி. அஞசங்கணம் ஊடு. ஆறேக்கறா தோட்டம் மாடுகண்ணு ஊரு சொந்த சனங்க இத்தனை பேரு இருக்கறப்ப எங்கயோ போய் தொலைஞ்சிருக்கானே பாவிமகன்..”அவரையும் மீறி அழுகை பீறிட்டது. “அழுகாதீங்க மாமா.மனசைத்தேத்திகங்க. நானுமுங்க கூடத்தான் வர்றேன்.” “எதுக்கு” என்பதுபோல பார்த் தார் பொன்னுகுட்டி..
“நீங்க அக்காகிட்டகூட சொல்லாம வந்திட்டிங்களாமா.இந்த நாரவாயன் நஞ்சப்பன் தா ராத்திரி அக்காகிட்டயும் சொல்லிப் போட்டானாம்.. உங்களுக்கு தெரியக் கூடாதுன்னு ஒண்ணும் சொல்லையாம். .ராத்திரி புராவும் நீங்க படறபாட்டை பாத்துட்டுதா இருந்துச்சாம். சொல்லாம கொள்ளம புறப்பட்டதை பார்த்ததுமே
5
அக்காவுக்கு புரிஞ்சு போச்சாம். நீங்க மகன பாக்க பாப்பம்பட்டி பொறப் பட்டீங்கன்னு விசுக்குன்னு எங்கூட்டுக்கு ஓடிவந்து சீக்கி ரமா போய் பஸ்ஸப்புடிக்கச் சொன்னா. நா குறுக்குத்தடத்தில ஓடி வந்து பஸ்ஸப் புடிச்சு வர்றேன். அதுக்குள்ள குட்டைப் பக்கம் வந்துட்டீங்களே. நான்தான பஸ்ஸை நிறுத்தச்சொன்னேன்.”
“சேதிஅப்படியாகிட்னம்மாளுக்கும் விசயம் தெரிஞ்சு போச்சா சரியான கைகாரி.”
கண்டக்டர் காந்திபுரத்துக்கு டிக்கெட்டை கொடுத்தார். ஆப்பாரசட்டை பையில் துழாவி பத்து ருபாய் நோட்டைத் தந்தரி;
“நீ டிக்கெட் வாங்கிட்டயா.”
“ நா அங்கயே வாங்கிட்ட மாமா.”
பஸ்ஸின் ஆட்டத்தில் அவர்களுடைய பேச்சு அடிபட் டுப்போய் மௌனம் நிலவியது.
“ஏண்டா சுப்ராயா?”
“ஏனுங்க மாமா?”
“அங்க பாப்பம்பட்டியில அவனூடு எவடதாலக்காம்?”
“அதென்னமாமா பெரிய பட்னமா. பட்டிக்காடுதானே மிஞ்சிப் போனா நாலுசந்திருக்கும். அதுவுமில்லாம போலிஸ் கேஸ்வேறே ஊரே தேர் கூட்டமா கசமுசன்னு பேசிட்டு நிப்பாங்க. கண்டுபிடிக் கறதொண்ணும் கஷ்டமில்லே மாமா.”
“என்னவோ போப்பா அறுபதுவயசிலே நா இப்படி இருக்கோ ணும். அவங்காhp யத்ததை நாம் பாக்கோணும்னு இருக்கு.”
“என்னங் மாமா சொல்றீங்க?”
“இன்னுமென்னத்தச் சொல்றது. யாரென்ன சொன்னாலும் செரி. ஊரே எதுத்தாலும் செரி. என்றமகனே எந்தோட்டத்திலே தான் அடக்கம் பண்ணனும்னு தீர்மானம் பண்ணிப் போட்டம் போ.”
“அதெப்படிங்க மாமா முடியும் ஊர் கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்குதுல்லோ.குலத்துக்குப்பெரியவங்க நீங்க.நீங்களே இப்படி…”
“கொலமாவது கோத்தரமாவது அதையிதையிஞ் சொல்லித் தாண்டா அவன ஊரவுட்டே ஓட்னீங்க உப்ப உசிருக்கே ஒலையும்
6
வெச்சுப்போட்டிங்க.சுப்ராயா சனங்க நடக்கற மாதிரி இந்த கொங்குமண்ணிலே நடந்ததே இல்லே. ராசாக் காலத்திலேகூட இந்தகொங்குமண்ணுலே சாதி பிரச்சனை கெடையாது. அதததுக்கு பட்டயமே போட்டுப் போட்டான். ஊட்டுக்கு வெள்ளையடிக்கறது, செத்தாரெண்டுசங்குவைக்கறதுசெருப்புப்போட்டுட்டு ஊருக்குள்ளே வாரதுன்னு இதுக்கெல்லாம்கூட அனுமதி தந்து சாதிப்பிரச்சனை யே வராம இருந்தமண்ணு இந்த மண்ணு. அதுமட்டும் புள்ளப் பெத்தா கொழந்தைய வளக்கறது,குளிப்பாட்டறது,ஏன் புள்ளை அழுதாமுலைப்பால் கொடுக்கறதுகூட அந்தமாதரிபுள்ளைகதான். என்னவோ இப்பத்தான் கீழ்சாதி கீழ்சாதின்னு நெம்பத்தான் ஆட றானுக.
“என்கென்னவோ சத்தியன் செத்துட்டான்னே மனசு ஒப்பமாட் டீங்குது மாமா.”
“பேப்பர்லே போட்டிருக்கானேடா சுப்ராயா.”
“பேப்பர்லே போடறதெல்லாம் நெசமாயிடுமா?”
பஸ் காந்திபுரத்தை நெருங்கியது. மத்தியபஸ் நிலையம் மணி எட்டைக் காட்டி கலகலத்துக்கொண்டிருந்தது.
“மாமா கடையிலே ஏதாவது சாப்புட்டுபோட்டு போலாங்களா? அங்கபாப்பம்பட்டிலே சாப்பிடறதெல்லாம் தோதுபடாது. அதுவுமில் லாம இனி எந்நேரமாகுதோ?”
“எனக்கொண்ணும் வேண்டாம். நீ வேண்ணா சாப்புடு.”
“எனக்கும் ஒண்ணும் வேண்டாம். நீங்க பசிதாங்கமாட்டீங்க. பரவால்லே ரெண்டு பேரும் சாப்புட்டுபோட்டே போலாம் வாங்க.”
இருவரும் எதிரே இருந்த காப்பிக்கடையில் சாப்பிட்டுவிட்டு திரும்பினார்கள். பாப்பம்பட்டி போகிற பஸ் தயாராய்நிக்கவும் அதில் ஏறப்போனார்கள். பஸ் புறப்பட இன்னும் நேரமிருந்தது. பஸ்ஸில கூட்டம்; நிறைய இருந்தது. இளவட்ட பையன்கள்நாலைந்துபேர் பஸ்ஸூக்கு வெளியே நின்று கொண்டு வருகிற போகிறவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
7
பொன்னுகுட்டியும்,சுப்ராயனும்பஸ்ஸில்ஏறமுயன்றார்கள்கூடிநின்ற கும்பலில் ஒருவன்,
“பெரிசு எதுவரைக்கும்?”
“பாப்பம்பட்டிக்குதாங் கண்ணு.”
“ஆரூட்டுக்கு?”
“ஆரூட்டுக்குமில்லே.நேத்துசாயந்திரம் பேப்பர்லே போட்டிருந் துச்சே சத்தியன்னு விசங்குடுச்சு….”
“அடடே பாடிய ராத்திரியே பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போயிட்டாங்க. அவங்க சம்சாரம்கூட ஆஸ்பத்திரிக்குத்தான் போயிருக்கு.ஊர்லேஅவங்களுக்குயாருமில்லே. அங்கபோய் யாரப் பாக்கப்போறீங்க?”
“அடஅப்பிடியா. நல்லதாப் போச்சு. அப்ப பெரியாஸ் பத்திரிக் கே போயிர் லாங்க மாமா.”
“ ம் செரி பெரியாஸ்பத்திரிக்குப் போற பஸ்ஸப் பாரு.”
பெரியாஸ்பத்திரி காலைவேளை சுறுசுறுப் போடு வேக மாய் இயங்கிக் கொண்டிருந்தது. வெள்ளை யுடுப்பில் கையில் ஸ்டெதாஸ்கோப்புடன் கும்பல் கும்பலாய் மருத்துவக்கல்லூரி மாணவமாணவிகள் அரட்டையுடன் போயிக்கொண்டிருந்தனர். ஓவ்வொரு வார்டிலும் நோயாளிகள் வரிசையில் டாக்டர் தரிசனத்திற்குக்காத்திருந்தனர்ஸடச்சர் வண்டி அவ்வப்போது கிறீச் கிறீச் என்ற சத்தத்தோடு போயிக்கொண்டிருந்தது.
பொன்னுகுட்டியும் சுப்ராயனும் எந்த பக்கம் போவது யாரை விசாரிப்பது என்பது தொpயாமல் விழித்துக் கொண்டி ருந்தனர்.
இடதுபுறம் மேல் கோடியில் கூட்டம் அதிகமாயிருந்தது.
“மாமா அங்க பாருங்க அதுதான் சாவுரூம் அஙகதான் பொணத்த அறுப்பாங்க. வாங்க போய் பாக்கலாம்.
அதுவரை மறந்திருந்த துக்கம் மறுபடியும் பீறிக்கொண் டுவர பொன்னுகுடடி தன்னையும் மறந்து,
8
“என்ற ராசா உன்னை இந்தக் கோலத்துல பாக்கவா தவமி ருந்து பெத்தேன்.ராமரப்போல நெனைச் சேனே. இப்படிப் பண்ணிப்போட்டியேடா பாவி.”
-என்று கதறி வாய்விட்டழுதார்;.அவருடைய ஓலம் சுற்றி நின்றவர்களையும் கலங்கச் செய்துவிட்டது.
கூட்டத்தில் யாரோ சுப்ராயனின் தோளைப் பற்றுவது உணர்ந்து திரும்பினார். சுப்ராயன் கண்ட காட்சியில் அதிர்ச்சி யுற்று, “ மாமோய் இங்க திரும்பிப்பாருங்க. இந்த அதிசயத்தை.”
சட்டென்று. திரும்பிய பொன்னுகுட்டி கண்டகாட்சியில் ஆடிப்போனார்.
“அட என்ற ராசா. ஊன்ன செத்துப் போயிட்டானுட்டா னுகளே.”
“ இல்லப்பா நா சாகலே.”
“ அப்ப பேப்பர்லே போட்டது.”
“ அது நம்மூர் அய்யர்மகன் சத்தியநாராயணன்பா. அவனும் பாப்பம்பட்டிலே தான் குடியிருக்கான்.
“அப்ப பட்டியம்மான்னு போட்டிருந்ததே.”
“எம்பொண்டாட்டி பேரு பட்டத்தரசிப்பா.”
“ எப்படியோசாமி எங்கமாமா வேண்டுன சாமிக கையுட லங்கறதே போதுங்க சாமி இனி எவனெதுத்தாலும் செரி எந்த சாதியும் நமக்குத் தேவையுமில்லே. இனி நீங்க பீலிஊர் மண்ணுலேதான் பொழைக்கோணும்.”
என்று உணர்ச்சி பொங்க சுப்ராயான் சொன்னார்.Copyright:thinnai.com 

Sunday June 6, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.