Pages

Tuesday, December 7, 2010

துரத்துவது யார் சிறுவர் நாவல்


சிறுவர் நாவல்
துரத்துவது யார்?
1
மணி ஏழாகியிருந்து.கிழக்கே சூரியன் மெல்ல எட்டிப் பார்த்தான் கோவை ரயில்நிலையம் கலகலத்துக் கொண்டி ருந்தது. இன்று ஏகப்பட்ட கூட்டம். எழுத்தாளர் கீர்த்தீயனை வரவேற்க ஒரு கும்பல் மாலையோடு காத்திருந்தது. அவர்களில் ஓரமாய் ஒரு சின்னஞ்சிறிய சிறுவனும் வந்திருந்தான். அவன்தான் சுந்தர். சுந்தர் கீர்த்தீயனின்பரமரசிகன்.அவருடைய ஒவ்வொரு கதையும் வெளியாகிற அடுத்த நாள் அக்கதைபற்றி ஒரு சிறு விமர்சனமாய் சுந்தரின் கடிதமாய் அவரை அசரவைக்கும். அதோ ரயில் வச்துவிட்டது. இஞ்சினை அடுத்திருந்து முன்பதிவு செய்யாத சாதாரண பெட்டியிலிருந்து அவர் இறங் கினார். அவரது ரசிகர்கள் மாலை போட்டும் கதர் துண்டு போர்த்தியும் வரவேற்றனர். ஓரமாய் நின்ற சுந்தர், “சார்.நான் சுந்தர் அடிக்கடி கடிதம் எழுதுவேன்” “ ஓ! சுந்தர். வாவா. என்ன அங்கேயே நின்னுட்டே வா இங்கே.” சுந்தர் அவரின் அருகில் வந்து தன் கையிலிருந்த எலுமிச்சங்கனியை அவரிடம் கொடுத்தான்.கூட்டத்தினர் என்ன நினைத்தார்களோ படபட வென கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சுந்தருக்கு வெட்கமாய் போய்விட்டது. கீர்த்தீயன் சுந்தரை நோக்கி ,
“சுந்தர் நா கனகா லாட்ஜ்லே தங்கியிருக்கேன் ஒரு பத்து மணிக்கு நீ அங்க வந்துரு. சாயந்தரம் நாலுமணி வரைக்கும் புல் ப்ரிதான் பிரியா பேசுவோம். எழுத்து வேலை கொஞ்சம் முடிக்கணும் இல்லேன்னா உன்னையும் இப்பவே எங்கூடவே கூட்டிட்டு போயிடுவேன்.உனக்கொண்ணும் வருத்தமில்லையே?” “அதெல்லாம் ஒண்ணுமில்லே சார்”. சுந்தர் சைக்கிளை முன்வாசலில் நிறுத்திவிட்டு, “ அம்மாம்மா இன்னிக்கி கீர்த்தீயன் சாரைப் பார்த்தேன். என்ன உயரமாயிருக்கார் நானே என்னை அறிமுகம் செஞ்சுகிட்டேன். அவர் ரொம்ப சந்தோசப்பட்டார். என்னுடைய கடிதங்களைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோசப் படுவேன்னு சொன்னார்ம்மா!” — பேப்பர் கொண்டுபோகும் ரெக்ஸின் பையை சுவற்று ஆணியில் மாட்டினான் சுந்தர் “ அப்புறம்” “ஏதோதொடர்கதையோட அத்தியாயம் எழுதணுமா. பத்து. மணிக்கு மேலே என்னை வரச்சொல்லிஇருக்கார்..இன்னைக்கு பூரா அவரோடதான் இருப்பேன்.” சுந்தரின் முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்கியது.“ நல்ல புள்ளப்பா. சரிசரி டிபனச் சாப்பிட்டுட்டு எங்கவேணா போ”. என்று சொல்லிவிட்டுஅடுக்களையில் நுழைந்து தட்டெடுத்து வைத்தாள். -ழூழூழூழூழூ- கோமளத்தம்மாவிற்கு சுந்தர் ஒரேபிள்ளை. ரம்யா சுந்தருக்கு மூத்தவள். கோமளத்தம்மாவின் கணவர் கொஞ்ச மும் பொறுப்பில்லாதவர் எப்போதாவது வருவார். கையிலிருக்கும் பணத்தை கொடுத்துவிட்டு போவார். மறுபடி யும் எப்போது திரும்புவார் எனச் சொல்லவே முடியாது, நல்லவேளை குடியிருந்த வீடு சொந்த மாயிருந்தது. ஒரு போர்சன் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் ரம்யா எப்படியோ பள்ளியிறுதிவகுப்பு வரை படித்துவிட்டாள். டைப்புக்குப் போய் பாஸ் செய்திருந்தாள். ஒருதனியார் கம்பெனியில் வேலைக்குப் போகிறாள். சுந்தர் பனிரெண்டு வயது பையனனாலும் படு புத்திசாலி பள்ளிக்கு சென்ற நேரம் போக மீதி நேரத்தில் எதையாவது செய்வான். யாரையோ கேட்டு காலை நேரத்தில் எழுந்துபோய் பேப்பர் போடும் வேலையைத்தேடிக் கொண்டான். அதில் வருவது சொற்ப்பமானாலும் ஒருசின்ன செலவுக் காவது ஈடுகட்டத்தான் செய்தது. சுந்தர்க்குப் படிப்பதில் ஆர்வம். வார,மாதப் பத்திரிக்கை கள் ஒன்றுவிடமாட்டான். இன்று பிரபலமாகி எல்லாப் பத்திரிக் கைளிலும் எழுதி குவித்துவரும் கீர்த்தியன் என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய ஒவ்வொரு கதையும் படித்துவிட்டு அதைப் பற்றி அவருக்குக் கடித மெழுதுவான். நாலைந்து கடிதங்களுக்குப் பின் ஒரு ஒற்றை வரியில் கீர்த்தீயனிடமிருந்து பதில் வரும். அதைப் பார்த்ததும் மிகப் பெரிய விருது கிடைத்தது போல எல்லோரிடமும் காட்டி மகிழ்வான்.ழூழூழூழூழூ “ ஏண்டா இன்னும் ஒரு இட்லிதான்; வைச்சுக்கோயேன்” “ வேண்டாம். வேண்டாம். ”என்றவன். தட்டை தூக்கி கிணற்றடியில் கிடந்த பாத்திரங் களுக்கருகில் வைத்துவிட்டு அவசரமாய்; கையலம்பினான் கனகா லாட்ஜ் வெய்யிலின் அருமை தெரியாமல் குளுமையோடிருந்தது. வரவேற்பறையில் சந்தனக் கீற்றோடு நின்றுகொண்டிருந்தவர். யாருடனோ சுவாரிஸ்யமாய் செல் லில் பேசிக்கொண்டிருந்தார். சுந்தர் நிதானமாய் கவுண்ட்டர் அருகே போய் நின்றான். சுந்தரைக் கண்டதும் அந்த வரவேற்பாளர் “:தம்பி உங்க பேர் சுந்தரா?” “ ஆமா”. “ ம் கீர்த்தீயன் சார் கொஞ்சம் வெளியே போயிருக்கார். அறைசாவிய உங்கிட்ட கொடுக்கச் சொன்னார். ரூம்லே பத்து நிமிஷம் இருக்கச் சொன்னார். இந்தா.ரூம்203 மேலே லெப்ட் சைடுல இருக்கு.” பெரிய ‘கீ’ செயினோடிருந்த சாவியை சுந்தர் கையில் கொடுத்தார். சுந்தருக்கு கொஞ்சம் ஏமாற்றமாயிருந்தாலும் உற்சாகமாய் மாடிப்படிகளில் தாவி203ம் அறையின் கதவை திறந்து உள்ளே போனான். கொசுவலை ஸ்டேண்டில் ஒரு ஈரத்துண்டு தொங்கியது. பேன் வேகமான சுழற்சியில் ஈரத்தை காய வைக்க முயன் றது. ஹாலின் நடுவில் ஒரு டபிள்பெட் சுத்தமாகயிருந்தது. தலைமாட்டிலிருந்த சின்னடீபாயில் நாலைந்து புத்தகங்கள் புதுக்கருக்கோடிருந்தது. ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஜன்னலோரமாயிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு புத்தகத் தைப் பிரித்தான்.ஜன்னல் வழியாக கீழே பார்த்தான். தெருவில் ஒரு மாட்டுவண்டி சலங்கைகள் குலுங்கப் போய்க் கொண்டிருந்தது. டவுன் பஸ் ஒன்றுஅதை முந்தி கொண்டு போனது. நடுத்தெருவில் போயிக் கொண்டிருந்த ஒரு பெரியவர் பயந்து அலறியபடி பிளாட் பாரத்திற்கு ஓடிப்போய் திரும்பிப் பார்த்தார், சுந்தருக்கு சிரிப்பாயிருந்தது. தூரத்தில் பாண்டு வாத்திய சத்தம் கேட்டது. பையனொருவன் நோட்டை கையில் வைத்துக் கொண்டு வீடுவீடாய் போயிக் கொண்டிருந் தான் சுந்தர் இன்னும் நன்றாக எட்டிப்பார்த்தான். பார்வையற்ற உடல் ஊனமுற்ற ஐந்தாறுபேர் பாண்ட் வாத்தியங்களை வாசித்துக்கொண்டு மெல்ல நகர்ந்து கொண் டிருந்தனர்.தெருவில் வருவோர் போவோர் நின்று,நின்று பார்த் துக் கொண்டிருந்தனர். லாட்ஜ்க்கு நேராய் வாத்தியம் வாசிப்போர் வந்தபோது ஜனக்கூட்டம் சற்று அதிகமானது. டிரம்ஸ் வாசித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவன் சட்டென் று கூட்டத்தை விலக்கி லாட்ஜ்க்குள் ஒடிவந்தான் முன்னால் நின்ற வரவேற்பாளரிடம் விசாரித்தவன். மாடிப்படிகளில் சரசர வென்று ஏறினான். சுந்தர் இருந்த அறையில் சட்டென்று புகுந்து கதவை சாத்தினான். அவசர அவசரமாய் டிரம்ஸின் நட்டுகளைக் கழட்டி, கேக் வடியிலிருந்த காகிதம் சுற்றிய ஒரு பொருளை சுந்தரின் கையில் கொடுத்து, “இது பத்திரமாய் ரூமில் எங்கயாவது ஒளிச்சுவை யாருக்கும் தெரியக்கூடாது”. – என்று சொல்லியவன் மறுபடியும் டிரம்ஸ் நட்டுகளை பழையபடி போட்டு முறுக்கிய அதே நேரம் கதவை தட்டும் ஒலி கேட்டது டிரம்ஸை விட்டுவிட்டு பாத்ரூமுக்குள் அந்தபை யன் பாய்ந்து ஓடினான் .சுந்தர் கதவை திறந்தான். மெட்டையடித்த ஒரு கருப்பு மனிதன் மாமிச மலை போல பயங்கரமாய் நின்று கொண்டிருந்தான்.-ழ0ழ-
2 சுந்தர் அந்த பெரிய மாமிச மலைபோன்ற மனித னைக் கண்டதும் பயந்து விக்கிப் போய் நின்றான். “ ஏய் இங்க வந்த பையன் எங்கே?” என்று அலறி னான் பயத்தில் வார்த்தைகள் வாயிக்கு வராமல் பாத்ரூமை நோக்கி பார்வையை வீசினான். அதற்குள் அந்தபையன் டிரவு சரைதூக்கி பட்டன்களை மாட்டியபடி வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் அந்த பயங்கரமனிதன் தன் சிவந்த முட்டைக் கண்கள் உருட்டியபடி, “இங்கே என்னடா பண்ற கேடி ?” கர்ச்சித்தான். அந்த பையனோ கொஞ்சம்கூட பயப்படாமல். “ ஒண்ணுக்கு அவசரமா வந்துடுச்சு போகமலிருக்க முடியலே” –என்று சொல்லிவிட்டு டிரம்ஸை தூக்கி தோளில். மாட்டிக்கொண்டான். “ஓகோ பெரிய துரை லாட்ஜ்ரூம்லேதா ஒண்ணுக்கு போவாரோ.ரோட்டோரமா இருக்க வேண்டியதுதாண்டா. உங்களையெல்லாம் கொண்டாந்துசேத்தரதுக்குள்ளே இருக்குநடநட.”-என்றுபுடனியை பிடித்து தள்ளாத குறையாய் நகர்த்திக்கொண்டு போனான். அவன் நகர்ந்ததும் சுந்தர் மௌ;ளகதவில் எட்டிப் பார்த் தான். குண்டன் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தான். டிரம் ஸை தூக்கிய சிறுவன்டிரவுஸர் பட்டனை சரிசெய்வது போல தயங்கிபடி நின்றான். அவன் தயங்கியதை கண்டதும் மீண்டும் மீன் நழுவி விடக்கூடாதே என்று “ஏண்டா பயலே?” “டிராயர் பட்டன் எட்டமாட்டிங்குதுய்யா”. “எட்டாதுரா”. “எட்டு எட்டு எட்டிருச்சு” என்றவன் சுந்தரைப் பார்த்து “எட்டுமணி” என்று கத்தினான். அதற்குள்அந்த பெரிய ஆள் கீழேஇறங்கியிருந்தான்.மேலும் நிற்காமல்விடுவிடு என அந்த பையனும் இறங்கிப்போய்விட்டான். வாத்திய கோஷ்டிஅதற்குள் கொஞ்சம்தூரம் நகர்ந்து போயிருந்தது. அவர்களோடு அந்தசிறுவனும் அந்த குண்டனும் சேர்ந்துகொண்டனர். சுந்தர் சுற்றும்முற்றும் பார்த்தபடி அறைகதவை தாளிட்டுக்கொண்டு உள்ளே கட்டிலின் மேல் அமர்ந்தான். பயத்தில் நெஞ்செல்லாம் லேசாய் நடுங்குவது போலிருந் தது. பையன் கொடுத்த பொட்டலத்தில் என்ன இருக்கும்,என அறிய ஆவலாயும் இருந்தது. டிரம்ஸிலிருந்து எடுத்தசதுரமான காகிதம் சுற்றிய பொட்டலம் கட்டிலுக்கடியிலிருந்த குப்பை கூடையில் பத்திரமாயிருந்தது. அந்த பொட்டலத்தை எடுக்கக் குனிந்தபோது கூடவே அழைப்பு மணியின் ஒலியும் கேட்டது. சுந்தர் பதறிப்போனான்.அந்த பொட்டலத்தை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் போனான.; எங்கே ஒளிப்பது என்று யோசித்தான்.முகம் பார்க்கும் கண்ணாடிக்குப் பின்னால் ச்சேச்சே கீழே விழுந்து மானத்தை வாங்கலாம்.. அழைப்புமணி மறுபடியும் ஒலித்தது.மேலேஇருந்த வெண்டிலேட்டரைப் பார்த்தான். அதுதான் பத்திரமான இடம் ஆனால் வைப்பது எப்படி? குழாயின் மேல் கையைப்பிடித்து காலையூன்றி கஷ்டப் பட்டு வைத்தாகிவிட்டது. அழைப்புமணி விடாமல்; ஒலித்தது. ஓடிப் போய் கதவைத்திறந்தான். எழுத்தாளர் கீர்த்தீயன் மாலையும் கையுமாய் நின்று கொண்டிருந்தார் அவருடன் கூட ஒருவரும் நின்று கொண்டிருந்தார். “என்ன சுந்தர் இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டிருந்தே?” “பா…பா…பாத்ரூ…” “ பாத்ரூம் போயிருந்தயா? அதற்கு ஏன் இப்படி திணருகிறே முகமெல்லாம் ஒரே வேர்;வையாய் வேர்கிறது “ அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க.” கீர்த்தீயன் உள்ளே வந்தார் மாலையை கோட்ஸ்டேண்டில் மாட்டினார்.சட்டையைகழட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்தார்.கூடவந்தவர் தயங்கி நின்றார். “மிஸ்டர் ராம்ராஜ் நீங்க கூடஇருக்க வேண்டியஅவசிய மில்லை இந்த பையன் இருக்கான் நீங்க வேறேஏதாவது வேலயிருந்தா பாருங்களேன்” என்றதும் அந்த ஆள் சரிங்க என்று கிளம்பினான். சுந்தர் இப்போது சகஜ நிலைக்குத் திரும்பி யிருந்தான் கீர்த்தீயன் அவனைப் பார்த்து சிரித்தபடி, “சுந்தர் நீ ரொம்ப நேரத்திலேயேவந்துட்டயா?” “அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க.சார் கொஞசமின்னாடிதான்வந்தேன்.”அப்போது அழைப்புமணி கேட்டது. சுந்தர் ஓடிப்போய் கதவைதிறந்தான.;ரூம் பையன் இரண்டுகாபியுடன் வந்திருநதான். ஓன்றை தான் எடுத்துக்கொண்டு சுந்தரையும் பருகச்சொன்னார். சுந்தர்க்கு தானும் கீர்த்தீயன் மாதிரி ஒரு பெரிய எழுத் தாளராகி விட வேண்டும் என்று நெடுநாளைய கனவு கண்டு கொண்டிருந்தான் வழிதான் புலப்படவில்லை.இன்று அவரையே கேட்டுவிடவேண்டியதுதான் என்று, “ஐயா நானும் உங்கள மாதிரி ஒரு எழுத்தாளராகனும்னு ஆசை. அதுக்கு என்ன வழின்னு நீங்க சொல்லணும.;”; அதைக் கேட்டதும் பலமாய் ஓரு முறைசிரித்துக் கொண்டு , “இது சாத்தியம்தான் ஆனால் பொறுமையோடு கொஞ்சம் போராடவேணும். தினசரி எதையாவது எழுதவேணும் எழுதுவ தை எல்லா பத்திரிக்கைகளுக்கும் மாற்றி மாற்றிஅனுப்பவேணும் கதை திரும்பி வருகிறதே என்று சோர்ந்து போகாமல் சலிக்காமல் ஒருவருஷம் எழுது. அடுத்தவருஷம் என்னமாதிரி என்பதை நீயே புரிஞ்சுக்க முடியும் இவ்வளவுதான்.” என்றதும் ஒரு மாபெரும் வித்தையை கற்றுக் கொண்ட சுந்தரின் மனது ஒரேயடியாய் துள்ளியது அப்போதுஒட்டடைக் குச்சி யோடு ஒட்டடைஅடிப்பவன் அறையுள் நுழைந்து பாத்ருமை திறந்தான் வெண்டி லேட்டர் ஓரமாய் ஏராளமாய் ஒட்டடைகள் தொங்கின.
-ழ0ழ-
3 ஒட்டடைக்குச்சி யுடன் பாத்ரூமுக்குள் நுழைந்த அந்தாள்அந்த பக்கமும் இந்த பக்கமும் வீசினான். சுந்தர் மனசு பூராவும் வெண்டிலேட்டர் மேலிருந்தபொட்ட லத்திலேயே இருந்தது. எங்கே கீழே விழுந்து விடுமோ என்று மிகவும் பரிதவித்தான். அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே அந்த பக்கம் பார்வையை திருப்பினான். வெள்ளை நிற பேண்ட் சர்ட்டுடன் சிவப்புநிற கோடு போட்ட டை கட்டியவா உள்ளே நுழைந்து, “மன்னிக்கணும் சார்” என்றவர் பாத்ரூமில் நுழைந்து, “ஏய் மாரப்பா இந்தரூமுக்கு ஒட்டடை அடிக்க வேண்டாம். அவர் போன பின்னாடி அடிச்சுக்கலாம்ன்னு காலையிலேயே சொன்னேன் காதில் ஏரலையா. போய்யா வெளியே.” ஓட்டடைக்குச்சியுடன் நின்றவன் கண்கள்சிவக்க திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே போனனான் வெளியே வந்த வெள்ளை உடுப்புக்காரர், “தண்ணி போட்டிருக்காம் போலிருக்கு. எத்தனை எசான்னாலும் இந்த ஜென்மங்களுக்கு ஏறதில்லே சாரிசார்”. “அதனாலே ஒண்ணுமில்லே எனக்கு தூசுபட்டாஅலர்ஜி பிரித்திங் டிரபிள் வரும் அதா வேண்டான்னு காலையிலேயே சொன்னேன். நீங்க புரிஞ்சுகிட்டீங்க.. அவனுக்கு புரியல்லே. புரியற மாதிரி நீங்க சொல்லியிருக்கணும்.” என்று சொன்னார் கீர்த்தீயன் சுந்தரின் வயிற்றில் பாலை வார்த்தார் போலிருந்தது.ழூழூழூழூழூ ஊருக்கு வெளியே ஒரு பழங்கால கட்டிடம். ஒரு பெரிய அரண்மனை மாதிரி தோற்றமளித்தது. கொஞ்சம் பாழ டைந்த மாதிரியும் தென்பட்டது. வெள்ளையடித்து பல வருடங்களாயிருந்தது போல காட்சியளித்தது. பக்கத்தில் மேற்குதொடர்ச்சி மலை அழகா யிருந்தது. வருஷமுழுக்க லேசான மழை எப்போதும் பெய்து கொண்டே யிருக்கும். ஈரம் பட்டுபட்டு சுவரெல்லாம் லேசாய் பச்சை பசேலென்று பாசி படிந்திருந்தது. விட்டைச்சுற்றி அழ கான பூஞ்செடிகள் ரம்யமாயிருந்தது. காரை பெயர்ந்த காம் பவுண்ட்.கேட்டருகே சிறியதாய் ஒரு பெயர்பலகை உடலூன முற்றோர் இல்லம் என்று அழிந்து போன எழுத்துகளில் தெரிந்தது. மாலை வெய்யில் லேசாய் மங்கிக் கொண்டிருந்தது. இருள்வேகமாய் சூழ்ந்து கொண்டிருந்தது. ஊருக்குள்நன்கொடைவசூலிக்கச்சென்றஉடல்ஊன முற்ற வத்தியகோஷ்டி அப்போதுதான் சோர்ந்து போய் திரும்பியிருந்தது. இவர்களை மேய்த்து வர உடன் சென்ற மாமிச மலை போன்ற மனிதன் ‘தஸ்புஸ்’ என்று ஹாலிலிருந்த ஷோபாவில் சாய்ந்தான். “டேய் பரட்டை அந்த பெரிய சொம்பு நிறைய ஐஸ்வாட்டர் கொண்டாடா”. என்று பங்களா வே அதிர்கிற மாதிரி கத்தினான். உடல்ஊனமுற்ற சிறுவர்கள் மாடியிலிருந்த ஒரு அறைக்கு போய் உட்கார்ந்தனர். பகல்முழுக்க பசியோடு நடந்த களைப்பில் அசந்து போய் காலை நீட்டி சிலர்படுக்க முயன்றனர் ஒல்லியாய் கழுகுபார்வையுடன் பார்த்தவன் , “டோய் பிசாத்துகளா வயித்துக்கு ஏதாச்சும் கொட்டிட்டு கெடத்துங்கடா. இந்நேரத்துக் கென்னடா படுக்கை பாஸ் வந்தாமுதுகுபிஞசுடும் தெரியுமில்லே.” என்று மிரட்டினான். பரட்டை என்று அழைக்கப்பட்டவன் கிட்ட தட்ட குடம் சைசிலிருந்த ஒரு பாத்திரம் நிறைய ஐஸ்வாட்டரை ஷோபாவிலிருந்தவனிடம், கொடுக்க, அதை ஒரே வாயில் தொப்பை நெஞ்செல்லாம் நனைய மூச்சுவிடாமல் குடித்துவிட்டு, ‘ஏவ்’ –என்று ஏப்பத்தைவிட்டான். அதே வேளையில் – கார் ஒன்று பங்களாமுன் நின்றது. ஆறரை அடியுயரத்தில் ஆஜானுபாகுவாய் முருக்கிய மீசையோடு ஒரு நாற்பது வயது மதிக்கத் தக்கவர். இறங்கி பங்களாவிற்குள் நுழைந்து கொண்டே, “என்ன குப்பு ஏப்பமெல்லாம் பலமாயிருக்கு?.” “அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க பாஸ்.” “என்ன நம்மஐட்டங்கெல்லாம் என்ன செய்யுது” “சாப்பாடாயிடுச்சாம்.” “போட்டுட்டுடானிக்கே கொடுத்துட வேண்டியது தானே என்ன தயக்கம்”. “இதோ ஆச்சுங்க.” தொடர்ந்து சமையலறையில் பாத்திரங்கள் உரு ளும் ஓசை கேட்டது. ஏதோ பேருக்கு சாப்பாடு என்ற ஒன்றை போட் டார்கள் வேறு வழியில்லாத அந்த அனாதைச் சிறுவர் கள் வாரிவாரி சாப்பிட்டார்கள். கடைசியில் உட்கார்ந் திருந்தகுட்டையான சிறுவன் மட்டும்; சாப்பிடாமல் சாப்பிடு வதாக பாவனை பண்ணிக்கொண்டி ருந்தான.; சமையலாள் ஏமாந்த சமயம் பார்த்து சாப்பாட்டை இருளில் வீசிவிட்டான் சாப்பிட்டு முடிந்ததும் எல்லாருக்கும்.படுக்கை தயாராயிருந்தது. மறுபடியும் சமையலாள் பால் நிறத் தில் ஒருதிரவத்தை வைத்துக்கொண்டு, “டேய் பசங்களா எல்லோரும் டானிக் மாத்தி ரைய வாயிலே போட்டுட்டு பால வாங்கிக்குடிங்கடா” எனறார் எல்லோரும் சொன்னபடியே மாத்திரையை வாங்கிவாயில் போட்டுக் கொண்டு பாலை குடித்த மறுவினாடி எல்லோரும் மயக்கத்தில் ஆழ்ந்திருந் தனர் “எல்லா ஐட்டங்களும் சாஞ்சாச்சா” என்றார்பாஸ்.மொட்டை குப்பு “ ஆச்சுங்க” என்றான் இந்த குரல் கேட்டதும் கடைசியில் படுத்திருந்த சிறுவன் மட்டும் தலைகாணியை குறுக்கே வைத்துப் போர்த்திவிட்டு மெல்ல ஊர்ந்து அவர்களுடையநடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கினான்.-ழ0ழ-
4 கடைசியாய் படுத்திருந்த சிறுவன் ஒருதல காணியை குறுக்காக வைத்து போர்வையை போர்த்திவிட்டு இருட்டில் மெல்ல ஊர்ந்துவந்து கீழே என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருந்தான். “ என்ன குப்பு சரக்கெல்லாம் சரியாயிருக்குமா? “எந்த மிஸ்டேக்குமில்லே. சரியா இருக்குங்க.” “எதுக்கும் எடுத்துட்டுவா ஒருவாட்டி செக் பண்ணிடலாம்.” நான்கு டிரம்ஸ்களையும் ஒருபுல்லாங்குழல் ஒரு டிரம்பட் டையும் பவ்யமாய் கொண்டுவந்து வைத்தார்கள் அடியாட்கள் டிரம்ஸ் நட்டுகளை திருகி பிரித்தார்கள் எல்லாவற்றி லும் குறிப்பிட்ட சதுர காகிதம் சுற்றிய கேக் போன்ற பொருள் இருந்தது. மேலே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு ‘திக்,திக்’ என்று நெஞ்சு துடித்தது. பாஸ் பொட்டலங்களில் ஒன்றைப்பிரித்தார். சாக்லெட் சைஸில் மஞ்சள் நிற தங்கக்கட்டிகள் ஜிலுஜிலு என ஜொலித்தன. “ம் சரியாத்தான் இருக்கும் போலிருக்கு நம்ம மூணு பேரைத்தவிர விஷயம் யாருக்கும் தெரியாது. நாளைக்கு காலையிலே வேன் வரும். வழக்கப்படி ஐட்டங்களை ஏத்தி கேரளாபாடர்தாண்டிநம்மகெஸ்ட்ஹவஸிலே இறக்கிடுங்க.மிச்சத்தை ராஜப்பன் பாத்துப்பான். காரியம் முடியறவரைக்கும் ரொம்ப எச்சரிக்கையாயிருக்கணும் தூங்கி றாதிங்க. ஜாக்கிறதை. “ . என்று சொல்லிவிட்டு காரை கிளப்பிக் கொண்டு பறந்தார் பாஸ். வெய்யில் உடலை சுடுகிற அளவிற்கு நன்றாக தூங்கியிருந்தனர் குண்டுகுப்பு தன்முட்டைக் கண்களை கசக் கிக் கொண்டு எழுந்த போது மணி எட்டாகியிருந்தது. மோசம் போய்விட்டோம் என்று பரபரப்புடன் செயல் பட்டான். பின்கட்டுக்குப் போன போது டிபன் தயாராகி ஆறிக் கொண்டிருந்தது. சமையல்கார சண்முகம் கொல்லைப் புறத்திலிருந்த கிணற்றில் தண்ணீரை வாளியில் இரைத்து மடேர் மடேரென்று ஊற்றிக் கொண்டிருந்தான். “என்ன சம்முகம் எல்லா ரெடியா? இந்த பிசாசுகளோட பகல் முழுக்க அலைஞசதுலே அசதியாயிருந்தது. நல்லா தூங்கிட்டேன்”என்றபடி பக்கத்து வேப்பமரத்தில் ஒரு குச்சியை முறித்து பல்லை விளக்க ஆரம்பித்தான் ஈரத்தலையை துண்டால் துவட்டிக்கொண்டு மாடிக்குப் போனவன் பதறி யடித்துக்கொண்டு கொல்லைக்குஓடிவந்தான் “சம்முகம் சம்முகம் மோசம் போயிட்டோம்” “ என்னப்பா சொல்றே.” “அந்த கடைசிலே படுத்திட்டுரப்பானே பொடியன.;…” “குமார்பயலா காணோமா எங்கயாவது ஒண்ணுக்கான போயிருப்பாம்பா.” “அவங்கூடபெரியபேஜருப்பாநேத்துகூட திடீர்னுகாணாம போயிட்டான் தேடிப்புடிச்சேன் பாருப்பா.” காய்ந்த வேட்டியை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு “எங்கே நா ஒரு வாட்டி பாத்திட்டுவர்றேன்”. என்று மாடிப்படி களில் தாவிஏறினார். முகத்தில் ஒரு பீதி தோன்ற , “அட நெசமாவே காணம்பா. எல்லாஇடத்திலேயும் பாரு.”இருவரும் மாறி மாறி பங்களா முழுக்கத்தேடினார்கள்.ம்ஹ_ம்காணவேயில்லை. இருவரும் கையை பிசைந்தபடி நின்றனர்செய்வறியாது திகைத்தனர் “என்னப்பா இது பாஸ_க்கு என்ன பதில் சொல்றது. நீ குளிக்கறதுக்கு முன்னாடி யிருந்தானா?” “படுத்துட்டிருந்தமாதிரி தா இருந்தது. எல்லா பயல் களும் ராத்திரி கொடுத்த தூக்க மாத்திரைனாலே தலை யொரு பக்கம் காலொருபக்கமா தூங்கறானுக இவம் மட்டும் நேரா போத்திட்டிருக்கானேன்னு சந்தேகப்பட்டு விலக்கிப்பாத் தேன். வெறும் தலகாணிய வச்சுட்டு பைய கம்பி நீட்டிட்டான்போலிருக்கு.” “இப்படி சொன்னா எப்படி ஒம்பது மணிக்கு வேன் வந்துருமே. இரு நா பைக் கெடுத்துட்டு போய் ஒரு நடை பாத்துட்டு வந்துர்றேன் பாஸ் கேட்டா விவரத்தை சொல்லு.” -என்று குப்பு சொல்லியபடி உடுப்புகளை மாற்றிக்கொண்டு திண்ணையில் சுவரோரமாய் சாத்தி வைத்திருந்த பைக்கை உசுப்பி கிளப்பினான் ழூழூழூழூழூ குமார் என்ற ஊனமுற்ற சின்னஞ்சிறிய பையன் படு விவரமானவன். அவனுக்கும் பதினொரு வயதுதான் ஆகிறது. நல்ல சிவந்த நிறத்தை உடையவன். கொஞ்சம் குட்டையானவன் ஒரு கையும் காலும் கொஞ்சம் சூப்பை.அவ் வளவே. எதையும் ஆராய்வதில் படுசுட்டி. ஊடல்ஊனமுற்றவர்களை ஆதரிக்கிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டுபத்துபன்னிரண்டு சிறுவர்களை வைத் துக்கொண்டு மிகப்பெரிய கடத்தல் வேலையில் ஈடுபட்டு வந்தான்.இதையறிந்த குமார் தேசத் துரோகச் செயலுக்கு தண்டனை வாங்கித்தர தயாரானான் தனக்கு தேவையான பணத்தை அன்றாட வசூலில் கொஞ்ம் திருட்டுத்தனமாய் சேகரித்துக் கொண்டான.;. இன்னும் சில முஸ்திப்புகளை செய்துகொண்டான். முந்தைய தினம் இரவு பாஸ் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியதும் குமார் தனக்கு கொடுக்கப்பட்ட மாத் திரையை குண்டுகுப்புவுக்கு கொடுக்க இருந்த பாலில் யாருக்கும் தெரியாமல் போடடுவிட்டு பின்பக்க வழியாக மெல்ல கிளம்பி மெயின் ரோட்டை அடைந்து ஒரு ஆட்டோவில் ஏறி நேராய் கனகா லாட்ஜூக்குள் போனபோது மணி சரியாய் எட்டடித்தது. விடுவிடுவென மாடிப்படிகளில் ஏறி 203 ம் நம்பர் அறையை அடைந்த போது ரூமுக்கு வெளியே பெரிய பூட்டென்று தொங்கியது. குமாருக்குஏமாற்றமாயிருந்நது.அந்தபக்கமாய் போன ரூம் பையனிடம் விசாரித்த போது எழுத்தாளர் எட்டறைக்கு மணி ரயிலுக்குப் போவதால் ஏழுமணிக்கே ரூமை காலி செய்துவிட் டார்கள் என்று சொன்னான். காரியம் எல்லாமே கெட்டுப் போனதால் திகைத்துப் போய் செய்வதறியாமல் நின்றான். -ழ0ழ-5கனகா லாட்ஜின் 203ம் அறை முன்பாய் திகைத்துப் போன குமார் செய்வதறியாமல் நின்றான்.பூட்டை ஒருமுறை ஆட்டிப் பார்த்தான். என்ன ஆச்சர்யம் பாட்லாக்கிலிருந்து ஏதோ ஒருகாகிதத் துண்டு கிழே விழுந்தது. அவசரமாய் எடுத்துப் பிரித்துப் பார்த்தான் ஏதோ சினிமா விளம்பர நோட்டிஸ் ‘ச்சே’ என்று மனம் குமைந்தான் விசய மில்லாமல் இதைச் செருகுவானேன். மறுபடியும் அந்த காகிதத்தை பார்த்தபோது இரண்டு இடங்களில் அடிக்கோடுஇட்டிருந்ததைக் கண்டான். கண்கள் பிரகாசமாயின. மறுபடியும் ஒருமுறை பார்த்தான்.கிருபாதியேட்டர். 10.30காட்சி இரண்டு வார்த்தைகளும் அடிக் கோடிடப்பட்டிருந்தன.மறுபடியும் வெளியே வந்து ஆட்டோ ஒன்றை நிறுத்தி ஏறிக் கொண்டான். ழூழூழூழூழூஒட்டடைக்குச்சிக் காரனும் ஓட்டல் மேனேஜரும் ரூமை விட்டு வெளியேறினதும் சுந்நருக்கு மறுபடியும் போன உயிர் திரும்பி யது. சிறிது நேரத்தில் இரண்டு படத்தயாரிப்பாளர்கள் கீர்த்தீ யனைப் பார்க்க உள்ளே வந்தனர்.கீர்த்தீயனோடு அடுத்தபடத் திற்காக கதை கேட்டு பேசிக்கொண்டிருந்தார்கள் இதுதான்சமயம் என்று சுந்தர்பாத்ரூமுக்குள் நுழைந்துமறுபடியும் பைப்பை கையில்பிடித்து எம்பி ஏறி வெண்டிலேட் டர் மேல் ஏறி பொட்டலத்தை எடுத்து பாக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்டான். கீழே இறங்கி மறுபடியும் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தபோது கீர்த்தீயன் மீண்டும் எங்கோ புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார். சுந்தரைப் பார்த்ததும், “சுந்தர் இப்ப கொஞசநேரத்திலே சாயந்திரம் விழா நடத்தறவரோட வீட்லே விருந்து சாப்பிட போகணும். நீயும் எங்கூடவா.” என்றார்.சுந்தரால் மறுக்க முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் சொன்னபடியே ஒரு கார் ஒன்று வந்து நின்றது. கீர்த்தீயனோடு காலையில் வந்தவரே இப்போ தும் வந்திருந்தார். கார் அவர்களை சுமந்தபடி நகரைவிட்டு வெகுதூரம் அப்பாலுள்ள ஒருகிராமத்திற்குள் நுழைந்தது. கிராமத்தின் நடு நாயகமாய் நின்ற அந்த பெரிய வீட்டின் முன்பாய் நின்றது. ஒரு பெரியவரும் அவருடைய மனைவியும் வரவேற்றார்கள். விருந்து முடிந்துஅவர்கள் அவர்கள் பேசிக்கொண்டிருந் தார்கள் மணி மூன்றானதும் மறுபடியும் காரில் ஏறி விழா நடக்கும் இடத்திற்கு வந்தது விழா நடந்துகொண்டிருந்தது. சுந்தருக்கு எதிலுமே கவனம் செல்லவில்லை. அந்த பொட்டலத்தில் ஏதோ கன மான பொருள் இருப்பதாய் மட்டும் உணரமுடிந்ததே ஒழிய என்ன எனப்பார்க்க முடியவில்லை. தன்னுடன் தநது சென்ற சிறுவன் யாரென்று தெரிய வில்லை.தன்னிடத்தில் அவன் ஏன் கொடுக்க வேண்டும். எதேச்சையாய் கொடுத்தானா அல்லது தெரிந்துதான் கொடுத்தானா? அவனை எப்படி சந்திப்பது? எட்டுமணி என்று மட்டும் சொன்னான் ஒருவேளை சந்திக்கமுடியாமல் போனால்?-என்பன போன்ற கேள்விகள் சுந்தரின் மனதை துரத்தின எது வும் புரியாமல் போனாலும் ஏதோ ஒரு நல்லதை நோக்கி செல்லும் பாதையிலேயே செல்கிறோம் என்பது மட்டும் தெளி வாகியிருந்தது. விழா முடிந்தபோது மணி ஆறே முக்காலாகியிருந்தது.கீர்த்தீயன் ரொம்பவும் அவசரப்பட்டார். லாட்ஜூக்கு சென்றதும் ரூமை காலி செய்து கொண்டு எட்டுமணிக்குள் ரயில்நிலையம் சென்றுவிடவேண்டும் என்பதிலே குறியாயிருந்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையைதவிர்க்கமுடியவில்லை.அப்போதுதான் அந்த விளம்பர நோட்டிஸ் கண்ணில்பட்டது. உடனடியாக எடுத்து பாக்கெட்டிலிருந்த பேனாவால் இரண்டு வார்த்தைகளை அடிக்கோடிட்டு பத்திரப் படுத்திக்கொண்டான்.கீர்த்தீயனின் சூட்கேஸ் மற்ற சாமான்களை எடுத்துக்கொண்டு ரூமைகாலி செய்தனர்.வெளியேவந்து படிக்கட்டுகளில் இறங்கி நாலைந்துபடிகள் இறங்கியபின்னர் எதையோ மறந்தவன் போல சுந்தர் மறுபடியும் படிகட்டுகளில் தாவி ஏறினான். பூட் டை ஆட்டிப்பார்ப்பவன் போல அடிக்கோடிட்டு பத்திரப்படுத்திய அந்த காகிதத்தை பூட்டின்பின்புறமாய் செருகி வைத்தான். கீர்த்தீயனை அனுப்பிவிட்டு எப்படியாவது தியேட்டரின் முன்பாக சந்திப்போம் என்று தீர்மானித்துக் கொண்டான். கார் ரயில்நிலையத்தை யடைய இன்னும் ஒரு ஐம்பத டிகளே மீத மிருந்தன. வலதுபுறம் திரும்பசிக்னல்காட்டியபடி திரும்ப தெற்கேயிருந்து படுவேகமாய் வந்த லாரி கார் மீது மோதி விபத்தை உண்டாக்கியது. கார் அப்பளமாய் நொறுங் கியது ..-ழ0ழ-6 மணி எட்டாகியிருந்தது. சுந்தரின் வீட்டு முன்பாக அந்த கார் நின்றது. கோமளத்தம்மாவும் ரம்யாவும் பதறியபடி வெளியே வந்தனர். “ இதுதானே சுந்தர் வீடு.” காரில் வந்த பெரியவர்.. “ ஆமா. சுந்தர் இல்லையே”. இருவரும் பயந்தபடி. “ பயப்படாதிங்க. ஒண்ணுமில்லே. நீங்க ரெண்டு பேரும் உடனே புறப்படுங்க.சுந்தருக்கு கால்லே லேசா அடி. ஆஸ்பத் திரிலே சேத்திருக்கோம்.” ஓன்றும் செய்வதறியாமல் காரில் ஏறினர். அடுத்த சில மணித்துளிகளில் ஆஸ்பத்திரி முன்பாககார்நின்றது.இருவரும் பதறியபடி அவரை பின்பற்றிப் போனார்கள். சுந்தர் கை கால்களில் பெரிய கட்டு போட்டிருந்தனர் கண்களை முடிய நிலையில்மயக்கமாய் படுத்திருந்தான் சுந்தர். கோமளத்தம்மா ஆஸ்பத்திரி என்று கூடபாராமல், “ என் மகனே சுந்தர் உனக்கென்னப்பா ஆச்சு” என்று அழுது கதறினாள்.. அதற்குள் நர்சுகள் இரண்டுபேர் வந்து “ அம்மா நீங்க அழாதிங்க. பயப்படும்படியா ஏதுமில்லே எல்லா சாதாரண காயங்க தான். விபத்துநடந்ததாலே மயக்க மா யிருக்கான். அவ்வளவுதான். சீக்கிரம் முழிப்பாயிடும். பயப் படாம இருங்க.” என்று ஆறுதல் கூறினார்கள். அவனுக்குப் பக்கத்தில் கீர்த்தீயன் நெற்றிகாயங்களோடு படுத்திருந்தார். வுpழா ஏற்பாடு செய்தவர் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். சுந்தருக்கு லேசாய் மயக்கம் தெளிந்திருந்தது. கண் விழித்துப் பார்த்தான். அவன் அம்மா அக்கா எல்லோருமிருந்தார்கள். மெல்ல தலையை அசைத்தான். பேசமுயறற்சித்தான். சிரமமாக தெரிய வில்லை. “அம்மா இப்ப மணிஎன்ன?” என்றான். “ஏம்பா மணிக்கு என்ன?” “இல்லம்மா மணி என்னன்னு சொல்லு?” “ மணி பத்தாச்சுப்பா.” என்றதும் “ அம்மா யாராச்சும் ஒருத்தர கிருபா தியேட்டருக்கு அனுப்புங்கம்மா.” “எதுக்கு?” – என்று கோமளத்தம்மா கேட்ட அதே நேரததில், “அவசியமில்லைசுந்தர்.”-என்று குமார் நொண்டியபடி முன்னே வந்து நின்றான். “என்ன சுந்தர்னா கூப்பிட்டே?” “ஆமா சுந்தர்னு கூப்பிட்டேன.;” “என்னை உனக்கு முன்னேயே தெரியுமா?” “உன்னைத்தெரியாட்டாலும் உங்கப்பாவ எனக்குத் தெரியும்.” என்று சொன்னகுமார் சுந்தரின் அம்மாவைப் பார்த்தான் “ ஆமா சுந்தர். நீ இன்னிக்குக் காலையிலே சாப்பிட்டுபோனதும் வாத்திய கோஷ்டியோடு இந்த பிள்ளையாண்டான் நம்ம வீட்டுக்கு வந்து உன்ன விசாரிச்சான். உங்கப்பா சொல்லி யனுப்பிச்சதா சொன்னான். நான்தான் நீ லாட்ஜூக்கு போன விசயத்தை சொன்னேன்.”-என்றுசொன்னதைக் கேட்ட சுந்தர், “அதுசரி நான் அடிபட்டதும்,இந்த ஆஸ்பத்திரிக்கு வந்ததும் எப்படி தெரிஞ்சது?” “ விபத்துநடந்த இடத்திலே நான் அங்கேதான் இருந்தேன். கூடவே ஆஸ்பத்திரிவந்து அட்மிட் பண்ணிட்டு உங்க வீட்டுக்குப் போய் தகவல் சொல்லி அவங்கள கூட்டிட்டு வந்ததும் நான்தான்” பேசிக்கொண்டிருந்த போதே போலிஸ் இன்ஸ்பெக்டர் ரெண்டு கான்ஸ்டெபிள்களோடுஉள்ளே வந்தார்.சுந்தர் அப்போதுதான் கால்சட்டைப்பையைத் தொட்டுப்;பார்த்தான் .பகீரென்றது .பொட்டலத்தைக்காணவில்லை. குமார் பேசத்தொடங்கினான், “ சார் ஊருக்கு வெளியே மார்க்கபந்து என்பவர் உடல் ஊனமுற்றவர் இல்லம்னு ஒண்ணு வச்சிருக்கிறார் ஆனா உண்மையிலே அவர்அது உடல் ஊனமுற்றவர் இல்லமாக இல்லாம கடத்தல்கூடாரமா பண்ணிட்டிருக்கார். இத நேரடியா போலிஸ_க்குத் தகவல் சொன்னா மிச்சமுள்ளவங்க உசாராவதோட கடத்தல் பொருளும் முழுசா கைக்கு கிடைக்காம போகலாம். அந்த வீட்லே சமையல்செய்யற சண்முகம் சுந்தரோட அப்பா. அவருடைய உதவியால்தான் இந்த தங்கக்கட்டியுள்ள பொட்லத்தை நீங்க நம்பரதுக்கொசரம் கொண்டாந்தேன். நாளைக்கு ஒரு கடத்தல் நடக்கயிருக்கு.நா அங்கே போய் சேர்ந்துடுவேன்.கூடியமட்டும் அவங்க புறப்படறத தாமஸப் படுத்த முயற்சிக்கிறேன் அதுக்குள் நீங்கவந்திடலாம்-ழ0ழ-7 மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது குண்டு குப்பு விரக்தியோடு உள்ளே வந்து சுவற்றோரமாய் பைக்கை நிறுத்தினான். நல்லவேளை இன்னமும் பாஸ் வரவில்லை “என்ன சண்முகம் அந்தபையல காணலையே என்ன பண்றது.” “அடே போப்பா நம்ம ரெண்டுபேரையும் ஏமாத்திட்டாம்பா. அவன் அங்கேயேதான் படுத்திட்டிருக்கான். நம்மள ஏமாத்தறதுக்கோசரம் அப்படி பண்ணிபோட்டு பக்கத்திலேயேதான் படுத்திட்டிருந்திருக்கான். நாமதான் கவனிக்கலே.” குப்பு உற்சாகமாய் உள்ளே ஓடிப்போய் பார்த்தான். சண்முகம் சொன்னது நிஜம்தான் குமார் அதேயிடத்தில்தான் கிடந்தான்.கோபத்தில் குப்பு எல்லா பையன்களையும் ஒரு தட்டுதட்டி எழுப்பினான் சிறுவர்கள் அனைவரும் கிணற்றடிக்குச் சென்று தொட்டி யிலிருந்த தண்ணிரை வாரிவாரி ஊற்றிக்கொண்டனர். அவர்கள் உள்ளே வருகையில் டிபன் தயாராயிருந்தது.எல்லோரும் தட்டை எடுத்துவந்து உட்கார்ந்தனர்.சமையல்கார சண்முகம் எல்லோருக்கும் டிபனைப் போட்டார். “எல்லோரும் ஒழுங்கா சாப்பிட்டுகங்கடா. மத்தியானம் சாப்பிட எந்நேரமாகுதோ?” கார் சத்தம் கேட்டது. பாஸ் வந்துவிட்டார்.குப்புவும், சண்முகமும் உஷாரானார்கள். குண்டுகுப்பு ஷெட்டிலிருந்த வேனை கிளப்பி போர்டிகோவில் நிறுத்தினான். குமாருக்கு மனசெல்லாம் திக்திக் என்று அடித்துக்கொண்டது. வாத்தியங்களோடு சிறுவர்களையும் வேனில் ஏற்றினார்.காரை ஸ்டார்ட்செய்து முன்னே கிளப்ப பின்னால் வேனும் புறப்படத் தயாரானது. சிர்ரென்று போலிஸ் ஜீப் வந்து நின்றது. அவ்வளவு தான் அடுத்தசில வினாடிகளில் பாஸ் என்கிற மார்க்கபந்துவும் வாத்தியங்களிலிருந்த தங்கக்கட்டிகளும் போலிஸ் ஜீப் பில் பயணம் செய்தன. அந்த ஆண்டு வீரசாகஸ விருதிற்காக குமார்சிறுவனின்பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.
சுபம்

No comments:

Post a Comment