Pages

Tuesday, December 7, 2010

ஒரு பக்கக் கதைகள்

ஒரு பக்கக் கதை
திவ்யாவிற்கு என்ன ஆயிற்று?
ராகவனுக்கு திருமணமாகி ஆறுமாதங்கள்தான் ஆகிறது. கோவையில் கம்ப்யு+ட்டர் கம்பெனியில் சர்விஸ்இஞசினியர்வேலை. அவனும் அவன்மனைவிதிவ்யா அவன்அம்மாவும் மட்டுமான சிறுகுடும்பம். திவ்யா கம்ப்யு+ட்டர் க்ளாசுக்குப் போகிறாள். பதி னோருமணி முதல் பன்னிரண்டுமணிவரைதான். இன்று அவ்வளவாக சர்விஸ் இல்லை. புது மனைவியோடு ஜாலியாயிருக்க சீக்கிரமே வீட்டிற்கு வந்துவிட்டான்.என்ன பயன். மணி மூன்றாகிறது இன்னமும் வரக்காணோம். இந்த ஊhpல் அவளுக்கு யாரையும் தொpயாது. அப்படியிருக்க எங்கே போயிருப்பாளோ? “ஏப்பா ராகவா மணி மூணாகுது சாப்பிடுப்பா”. “ நீ வேறே கொஞசம் சும்மாயிரும்மா. டென்சன் பண்ணாதே.”-அம்மாவேறே அவனதுபிரைவசியில் நந்தி மாதிரி. “சார் போஸ்ட்”-என்று ஒருகார்டை விட்டெறிந்துவிட்டுப் போனார் தபால்காரர். அதை எடுத்துப் பார்த்தான் அவனது தங்கை கீதா வியாழக்கிழமை மதுரையிலிருந்து எழுதியது. ஏதோ இன்டர்வ்யுவுக்கு திங்கட்கிழமை 12 மணிக்கு வருவதாய் எழுதியிருக்கிறாள். நான்கு நாட்கழிந்து வந்து சேர்ந்திருக்கிறது. வாசலில் ஆட்டோ சத்தம். திவ்யாவும் தங்கை கீதாவும் இறங்கினார்கள். “என்ன அண்ணா எப்படியிருக்கே. அம்மா நீ எப்படியிருக்கே உடம்புக்கெல் லாம் பரவாயில்லையா?” “யிருக்கு.” “ஏம்மா ஒரு நால் நாள் முன்னாடியேலெட்டர் போட்டிருக்கக்கூடாது.அதுசரி உங்க அண்ணிய எப்படி புடிச்சே?” “கம்ப்யு+ட்டர் சென்டருக்கு முன்னாடிதான் வெளியு+ர் பஸ் ஸ்டாப். இறங்கினதும் அண்ணி நின்னாங்க டைமில்லாத தாலே அவசரமா ஆட்டோ புடிச்சு இன்டர்வ்யூக்கு போயிட்டோம்.” “அதுசரிஒரு போனாவது பண்ணியிருக்கலாம். சரிசாப்பிடலாம் வாங்க.” 00000
இரவு. படுக்கையறை. திவ்யா பால் செம்போடு உள்ளே வந்தாள். ராகவன் உர்ரென்று உட்கார்ந்திருந்தான். “ஐயாவுக்கு இன்னும் கோபம் தீரலேயா”. “எப்படி தீரும் நீ எங்கபோனயோ. எப்படி பதட்டமாயிடுச்சு தொpயுமா?” “ ஏங்க கல்யாணமாயி ஆறுமாசந்தா ஆச்சு நமக்குள்ளே. இந்த ஆறு மாச பழக்கத்துக்கே இப்படி பதறறீங்களே உங்கள பெத்து இருபத்தஞ்சு வருசம் வளத் தாங்கN;ள நாவந்தவுடனேஉதாசீனப்படுத்தறீங்க. ஹோம்லே கொண்டுபோய் சேர்க்கணும்ங் கறீங்க இதுஎப்படி நியாயமாகும்.?” அந்த வார்த்தையில் ராகவன் ஆடிப்போனான். அப்படி ஒரு கோணத்தில் அவன் நினைக்காததை நினைத்து வெட்கி தலைகுனிந்தான்.
பழைய வாத்தியார்
“என்னாங்க. உங்க பழையவாத்தியாராம். ஹால்லே உட்காரவச்சிருக்கேன் அவரோட பையனுக்கு இங்க கிண்டிலே வேலை கிடைச்சிருக்காம். உங்களப்பாத்துட்டு போலாமேன்னு வந்தேங்கிறார். சும்மாவா பாக்க வந்திருப்பார். ஆயிரத்தே கொடு, ரெண்டா யிரத்தக் கொடுன்னு பணங்கேக்கத்தான் வந்திருப்பார்ன்னு நெனைக்கிறேன் கொஞசம் உஷாரா இருங்க. ஏமாந்து ஈன்னு பல்லக் காட்டிட்டு பணத்தைத்தூக்கி கொடுத்திராதிங்க. பாத்து நடந்துக்கங்க. “சாpசாp நீ காப்பிக்கான ஏற்பாடு செய் போ.” ஹாலுக்குள் நுழைந்த போது பழைய அழுக்கு சட்டையுடன் உட்கார்ந் திருந்தார் வாத்தியார் பழனி. சங்கரைக் கண்டதும் எழுந்து நின்று வணக்கம் கூறினார். “சார் நீங்க உட்காருங்க.எவ்வளவு பொpயவங்க.என்னைப்பாத்து நிக்கலாமா.” “அதில்லப்பா.” என்று தயங்கினார். “எப்ப சென்னை வந்தீங்க?” “சென்னைக்கு வந்து நாலுநாள் ஆச்சு. பாபுவுக்கு வேலைகிடைச்சிருக்கு. அவன் சென்னைக்கு வந்ததேயில்லை. யாரையும் தொpயாது. நாலுநாள் இருந்து எல்லாம் சொல்லிக்கொடுத்துட்டு போயிர்லாம்னு இருந்தேன் அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன்.” “ரொம்ப நன்றி சார் டிபன்சாப்பிடலாமே.” “பரவாயில்லேப்பா. எனக்கு ஒரு உதவி கேட்க தயக்மாயிருக்கு.” “சும்மா சொல்லுங்க.” “பையனுக்கு ஹாஸ்டல்லே இடங்கிடச்சிருக்கு ரெண்டாயிரருபா டெபாசிட் கட்டணுமாம். நீதான் உதவிபண்ணணும் ஊருக்குப் போனவுடனே பணம் அனுப்பி வச்சிட றேன்.” அப்போது சங்கரின் மனைவி காப்பியை கொண்டுவந்து டீபாயில் “ணங்”கென்று வைத்துவிட்டு, “ஏன் சார் எங்களுக்கென்ன பணம் கொட்டியா கெடக்கு வர்ரவங்களுக்கெல்லாம் தூக்கிக் கொடுக்க. நீங்க வேறே எங்கயாவது டிரை பண்ணுங்க.” -முகத்திறைந்த மாதிhp சொன்னாள். வுhத்தியார் ஆடிப்போய்விட்டார். ஓன்றும் பேசாமல் எழுந்து கொண்டார். வுhசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சங்கர் வீட்டிற்குள் நுழைந்தான்.உடையை மாற்றிக் கொண்டு ஆபிஸூக்குக் கிளம்பத் தயாரானான். டேபிள் மேல் பழைய டிக்ஸ்னாp புத்தகம் இருந்தது. “ ச்சே அந்தகாலத்திலே இந்த வாத்தியார்தான் இந்த புத்தகத்தைக் கொடுத் தார். திருப்பி கொடுத்திருக்கலாம்.” சங்கர் பஸ் ஸ்டாப்பருகே சென்றபோது இன்னமும் வாத்தியார் நின்று கொண் டிருந்தார். பஸ்ஸூம் வரவில்லை. “சார் எம்பொண்டாட்டி ஒருமாதிhp. தயவுசெஞ்சு நீங்க என்னை மன்னிக்கணும். நீங்க கொடுத்த புஸ்தகம். எனக்கு ஆபிஸூக்கு டைமாச்சு நான் வர்றேன்.”என்றுகிளம்பி னான.; கையில் வாங்கிய புத்தகத்தை பிhpத்தபோது அதில் இரண்டு ஆயிரரூபாய் தாள்கள் இருந்தன.வேறுவழியிலலை. ரோசப்பட முடியாது. ஊருக்குப் போனவுடன அனுப்பிவிடலாம். 00000
ஒரு பக்கக் கதை
ஸிரியா செய்தது சரியா?
ஸிரியா இப்படி செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அவருக்கு என்ன குறைச்சல் பதினான்கு வருடங்களாக ஒரே மாதிரி இளமை குன்றாமல் நடித்துவருகிறாரே.
ஆண்களில பெரிய நாயகர்களுக்கு நிகராய் பெண்திலகமாய் பேரெடுத்திருக்கிறார்.உண்மையில் எல்லோரும் எதிர்பார்த்தது.இவர்களில்யாரை யாவதுதான் மணந்து கொள்ளப் போகிறார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அன்று காலை விடிவதற்கு முன்பாகவே எல்லாப் பத்திரிக்கைகளும் நடிகை ஸிரியா பிரபாகுமாரை மணக்கிறார் என்று எட்டுகால தலைப்பாக பல பல வண்ணங்களில் வெளியிட்டது.
மாலையில் மிகப்பெரிய ஓடடலில் வரவேற்பு. பிரமுகர்கள் அனை வரும் சூழ்ந்திருக்க துணிச்சலாய் ஒரு நிருபர் அந்தக் கேள்வியைக் கேட்டார். “மேடம் இவ்வளவு உச்சியில் உள்ள நீங்கள் ஏன் செகண்ட ஹீரோவாகவே பல படங்கள்ல நடிச்சுட்டிருக்கற பிரபாகுமாரை தேர்ந்தெடுத் தீங்க.?”-கொஞ்சமும்; தயங்காமல் நடிகைஸிரியா, “உங்கள் கேள்வியிலே பதிலிருக்கு. இன்னமும் புகழ் உச்சியை தக்க வைத்துக் கொள்ளத்தான் எனக்கு சமமான புகழில் உள்ள எவரை நான் மணந்தாலும் ஒன்று அவர் புகழ்குறைய அவர்காரணமாகலாம்.இப்போது அந்த பேச்சுக்கே இடமில்லை.” -என்றார் எல்லோரும் வாயைடைத்துப் போய் பாசந்தியை ஒருகை
ஒரு பக்கக் கதை
அட நீ என்னம்மா?
அழைப்புமணி ஒலித்தது. ஜன்னலைத் திறந்து பார்த்தாள் பத்மா வாசலில் வேலைக் கார பொன்னி நின்று கொண்டிருந்தாள் கையில் ஜவுளிக்கடை பை வேறு. இந்நேரத்திற்கு எதற்கு வந்திருக்கிறாள். ஏதாவது கடன்கான கேட்பாள். தூக்கத்தை வேறு கெடுத்துவிட்டாள். சரிஎன்ன என்று பார்ப்போம். கதவைத்திறந்தாள். “என்ன பொன்னி?” “அது வந்துங்க” என்று இழுத்தாள். உள்ளே டெலிபோன் மணி ஒலித்தது.. “கொஞ்சம் இரு பொன்னி போன் வேறே.” போய் ரிசீவரை எடுத்து “ஹலோ” சொன்னாள். மறுமுனையில் மகளிர் சபா செயலாளர் லதாம்மா. “சொல்லுங்க லதா”. “இநத வருஷ கோலப்போட்டிலேயும் டென்னிஸ்லேயும் நீங்கதான் வின் பண்ணியிருக் கீங்க.” “அப்படியா ரொம்ப சந்தோசம். பங்சன் எப்ப வச்சிருக்கீங்க.” “வர்ற ஞாயித்துக்கிழமை வசச்சிருக்கோம். உங்க சார்புலே டொனேசன் பணம் ஆயிர ரூபாய் கொடுக்கறதா சொல்லியிருக்கீங்க. இப்ப வர்லாமான்னு பிரசிடணட் கேக்றாங்க.” “அப்படியா வாங்களேன்;. பணம் ரெடியா எடுத்துவச்சிருக்கேன்;.” ரிசீவரை வைத்தாள். நிமிர்ந்தபோது ஹாலில் பொன்னி பராக் பார்த்துக்கொண்டிருந்தாள். மாசக்கடைசி கடன் கேட்டுத் தான் வந்திருப்பாள். “என்ன பொன்னி மத்தியான வெய்யில்னுகூட பாக்காம இவ்வளவு தூரம் வந்திருக்கே.அவரும் ஊர்லே இல்லே. மாசக்கடைசி. கைலே காசேயில்லே கடன்;கான கேட்றாதம்மா.” என்றாள் பத்மா மிடுக்காய் . “அடநீ என்னம்மா எனக்கு கடனெல்லாம் ஒண்ணும் வேண்டாம்; நீதான் துணியெல்லாம் தைக்கறேன் யாராவது ஜாக்கெட் தெக்கணும்னா வாங்கிக்கொடுன்னெயே. பக்கத்து வீட்டு மாமி ரெண்டு ஜாக்கெட் தெக்கணும்னாங்க.அதான் வாங்கிடடு வந்தேன் தெச்சுத்தருவியா இல்லே.” பத்மாவிற்கு முகத்திலறைந்தாற் போலிருந்தது. 00000
கணக்கில் வராத கட்டித் தங்கம்
சொக்கலிங்கம் கடைவீதிக்குள் ஸ்கூட்டரை நுழைத்ததுமே மூலக்கடைமுருகன் கடையில் ரைடுக்கு ஆள் வந்திருப்பதாய் ஜாடை காட்டினான். அப்படியே திரும்பி விடலாமா என ஒருகணம் யோசித்தபின் அதுசாpயில்லை என்று கொஞ்சமும் தயங்காமல் தன் நகைக்கடை முன் ஸ்கூட்டரை நிறுத்தினார். கடைசிப்பந்திகள் செய்வ தறியாது கையை பிசைந்தபடி நின்றிருந்நனர். சுங்க இலாகா அதிகாரிகள் நாலைந்து பேர் கடையை சல்லிக்க தயாராகிக் கொண்டிருந்தனர். சொக்கலிங்கம் அவர்களை நோக்கி கை கூப்பியபடி, “வாங்க சார் இதோ ஒரு நிமிஷம்” என்;றபடி கடை வேலையாள் சிவாவை ஜாடை காட்டி வரச்சொன்னார். “வண்டியை ஸ்டேண்டில் போட்டுட்டு வா.” என்று சொல்லிவிட்டு தன் சூட்கேஸூடன் கடைக்குள் நுழைந்தார். அதிகாரிகள் சட்டென சூட்கேஸை பிடுங்கி சோதித்தனர். தங்கம்.,வைரம்,பவளம், முத்து என சூட்கேஸிலிருந்து எடுத்து டேபிள் மேல் வைத்தனர். சொக்கலிங்கம் கொஞ்சமும் பதட்டப்படாமல், “கிருஷ்ணா அந்த லெட்ஜர் பில்புக்,எல்லாம் எடுத்துக்காட்டு.”என்றார். கிருஷ்ணன் என்பவர். அநதக் கடை அலுவலர். லெட்ஜர் பில்புக்,எல்லாம எடுத்து வைத்தார். எல்லாவற்றிற்கும் சாpயான கணக்கு இருந்தது. சுங்க இலாகா தலைமை அதிகாரிக்கு மனசுக்குள் ஒரே போராட்டம். இன்பார்மர் கொடுத்த தகவல் பொய்யாகாதே சரி பார்ப்போம் என்றபடி ஸாரி சொல்லி விட்டு கிளம்பினார்கள். அடுத்த வினாடி சொக்கலிங்கம், “டேய் சிவா முதல்லே போய் வண்டிய எடுத்துட்டுவா. நல்லவேளை எந்த சந்தேகமும் வரலே. பத்து நிமிஷத்திலே நேரம் கெட்டிருந்தா இருபதுலட்சம் தங்கம் அபேஸ்.ஆயிருக்கும். கிருஷ்ணா பார்ட்டி லாட்ஜிலே வெய்ட்பண்ணிட்டிருப்பான் சீக்கிரமா வந்து வாங்கிட்டு போகச் சொல்லு..” அடுத்தபதினைந்தாவது நிமிடம் இருபதுலட்சரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டி பார்ட்டிக்கு மாறிக் கொண்டிருந்தது வாசலில் சுங்க இலாகா அதிகாhp ஒருவர், “சாரி சார் கூலிங் கிளாஸ மறந்திட்டு போயிட்டேன்.” என்றபடி கடைக்குள் நுழைந்தார்.கடையில் இருந்தவர்கள் ஒன்றும் செய்யமுடியாமல் தவித்து போய் நின்றனர். அடுத்த சில நிமிடங்களில் அரசு ஜீப் மீண்டும் கடைமுன் நின்றதும் அடுத்த சில வினாடிகளில் கணக்கில் வராத இருபதுலட்சரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் அரசுக்கு சொந்தமாகி ஜீப்பில் பயணித்தது. ஜிப்பில் அதிகாரிகள் கசமுசவென பேசியபடி சென்றனர். தலைமை அதிகாரி “மிஸ்டர் பிரகாஷ் எப்படி உங்களுக்கு சந்தேகம் வந்தது?” “ சார் அந்த சொக்கலிங்கம் ஸ்கூட்டர் எப்பவும் கடைமுன்னாடிதான் நிறுத்துவார். நாம இந்த பக்கம் நகராததற்கு முன்னாடியே ஸ்டேண்டிலிருந்து வண்டிய எடுத்துட்டு வரச்சொன்னார் கூடவே அந்தகிருஷ்ணன்ங்கற கடைவேலையாள வெளியே அனுப்புச்சார் நா பாத்ரூம் போற மாதிரி எதிரே இருந்த டாய்லெட்டுக்குப் போய் வெண்டிலேட்டர் வழியா கவனிச்சேன்.நா சந்தேகப்பட்டது சரியாய் போச்சு.”

வேண்டாம் ப்ளீஸ்
வீடு வித்தியாசமான அமைதியில் இருந்தது. ரகுவுக்குஆச்சர்யமாயிருந்தது. ஹாலில் கனகா சோபாவில் அமர்ந்தபடி புடவையைப் போர்த்தி குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். “ என்ன கனகு வீட்லே ஒருத்தரையும் காணோம்?” “அடடே உங்களுக்கு தெரியாதா மடத்தில சாமியார் வந்திருக்காராம். அம்மாவும் அப்பாவும் நேர்லே பாத்து விஷயத்தைச் சொல்லி ஆசீர்வாதம் வாங்கிட்டு வரப்போயிருக்கா!” “தெரிஞ்சிருந்தா நா கூட போயிருப்பேன். ஒரே டென்சன் இந்த சின்னச்சிறுக்கி வந்து என்ன பாடுபடுத்தறா கழுதை.” - என்று குழந்தையின்; கன்னத்தை தட்டுவது போல செல்லமாய ஒருதட்டு தட்டினான் சட்டென்று விரித்த கண்களோடு ஒரு கோபப்பார்வையை வீசிய கனகா, “ஏன்னா. உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? குழந்தைக்கு பொறைகான ஏறியிருந்தா?” “சரி டியர் சரிஎன் செல்ல நாயை ஒருதட்டு தட்டலாம்னு நெனைச்சேன் கை தவறி பட்டுடுத்து.” “படும் படும் சரிசரி போன காரியத்தை சொல்லவே யில்லையே?” “ நேரா ராஜவீதி அண்ணாவீட்டுக்கு சொல்லிட்டு, சுப்ரிவீதி மாமாவீட்டுக்கும் பக்கத்தில பஜனைசந்து பத்மா வீட்டுக்கும் உங்க தாத்தாவுக்கும் சொல்லிட்டு பு+மார்கெட்லே பஸ்ஸேறி வந்து சேந்துட்டேன்..போதுமா?” வாசலில் பு+க்கூடையில் தொங்கிய மாலையை கையில் ஏந்தியபடிபட்டுப்புடவை சரசரக்க அம்மாவும் வெற்றுடம்போடு துண்டைப்போத்தியபடி அப்பாவும் வந்தார்கள் “என்னம்மா சாமியாரப் பாத்தீங்களா?” “ ம் ஆசிர;வதம் பண்ணி மாலைகூட போட்டார். என்னடா எல்லார்வீட்டுக்ககும் போனயா?” “ம் எல்லார் வீட்டுக்கும் சொல்லியாச்சு.” அம்மாவும் அப்பாவும் உள்அறைக்குள் போனார்கள். “ஏய் இன்னமும் தடிமாடு பாலக்குடிக்கறது போதும் நட ருமுக்கு போவோம்” “ஏன்தான் இப்படி கரிச்சு கொட்றீங்களோ?” என்றவளாய் தூங்கிப்போன குழந்தையை தோளில் சாத்திக் கொண்டு “நடங்க” குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்தாள் கட்டிலில் சாய்ந்தபடி ரகு “என்ன குழந்தைக்கு உங்கம்மா பேரா இல்லை எங்கம்மா பேரா?” ‘வேண்டாங்க” “ ஏன்” “ஏனாம் நீங்க பாட்டுக்கு செல்லமா கூப்படரேன்னு கழுத,தடிமாடு,நாயேன்னு போரோடு சேத்தது கூப்பிடுவீங்க கேக்வங்க மனசு சங்கடப்படும் அதான்” ரகு திகைத்துப்போய்நின்றான் -00000-
ஒரு பக்கக் கதை
நித்தம் ஒரு புத்தம் புது
ரமேஷின் கார் போர்ட்டிகோவில் நிற்கவும. துள்ளிக் குதித்து ஓடிவந்து கதவை திறந்துவிட்டாள் பர்சனல் செகரட்ரி சுனிதா .ரமேஷிடம் பிரிவ்கேஸை வாங்கிக் கொண்டாள். சுனிதா மாடர்ன் கேள். எப்போதும் மாடர்ன் டிரஸைத்தான் விரும்புவாள்.ஆபிஸ் ஸ்டாப் அத்தனைபோpன் கவனத்தையும் ஈர்ப்பாள். ரமேஷ் மிகவும் விரும்பினான்.அவளை திருமணம் செய்து கொள்ளவும் தயாரானான்..அவனின் அம்மாவிடம் அனுமதி கேட்டான். அவள் சொன்ன நிபந்தனையை ஏற்றுக்கொள்வாளோ என்னவோ என்று பயந்தபடி சுனிதாவிடம் சொன்னான் “சுனிதா அம்மா கொஞசம் பழமை விரும்பி. நீ மாடர்ன்டிரஸ் போடறது பிடிக்காது. ஆனா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாங்க ஒரு பத்துநாள் மட்டும் புடவை கட்டினா போதும். அப்புறம் ஆபிஸ் வரும்போது பழையபடி மாடர்னா வர்லாம். அதுஎதாச்சும் சொல்லி சமாளிச்சுக்கலாம் என்ன சொல்றே?” “ நீங்க சொன்னா மறுக்கவா போறேன் உங்க இஷ்டம்.” கல்யாணம் தடபுடலாய் நடந்தது. உறவினர் விருந்து, கோவில்குளம் என்று பத்து நாளும் சுனிதா பட்டுப் புடவையில் விதவிதமாய் வலம் வந்தாள். இதுகூட சூப்பர்தான். மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டும் இன்றிலிருந்து மறுபடியும் மாடர்ன்டிரஸ் தான்; என்று எதிர் பார்த்தவனுக்கு ஏமாற்றம் தந்தது. விலையுயர்ந்த காஞசிப்பட்டில் சுனிதா ஏறினாள். “ ஏம்மா ஆபிஸ் போறோம் மாடர்ன்டிரஸிலே வர்லையா?” “ இல்லைங்க இனிமே நாளும் பட்டுப் புடவையிலதான் வருவேன். மாடர்ன்டிரஸில எல்லோரும் ஒரு கீழ்தரமாய்தான் பார்ப்பார்கள். ஆனால் பட்டுப்புடவையில் எல்லோரும் எப்பவும் மாpயாதையாய்; பார்ப்பதுடன் மதிப்பாகவும் நடந்துகொள்கிறார்கள்.” _என்றுசொன்ன வார்த்தைகளைக் கேட்டு ரமேஷ் வாயடைத்துப்போனான் -00000-
ஒரு பக்கக் கதை
சாமிப் புஷ்பம்
வௌ்ளிக்கிழமை. “என்னங்க பு+க்காரன் வருவான்,பு+வாங்குங்க.” வாசலில் நின்ற என்னிடம்மனைவி மாலா சொன்னாள். தெருவில் பு+க்காரன் வந்து கொண்டிருந்தான். எதிர் வீட்டில் புதிதாய் ஒரு பு+க்காரி பு+ கொடுத்துக் கொண்டிருந்தாள்.. என் வீட்டுக்கும் வந்து, “பு+ வேணுங்களா?” என்று கேட்டாள்.. “ சாமி பு+ கொடம்மா “ என்றேன். “ பு+ தீந்து போச்சுங்களே.மல்லிப்பு+ வாங்கிக்கங்க” என்றாள் “ வேண்டாம்.” எனறு சொல்லிவிட்டு எப்போதும் வாங்குகிற பு+க்காராpடமே, “ சாமி பு+ கொடுங்க” என்றேன். “ பு+ இருக்கு ஆனா தரமாட்டேன்.” “ஏன்” “பின்ன என்ன சார் எப்பவும் எங்கிட்டதான்வாங்கீட்டிருந்தீங்க. இன்னிக் கென்ன புதுசா ஒரு பு+க்காரி வந்தா அவகிட்ட வாங்கறீங்க. நல்லவேளை அவகிட்ட பு+ இல்ல.” “எவ்வளவு நல்லஎண்ணம் தப்புப்பா. நீ மாத்திரம் வியாபாரம் பண்ண ணுன்னு நினைகறதே தப்பு. எல்லாரும்தானே பொழைக்கணும். நீ என்ன சும்மா வா கொடுக்கறே?” “இல்லே சார் இனிமே இந்த வீதிக்கே வரமாட்டேன்.” “ரொம்ப சந்தோசம் நீவராட்டி இன்னொண்ணு. பரவாயில்லே சாமிக்கு பு+ கிடையாது அவ்வளவுதானே.” தெருவில் ஆட்டோ வந்து நின்றது. மகளும் மருமகளும் இறங்கினார் கள். மாப்பிள்ளை கையில் ஒருபந்து மல்லிப்பு+ பாலித்தின் கவாpல் சிரித்தது.
ஒரு பக்கக் கதை
உங்களைப் பார்த்துவிட்டு போனதால்…
மணி ஒன்றுக்கு மேல் ஆகியிருந்தது. அலுவலகம் சென்றவர்கள் மதிய உணவிற் காக திரும்பிக் கொண்டிருந்தனர் பன்னென்டு மணிக்கு படுத்தவன் ஒரு நல்ல தூக் கம் தூங்கி எழுந்தாயிற்று. hpடையர்டுலைப் இப்படித்தான் என்ஜாய் பண்ணணும். பதினோரு மணிக்கு மாடி வீட்டுக்குப் போன மனைவி சுபா இன்னும் திரும்பவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. தானே போட்டு சாப்பிட வேண்டியதுதான் சாப்பாட்டை குக்காpலிருந்து எடுத்தபோது சுபா உள்ளே வந்தாள். “ஏங்க காலையிலே மாடி வீட்டுக்காரர் ஆபிஸ் புறப்படும்போது நீங்க போய் பேப்பர் கேட்டிங்களா?” “ஆமா அதுக்கென்ன?” “அவர் ஓட்டிட்டுப் போனகார் ஏக்ஸிடண்ட்டாயிடுச்சாம்..” “அவருக்கென்னாச்சு?” “அவருக்கொண்ணும் ஆகல. பின்னாடி வந்த லாரிக்காரன் இடுச்சு கண்ணாடி யெல்லாம் நொறுங்கிடுச்சாம்.. நம்ம காம்பவுண்டே உங்களப் பாத்துட்டுப்போனதால் தான்; ஏக்ஸிடண்ட் ஆச்சுங்கறாங்க. எம் மானமே போச்சு அதப்பத்தித்தான் இந்நேரம் பேசிட் டிருந்தோம். உங்களுக்கேங்க இப்படி புத்தி போகுது. அஞசு ரூபா போட்டா பேப்பர் வீட்டுக்கே வந்து போடறான்.. இப்ப பாருங்க.” “அப்படியா. அவருக்கு ஏற்கனவே நேரஞ்சரியில்லை. விபத்துவரலாம்ன்னு முந்தா நேத்து வந்த ஜோசியர் சொல்லி எசசரிச்சார். என்னை பாத்துட்டு போனதாலேதான் அவருக்கு ஒண்ணு மாகலே. கார்மட்டும்தானே டேமேஜ் ஆயிடுச்சு..” வெளியில் நின்ற காம்பவுண்ட் வாசிகள் வாயை பிளந்தனர்.
-
ஆடம்பரம்
” இங்கே பாரு அகிலா பெண்ணு பாக்க வர்றவங்க எப்படியோ என்னவோ? ஆடம்பரமே வேண்டாம். சுpம்பிளாயிருந்தா போதும். சாpயா?” அகிலாவுக்கு பக்கென்று ஆனது. அம்மா எப்பவும் நமக்கு நேர் எதிர்பதம்தான். மாலை நான்கு மணிக்கு டாண்ணென்று மாப்பிள்ளை வீட்டார் காhpல் வந்து இறங்கினர். மாப்பிள்ளை மாப்பிள்ளையின் அப்பா அம்மா அக்கா அக்கா குழந்தை என்று சிம்பிளாகத்தான் வந்திருந்தனர் அவரின் அம்மாவும் அக்காவும் படுமேக்கப் அகலமான ஜரிகை பட்டு கழுத்து நிறைய நகைகள். அகிலாவுக்கு தூக்கிவாhpப் போட்டது. அவள் அம்மாவோ எதுவும் நடக்காததுபோல சமையலறைக்குள் நுழைந்தாள். மாப்பிள்ளையின் அம்மாவும் அக்காவும் ஒருவரை ஒருவா; பார்த்துக் கொண்டு, ” என்ன காலேஜ் படிச்சவளாட்டமா இருக்கா. இவ்வளவு சிம்பிளா யிருக்காளே?” என முணுமுணுத்தனர். அகிலாவின் காதில் லேசாய்விழ அவள் மனசுள் சட்டென் றுரைக்க தனது பர்சனல் ஆல்பத்தை அவர்களிடம் கொடுத்தாள். காபி டிபனெல்லாம் ஆயிற்று. அகிலாவுக்கு நெஞ்சுள் திக்திக் கென்றுஅடித்துக்கொண்டது. அவர்களுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றுதான் சொல்வார்கள் என நினைத்தாள். ”சம்பந்தி ரொம்ப சிம்பிள் போலயிருக்கு. பொண்ணையும் அப்படியே காட்டணும்னுநெனச்சிருக்காங்க. ஆனா பொண்ணு எங்கள மாதிரிதான்னு புரிஞ்சகிட்டோம். எல்லாம் எங்க வீட்டுக்கு வந்தா சரியாயிடும்.” அவர்களுக்கு பிடித்து விட்டது என்பதை நாசுக்காக சொல்லிவிட்டு புறப்பட்டனர். அகிலா ஆல்பத்தை ஒருமுறை புரட்டினாள் எல்லாவற்றிலும் புல்மேக்கப். அவள் நினைத்தது நிறைவேறிவிட்டது. -00000-

No comments:

Post a Comment