Pages

Sunday, November 14, 2010

ஜெயமங்கள ஆஞசநேயர்


ஜெயம்தரும்ஜெயமங்கள ஆஞ்சநேயர்

கோவை மாவட்ட சிறுமுகைரோட்டில் அமைந்துள்ளதுஇடுகம்பாளையம் என் னும் சிறு குக்கிராமம். சுற்றிலும் வயல் வெளிகள் ஜனநடமாட்டம் என்பதே மிகவும்அரிதானது.ஆனால்ஒவ்வொருமாதமும்தமிழ்மாதமுதல் சனிக்கிழமை

மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். காரணம் இங்குள்ள ஜெயமங்கள ஆஞ்சநேயர் தான்.

இவர் மிகவும் பழமை வாய்ந்தவர் கலியுக சகாப்தம் சாலிவாகன வருஷம் 4404ல் கார்த்திகை மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. என கல்வெட்டு கூறுகிறது. கிருஷணதேவராயர் காலத்தில் ஏராளமான மான்யத்தை பெற்றி ருக்கிறது.

மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த சிறுகோவில் என்றாலும் இதன் கீர்திதி மிக பிரசித்தி பெற்றது. உருவத்திலும் மிகவித்தியாசமானவர். கோவில் மலை யடிவாரத்தில் அமைந் துள்ளது. குன்று போன்ற பாறையில் பின்புறம் லிங்க வடிவிலிருக்கமுன்புறம் ஆஞசநேயராகவடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்தரையடி உயரமும் ஆறடி அகலமும் ஏழடி நீளமுமாக செவ்வக வடிவில் நின்று அருள்புரிகிறார். 24 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர் இவ்வளவு தெய்வீக அம்சங்கள் இருந்தாலும் 25.9.1994வரைநான்கு சுவர்களுக்குள் சிறிய கோவி லுக்குள்தான் இருந்திருக் கிறார். தமிழ்மாத முதல்சனிக்கிழமை விழாக்குழு என்ற அமைப்பு அண்டையகிராமமக்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. இதன்பணிகள் இந்தியமக்களே பாராட்டும் படியாக அமைந்துள்ளது.
இந்த அமைப்பு ஒரு நீணட நெடிய திட்டத்தை வகுத்தது. ஒரு கோடிரூபாய் நிதி திரட்ட ஆலோசனை செய்தது. யாரிடமும் வலிய நன்கொடை வசூலிக் காமல் ஊர் மக்கள் அனைவரும் பங்கு பெறும் உண்டியல் திட்டம் ஒன்றை திட்டமிட்டது.
2
அதன்படி ஒரு வீட்டில் உண்டியல் மூலம் நாள் ஒன்றுக்கு மூன்றுரூபாய் வீதம் ஒருவருடத்துக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டியது என்பதே இப்படி பத்தாண்டுகளில் லட்சக்கணக்கில் ஊர்மக்களே திரட்டி பல கார்யங்களை செய்து முடித்திருக்கின்றனர். இப்போது ஒரு ஏக்கருக்கு கல்ததளம் பிரா காரம் கர்ப்பக்கிரகம் பரம்மாண்டமானகோபுரம் தீபஸ்தம்பம். அர்த்த மண்டபம் ஆகிய வையும் கட்டப்பட்டிருக்கின்றன.

இங்கே பிடி அரிசி திட்டம் என்ற திட்டமும் திறம்பட நடக் கிறது.ஒவ்வொரு வீட்டு சமையலின்போதும் பிடி அரசி எடுத்து வைத்து ஒவ்வொரு மாதமும் கோவிலுக்கு கொடுக்கப் படுகிறது. இப்படிசேகரிக்கப்பட்ட அரிசியின் அளவு முப்பதுக்கும் அதிகமான மூட்டைகளாய் சேருகிறது. தமிழ்மாத முதல் சனிக் கிழமைஅன்று மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.

இந்தநாளில்ராமாயணதொடர்சொற்பொழிவுகள்,கலைநிகழ்ச்சிகள் என ஒவ்வொ ருமாதமும் நடைபெறுகிறது. சுமார்முப்பதாயிரம் மக்கள் பங்குபெறுகின்றனர். மறுநாள் இந்தவிழாக்குழுவி னரே உழவாரப்பணியினை மேற்கொண்டு கோவி லின் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்கின்றனர்.
ஜனநடமாட்டமே இல்லாதஇந்த வனாந்திரத்தில் அத்தனை மக்கள்கூடி இவ ரைவணங்குகின்றனர் என்றால் இந்தஆஞசநேய ரின் மகிமையை சொல் லவும்வேண்டுமோ? ஜெயமங்கள ஆஞசநேயர் என்ற திருநாமம் கொண்ட இவ ரை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி திருமணம் நடைபெறுகிறது. புத்ரபாக்கியம் கிடைக்கிறது செல்வம் செழிக்கும் வியாபாரம் விருத்தியாகும் உத்யோகம் விரைவில் அமையும். பதவியுர்வு கிடைக்கும் எல்லாவளங்களும் வசமாகும்.
3
சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜெயமங்கள அறக்கட்டளை என்ற அமைப்பு நிறுவப்பட்டு வெகுசிறப்பாக பணி கள் நடைபெறுகின்றன
இந்த அறஙக்கட்டளையில் எல்லா ஊர்மக்களும் 200க்கும் அதிகமானவர்கள் அங்கத்தினராக இருந்து செயல்பட்டாலும் இங்குள்ள தலைவர் எம்.எஸ்.ராஜ் குமாரின் பணி அளவிட முடியாதது. நீங்களும் ஒருமுறை வந்துபாருங்கள் நிச்சயம் உங்கள் குறைகள் யாவும் காணாமல்போகும்.
இந்த ஊருக்குசெல்லும் வழி கோவை நகரிலிருந்து மேட்டுப்பாளையம் செல் லும் சாலையில் கரைமடை சென்று, அங்கிருந்து தென்திருப்பதி கோவில் வழியாக சென்று சிறுமுகை செல்லும் பாதையில் இடுகம்பாளையம் செல் லலாம்.ஊர்நடுவே கோவில் அமைந்திருக்கிறது.பஸ்வசதியும் உண்டு கோவை மேட்டுப்பாளையம் பஸ்ஸில் மேட்டுப்பாளையம் சென்று அங்கிருந்து டவுன் பஸ் 10F ல் சென்றால் கோவிலுக்கே செல்லலாம் .

-00000-
இக்கட்டுரை எழுதியவர்
பாரதிதேவராஜ்
219FB மணியக்காரர் நகர்
வேலாண்டிபாளையம்
கோவை 641025
தொலைபேசி 0422 2430635